Thursday 19 December 2013

தன்னானே நானே அவர் ஐயப்பா சாமி, தில்லே லேல்லோ அவர் சண்முக சாமி,

தன்னானே நானே அவர் ஐயப்பா சாமி,
தில்லே லேல்லோ அவர் சண்முக சாமி,
சபரியிலே இருப்பவராம் ஐயப்பா சாமி,
பழனியிலே இருப்பவராம் சண்முக சாமி,
(தன்னானே)
ஐந்துமலை அழகனாம் ஐயப்பா சாமி,
ஆறு படை வீடு கொண்ட சண்முக சாமி,
(தன்னானே)
வேங்கை புலி ஏறி வந்த ஐயப்பா சாமி,
அழகு மயில் அமர்ந்து வந்த சண்முக சாமி,
(தன்னானே)
கார்த்திகையில மாலை போடும் ஐயப்பா சாமி,
தை பூசம் கொண்டாடும் சண்முக சாமி, - போடு
(தன்னானே) போடு
நீல ஆடை அணிபராம் ஐயப்பா சாமி,
காவி ஆடை அணிபவராம் சண்முக சாமி,
(தன்னானே)
நெய்யபிஷேக பிரியனாம் - ஐயப்பா சாமி,
பஞ்சாமிரித்த பிரியனாம் சண்முக சாமி,
 (தன்னானே)
இருமுடியை சுமப்பவராம் ஐயப்பா சாமி,
காவடியை சுமப்பவராம் சண்முக சாமி,
(தன்னானே)
துறவறத்தை பூண்டவராம் ஐயப்பா சாமி,
இரு தாரம் கொண்டவராம் சண்முக சாமி,
(தன்னானே)
வில்லெடுத்து நின்றவராம் ஐயப்பா சாமி,
வேலெடுத்து சென்றவராம் சண்முக சாமி, - போடு
(தன்னானே)
வாவரை துணை கொண்டவராம் ஐயப்பா சாமி,
வீரபாகுவை துணை கொண்டவராம் சண்முக சாமி, - போடு
(தன்னானே)
மகிஷி-தனை கொன்றவராம் ஐயப்பா சாமி,
சூரனையும் வென்றவனாம் சண்முக சாமி, -போடு
(தன்னானே)
காட்டினிலே கிடந்தவராம் ஐயப்பா சாமி
ஆறு-கமலத்திலே வளர்ந்தவராம் சண்முக சாமி,
(தன்னானே)
அன்னைகுறை தீர்க்கவந்த ஐயப்பா சாமி,
தந்தைகுப தேசம் சொன்ன சண்முக சாமி,
(தன்னானே)
சபரிக்கருள் புரிந்தவனாம் ஐயப்பா சாமி,
இடும்பனுக்கு அருளியவனாம் சண்முக சாமி,
(தன்னானே)
மஞ்சமாதா தேவியருக்கு ஐயப்பா சாமி,
தெய்வானை வல்லிக்கு சண்முக சாமி, போடு
(தன்னானே)
 (தன்னானே)


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer