Friday, 5 December 2014

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே



சபரிமலை ஸ்ரீ அய்யப்ப சுவாமி,

ஐயப்பன் பக்தி துதிப் பாடல்.

 

ஓங்கார நாதத்திலே ஓங்கி வரும் சரணத்திலே

பாங்காக தோன்றிடுவான் பந்தளத்து சபரியப்பன் 

நீங்காத மனை செல்வம் நிறை ஆயுள் புகழ்தேகம்

தாங்கி வரும் திருமுடிக்கு தக்கபடி தந்திடுவான். ().

 

மாலையிட்ட நாள் முதலாய் மனம்பழுக்க வைத்திடுவான் 

காலையிலும் மாலையிலும் கதிர்போல வலம் வருவான்

வேலையிலே வெற்றி தரும் விளக்காக விளங்கிடுவான் 

பால்மனத்தில் பரிந்தருள்வான் பம்பாநதியின் வாசனப்பா

நெய் மணக்கும் மேனியப்பா நிம்மதிக்கு தோணியப்பா 

கைமணக்கும் வாய்மணக்கும் கனதனம் மணக்குமப்பா 

உள்ளமே அவன் கோவில் உண்மையே அவன் வாசல் 

வள்ளல் மணிகண்டனப்பா வடிவேலன் தம்பியப்பா

கற்பூர ஜோதிமலை காந்தமலை சபரிமலை 

நற்பதம் நாடிவரும் ஞானியர்தம் தியானமலை 

பொற்பதம் மேடையிலே பூரணனின் காட்சியிலே 

அற்புதங்கள் கோடியப்பா ஐயப்பா சரணமப்பா.



No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer