சபரிமலை
ஸ்ரீ அய்யப்பன் பக்தி துதிப் பாடல்.
என் ஐயனும் நீயே ஐயப்பா
அப்பனும் நீயே ஐயப்பா
என் அம்மையும் நீயே ஐயப்பா
ஐயா அப்பா ஐயப்பா. (என்).
சரணம் விளிக்க வாய் கொடுத்தாய்
சன்னதி வரவும் கால் கொடுத்தாய்
சரணம் விளிக்க வாய் கொடுத்தாய்
சன்னதி வரவும் கால் கொடுத்தாய்
இருமுடி தாங்க தலை கொடுத்தாய்
இந்த பக்தனுக்கு நல்ல நிலை கொடுத்தாய்
பக்தனுக்கு நல்ல நிலை கொடுத்தாய். (என்).
அபயம் அபயம் ஹரிஹரனே - என்னை
ஆட்கொள்ளல் என்றும் உன் கடனே
சபரியின் தெய்வ மணி விளக்கே
எந்த ஜென்மமும் நீதான் வழித்துணையே. (அப).
உலகம் என்பது பொய்த் தேங்காய்
இதில் உண்மை என்பது நெய்த் தேங்காய்
உலகம் என்பது பொய்த் தேங்காய்
இதில் உண்மை என்பது நெய்த் தேங்காய்
மெய்யாய் விளங்கும் சத்தியமே
உன் மேன்மையை துதித்தேன் நித்தியமே. (என்).
No comments:
Post a Comment