Friday, 5 December 2014

ஐயப்பா அருள் வழங்கும் மெய்யப்பா

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் துதிப் பாட்டு.

ஐயப்பா அருள் வழங்கும் மெய்யப்பா -

உன்னை அன்போடு தொழுதிடவே கையப்பா -

எங்கள் கையப்பா. ().

தேங்காய் அவல் அரிசிபொரி திருமுடிக்கட்டு 

கையில் திகழ்ந்திட வில் அம்பு நெஞ்சத்தில் வீரம்

தேங்காய் அவல் அரிசிபொரி திருமுடிக்கட்டு 

கையில் திகழ்ந்திட வில் அம்பு நெஞ்சத்தில் வீரம்

புலிப்பாலை கொண்டுவர புனிதா நீ பயணம் 

அன்று போனதுதான் மகிஷமுகி சம்ஹார சமயம். ().

நவ வீரன் வீரபத்ரன் நல்ல துணையோடு-அந்த 

சிவகனத்தில் சிறந்தவனாம் வாபரனும் சேர 

 நவ வீரன் வீரபத்ரன் நல்ல துணையோடு-அந்த 

சிவகனத்தில் சிறந்தவனாம் வாபரனும் சேர 

தவமுனிவர் வாழ்ந்திடவே அசுர படையமைத்து - நீ 

நர்த்தனமே புரிந்தாயே காளைகட்டித் தலத்தில் 

 தவமுனிவர் வாழ்ந்திடவே அசுர படையமைத்து - நீ 

நர்த்தனமே புரிந்தாயே காளைகட்டித் தலத்தில். ().

விண்ணவரைக் காத்தருளும் புண்ணியனே மூர்த்தி 

இந்த மண்ணகம் தான் வாழ்வதுவும் உன் ஒளியின் கீர்த்தி 

 விண்ணவரைக் காத்தருளும் புண்ணியனே மூர்த்தி 

இந்த மண்ணகம் தான் வாழ்வதுவும் உன் ஒளியின் கீர்த்தி 

கண்ணின் கருமணியாக கலந்து எனைக்காக்கும் 

உன் கருணை எனும் மழைதானே துயர் வறுமை நீக்கும் 

கண்ணின் கருமணியாக கலந்து எனைக்காக்கும் 

உன் கருணை எனும் மழைதானே துயர் வறுமை நீக்கும் 

 ஐயப்பா அருள் வழங்கும் மெய்யப்பா -

உன்னை அன்போடு தொழுதிடவே கையப்பா -

எங்கள் கையப்பா

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer