Thursday, 19 December 2013

அந்தா வாறார் ஐயப்பா, இந்தா வாறார் ஐயப்பா, ஐந்து மலை தான் கடந்து ஓடி வாறார் ஐயப்பா,.........

அந்தா வாறார் ஐயப்பா, இந்தா வாறார் ஐயப்பா,
ஐந்து மலை தான் கடந்து ஓடி வாறார் ஐயப்பா,
(அந்தா வாறார்)
சன்னதி விட்டிறங்கி வாறாரையா ஐய்யப்பா
பதிணெட்டாம் படியிறங்கி பார்க்க வாறார் ஐய்யப்பா.
(அந்தா வாறார்)
சரங்குத்தியாழை தாண்டி சாஸ்தா வாறார் பாரப்பா,
சக்தி உமை பாலனாக காட்சி தாறார் ஐய்யப்பா..
(அந்தா வாறார்)
சபரியின் பீடம் விட்டு தாண்டி வாறார் ஐய்யப்பா,
சாந்தஸ்வரூவனாக காட்சி தாறார் ஐய்யப்பா,
(அந்தா வாறார்)
நீலிமலை தான் கடந்து நேரே வாறார் பாரப்பா,
நித்திய பிரம்மச்சாரியாக காட்சி தாறார் ஐய்யப்பா
(அந்தா வாறார்)
பம்பா நதி தாண்டி பார்க்க வாறார் ஐய்யப்பா,
பம்பையின் பாலனாக காட்சி தாரார் ஐய்யப்பா,
(அந்தா வாறார்)
கரிமலை உச்சி தாண்டி ஓடி வாறார் ஐய்யப்பா,
காவலுக்கு கருப்பணையே கூட்டி வாறார் ஐய்யப்பா
(அந்தா வாறார்)
அழுதாமலை தாண்டி ஓடி வாறார் ஐய்யப்பா,
அழுதை மலை உச்சியிலே கட்சிதாரார் ஐய்யப்பா,
(அந்தா வாறார்)
காலைகட்டி தான் கடந்து ஓடி வாரார் ஐய்யப்பா
காந்தமலை ஜோதியாக காட்சி தாரார் ஐய்யப்பா
(அந்தா வாறார்)
எரிமேலி பேட்டை துள்ளி இங்கே வாரார் ஐய்யப்பா
ஏகாந்த வாசனாக கட்சிதாரார் ஐய்யப்பா
(அந்தா வாறார்)
பந்தளத்து தேசம் விட்டு பார்க்க வாறார் ஐய்யப்பா
பக்தனுக்கு பக்தனாக காட்சி தரார் ஐய்யப்பா
(அந்தா வாறார்)
குளத்துப்புழை தான் கடந்து கூடி வாரார் ஐய்யப்பா
குழந்தையில் பாலனாக காட்சி தாரார் ஐய்யப்பா..
(அந்தா வாறார்)
அச்சங்கோயில் தான் கடந்து அந்தா வாரார் பாரப்பா,
அரசனாக அருளோடு காட்சி தாரார் ஐய்யப்பா.
(அந்தா வாறார்)

ஆரியங்காவு தாங்கடந்து ஓடிவாரார் ஐய்யப்பா,
ஆனந்த ரூபனாக கட்சி தாரார் ஐய்யப்பா..
(அந்தா வாறார்)

19 comments:

  1. 🙏🙏🙏 சூப்பர் 🙏🙏🙏

    ReplyDelete
  2. வன்புலிவகனனேஎங்கள்மணிகன்டனேவா

    ReplyDelete
  3. அஞ்சுமலை அழகா😍

    ReplyDelete
  4. சாமி சரணம்

    ReplyDelete
  5. Saranam ayyappa nee varanum

    ReplyDelete
  6. தனசேகர்

    ReplyDelete
  7. Oom swamiyee saranam ayyappaaa🙏🙏🙏🙏

    ReplyDelete
  8. ஓம் சாமியே சரணம் ஐயப்பா

    ReplyDelete
  9. சுவாமியே,,,,,,,,சரணம் ஐயப்பா

    ReplyDelete

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer