Tuesday, 16 December 2014

மகரம்

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) 75/100


11ல் வந்திருக்கார்! பக்க பலமாய் துணையிருப்பார்!

தன்னம்பிக்கை கொண்ட மகர ராசி அன்பர்களே!

நீங்கள் மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள். எந்த வகையிலும் அவர்களின் ஆலோசனையை கேட்கத் தவற மாட்டீர்கள். கடந்த பல  ஆண்டுகளாக சனிபகவான் பல்வேறு இன்னல்களையே தந்திருப்பார். குறிப்பாக, அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும், தொழிலில் மந்த நிலையையும் கொடுத்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்திருக்காது. ஆனாலும், கடந்த சில மாதங்களாக குருபகவானும், கேதுவும் உங்களுக்கு நன்மை தந்து உங்களை தாங்கி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் சனிபகவான் இப்போது 11-ம் இடத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.

2015ம் ஆண்டு நிலைஉங்களுக்கு இது மிகவும் சிறப்பான காலம். உங்கள் வாழ்க்கை செழித்தோங்கும். படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். ங்கள் செல்வாக்கு, அந்தஸ்து மேம்பட்டு இருக்கும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நீண்ட காலமாக  எதிர்பார்த்த பொருளை வாங்கி மகிழலாம். எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும். விருந்து, விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். புண்ணியஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.பணியாளர்களுக்கு சம்பள உயர்வு முன்பை விட அதிகமாக கிடைக்கும். வியாபாரிகள், தொழிலதிபர்கள் வெளிநாட்டுடன் தொடர்பு கொண்டு வியாபாரத்தை வளம்பெறச் செய்வர். கலைஞர்களுக்கு நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும்.அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்கப் பெறுவர். மாணவர்களின் மந்த நிலை மாறும். நற்கல்வி பெறுவர்விவசாயிகளுக்கு அனைத்து பயிர்களிலும் நல்ல வருமானம் கிடைக்கும்பெண்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும். உடல்நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு சாதகமற்ற இடத்துக்கு சென்றுவிட்டாலும், அவரது 7-ம் இடத்துப்பார்வை  சாதகமாக அமையும்.அந்த பார்வையால் மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். செலவும் வரும். தேவையான பொருட்களை வாங்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சீரான வசதி இருக்கும். எனினும், மதிப்பு, மரியாதை சுமாராகவே இருக்கும் என்பதால், வீண்விவாதங்களை தவிர்க்கவும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வியாபாரிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அரசின் உதவி கிடைப்பது அரிதாகும். கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும். மாணவர்களுக்கு குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். புதிய வழக்கில் சிக்க வேண்டாம். பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும்உடல் நலம் சிறப்படையும்.

2016ம் ஆண்டு நிலை அக்கம் பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ÷ தவைகள் பூர்த்தி ஆகும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். கேதுவால் பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. பகைவர் வகையில்  தொல்லை வரும். தொழிலதிபர்களுக்கு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. பணியாளர்களுக்கு விரும்பிய இடத்துக்கு  மாற்றம் கிடைக்கப் பெறலாம்.வியாபாரிகளின் வருமானம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம்மாணவர்கள் சிறப்பான பலனை பெறலாம். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூலை பெறலாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இரு க்கும். பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். பிள்ளைகள் உடல்
நலனில் சற்று அக்கறை காட்டவும்.

 2017 ஜூலை வரைமுக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்அனாவசிய செலவை தவிர்க்க வேண்டும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். வீட்டில் சிற்சில பூசல்  வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமகலாம். பணியாளர்கள் கடந்த காலம் போல  உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் புதிய வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி  எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகளுக்கு நிலக்கடலை  மற்றும் கிழங்கு நல்ல மகசூலை தரும். பக்கத்து நிலத்துக்காரரிடம் அனுசரித்து போவது நல்லது. பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்.

2017 டிசம்பர் வரைகுடும்பத்தில் திருட்டு பயம் மறையும். தம்பதியினர் இடையே கேது, ராகுவால் சிற்சில பிரச்னைகள் வரத்தான் செய்யும். அதை  சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். அதே நேரம் உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்னை இனி இருக்காது. அதோடு அவர்கள் வருகையும்அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் அலைச்சலும் இருக்கும். அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளிடம்  அனுசரணையாக நடந்து கொள்ளவும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றுக்கு தடையில்லை. சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். புதிய வி யாபாரம் தொடங்குவதோ, அதிக முதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். பணவிரயம் ஏற்படலாம். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய் யும். கவனம் தேவை. தரகு, அதிகாரம்-ஆதாரம் இல்லாத தொழில் சிறப்பாக நடக்கும். தொழில் அதிபர்கள் அரசின் சோதனைக்கு ஆளாகலாம்பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம்! உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். தீயோர் சேர்க்கையால் அவதிபட  வாய்ப்பு உண்டு. எனவே முன்பின் தெரியாதவர்களிடம் எதையும் ஒப்படைக்க வேண்டாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். ஆனால், அதற்காகசற்று சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை  எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படித்தால் தான் மதிப்பெண் கிடைக்கும். விவசாயம் சீராக இரு க்கும். மானாவாரி பயிர்களில் சிறப்பான வருவாய் கிடைக்கும். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சுமராக இரு க்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில  உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது.

பரிகாரப்பாடல்!

அல்லல்போம்;வல்வினை போம்;அன்னை வயிற்றில் பிறந்ததொல்லை போம்: போகாத்துயரம் போம்; நல்ல
குணம் அதிகமாம் அருணைக் கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைதொழுதக்கால்.

பரிகாரம்!


சித்திரபுத்திரநயினாரை வணங்கி ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை யும், ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகாலத்தில் பைரவரையும் வணங்கி வாருங்கள். தினமும் விநாயகர், துர்க்கை, ஆஞ்சநேயரை வழிபடுங்கள்ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer