Friday, 5 December 2014

அருள்மிகு சிவபெருமான் பக்தித் துதிப் பாடல்.



அருள்மிகு சிவபெருமான் பக்தித் துதிப் பாடல்.

- தாயுமானவர்.

 

பாடுகின்ற பனுவலோர்கள்,

 தேடுகின்ற செல்வமே 

நாடுகின்ற ஞானமன்றில்,

ஆடுகின்ற அழகனே

 

அத்தனென்று நின்னையே,

பத்திசெய்து பனுவலால் 

 பித்தனின்று பேசவே,

வைத்ததென்ன வாரமே.

 

சிந்தை அன்பு சேரவே,

நைந்து நின்னை நாடினேன் 

வந்து வந்துள் இன்பமே,

தந்திரங்கு தாணுவே.

 

அண்டரண்டம் யாவும் நீ,

கொண்டு நின்ற கோலமே 

தொண்டர்கண்டு சொரிகணீர்,

கண்டநெஞ்சு கரையுமே.

 

அன்னைபோல அருள்மிகுத்து,

மன்னுஞான வரதனே

என்னையே எனக்களித்த,

நின்னையானும் நினைவனே.

 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer