Friday, 5 December 2014

ஐய்யன் வந்து விளக்காக



சபரிமலை 

ஸ்ரீ ஐயப்பன் பக்தி துதிப் பாடல்.

 

ஐய்யன் வந்து விளக்காக 

அமர்ந்தமலை சபரிமலை 

ஐயனின் கழுத்தினிலே 

ஆடுதப்பா துளசிமாலை 

கையினிலே வில்லும் அம்பும் 

காலினிலே பொற்சலங்கை 

சலங்கை ஒலிகேட்டு மயங்குதப்பா உலகமெல்லாம். (ஐய்யன்).

 

நெய்யபிஷேகம் கொண்டு 

மகிழ்ச்சி கொள்ளும் தேவன் அவன் 

ஐயப்பா சரணம் என்று 

சப்தம் போட்டு கூப்பிடுவோம். (ஐய்யன்).

 

தேடிவரும் அன்பருக்கு

அருள் கொடுக்கும் சபரிமலை 

பொருள் கொடுக்கும் சபரிமலை 

எருமேலி பேட்டை துள்ளும் பக்தருக்கு 

வரம் அருள்வாய் ஐயனே வரமருள்வாய்

ஸ்வாமி திந்தகத்தோம் ஹரிஹர 

நந்தன திந்தகத்தோம். (ஐய்யன்). 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer