சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் பக்தி துதி.
ஆசை அழித்துவிடு ஐயப்பா நின்
அருளை வளர்த்துவிடு
பாசம் அறுத்துவிடு ஐயப்பா நின்
பக்தி நிறைத்துவிடு
ஆணவம் வென்றுவிடு ஐயப்பா என்
அகந்தை வென்றுவிடு
ஊனம் சிதைத்துவிடு ஐயப்பா என்
உள்ளம் உயர்த்திவிடு
மதம் ஒழியாதோ ஐயப்பா என்
மனம் தெளியாதோ
நலம் செழிக்காதோ ஐயப்பா என்
பாரம் குறையாதோ
சோகம் மறையாதோ ஐயப்பா என்
துன்பம் விலகாதோ
பெண்ணால் வரும் மோகம் ஐயப்பா நீ
பேதப் படுத்தாயோ
உன்னை நினைக்கும் வரம் ஐயப்பா நீ
உடன் தர வேண்டும்
புண்மைகள் போக்க வேண்டும் ஐயப்பா நீ
போதனை சேர்க்க வேண்டும்
எண்ணங்கள் தூய்மையாக ஐயப்பா நீ
இருக்க செய்ய வேண்டும்
சொல்லினில் சுத்தம் வேண்டும் ஐயப்பா நீ
சோம்பலை மாற்ற வேண்டும்
தொல்லைகள் போக்க வேண்டும் ஐயப்பா நீ
துணையுமாக வேண்டும்
எண்ணத்தில் இருக்க வேண்டும் ஐயப்பா நீ
எப்போதும் வர வேண்டும்.
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!!!
No comments:
Post a Comment