சபரிமலை
ஸ்ரீ ஐயப்பன் பக்திப் பாடல்.
வில்லாளி வீரனை வீரமணி
கண்டனை
வினை நீக்கும் சீமானைத்
தாலாட்டுவோம்
எல்லோரும் பாடுவோம் ஏடெடுத்து
ஓதுவோம்
எரிமேலிப் பெருமானை சீராட்டுவோம். (வி).
சங்கீதத் தூளிகட்டி சந்தத்தோடு தாளம் தட்டி
மன்னாதி மன்னனுக்கு மடை திறந்த பாசம் கொட்டி
சங்கீதத் தூளிகட்டி சந்தத்தோடு தாளம் தட்டி
மன்னாதி மன்னனுக்கு மடை திறந்த பாசம் கொட்டி
சிங்காரத் தூளிகட்டி சத்தமின்றி தாளம் தட்டி
ராஜாதி ராஜனுக்கு ரகரகமாய்
பாட்டுக் கட்டி.
(வி).
அபிஷேகப் ப்ரியனுக்கு அன்னத்தோகை தொட்டில் கட்டி
அலங்காரப் ப்ரியனுக்கு அங்கம்
மின்னும் வண்ணம்
பண்ணி
அபிஷேகப் ப்ரியனுக்கு அன்னத்தோகை தொட்டில் கட்டி
அலங்காரப் ப்ரியனுக்கு அங்கம்
மின்னும் வண்ணம்
பண்ணி
ஹரனாரின் குமரனுக்கு அம்சமாக
தொட்டில் கட்டி
அடியாரின் துணைவனுக்கு ஆசைபொங்க
மெட்டுக்கட்டி. (வி).
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம்
ஐயப்பா.
சாமி சரணம் ஐயப்பா
சரணம் சரணம்
ஐயப்பா.
சாமி
சரணம் ஐயப்பா
சரணம் சரணம்
ஐயப்பா.
No comments:
Post a Comment