திருமுருகன் துதிப்
பாடல்.
வெள்ளிக் கதவு திறக்கட்டுமே
வேலன் தரிசனம் கிடைக்கட்டுமே
வெற்றி முகமும் சிரிக்கட்டுமே
வேண்டும் வரமும் கிடைக்கட்டுமே
அள்ளி அணைக்க அருளட்டுமே
அன்பு மனதில் பொங்கட்டுமே
வள்ளிக் கணவனும் நோக்கட்டுமே
வடிவேல் அழகும் மின்னட்டுமே
புள்ளி மயிலும் ஆடட்டுமே
புராண உண்மை புரியட்டுமே
சொல்லி சொல்லி ரசிக்கட்டுமே
சுப்பன் கவிதை முழங்கட்டுமே
பக்தி பரவசம் ஆகட்டுமே
பண்டாரக் கோலம் காணட்டுமே
சித்தி நலமும் சேரட்டுமே
செந்தூர் முருகும் கூடட்டுமே
முக்தி பதவி கிட்டட்டுமே
முத்தமிழ் உதவி கிடைக்கட்டுமே
சக்தி உமையும் தாங்கட்டுமே
சங்கரன் ஆசியும் அருளட்டுமே
வெள்ளிக் கதவு திறக்கட்டுமே.
No comments:
Post a Comment