Friday, 5 December 2014

மலைத் திருநாட்டில் பிறந்தவனே



சபரிமலை அய்யப்பன் பக்தி துதிப் பாடல்.


மலைத் திருநாட்டில் பிறந்தவனே - ஒரு 
 மானிட உருவில் வளர்ந்தவனே 
ஒலி ஒளியாவிலும் நிறைந்தவனே - அந்த 
அரஹர சிவனின் திருமகனே. ().

தீமைகள் களைந்திடத் துணிந்தவனே - கொடும் 
சீறிடும் புலிமேல் அமர்ந்தவனே 
சாமி சரணம் ஐயப்பனே - இங்கு 
சகலமும் நீயே என்னப்பனே. ().

நல்லவர் மகிழ்ந்திட அவதரித்தாய் - உனை 
நம்பிய பேர்களுக்கருள் கொடுப்பாய் 
தொல்லைகள் நீங்கிட துணையிருப்பாய் - கை 
தொழுபவர் நெஞ்சினில் குடியிருப்பாய். ().

வாவா என்றால் வந்திடுவாய் - வரம் 
தாதா என்றால் தந்திடுவாய் 
ஆஹா உன்புகழ் பாடிவிட்டால் - இங்கு 
போகாவினையும் போகுதய்யா. ().

 

 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer