திருமுருகன் பக்தி
துதி.
நித்தம் உன்னை நினைப்பதினால் முருகா
நெஞ்சில் கனம் குறைகிறது
நெஞ்சில் கனம் குறைவதினால்
நிம்மதியும் கிடைக்கிறது
நிம்மதியும் கிடைப்பதினால்
உன் நினைவு தொடர்கிறது
உன் நினைவு தொடர்வதினால்
என் நிலமை உயர்கிறது
சங்கிலித் தொடர்போல்
சாமி இது நடக்கிறது
சாமி இது நடப்பதற்கு
சாவி உன் கை கொடுக்கிறது.
வேல் வேல் வெற்றிவேல்
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா.
No comments:
Post a Comment