Tuesday, 16 December 2014

விருச்சிகம்

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) 40/100

71/2 யிலே இதெல்லாம் சாதாரணமப்பா!

பெற்றோர் மீது அதிக பற்றும், பாசமும் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!

 உங்கள் சாதுரியத்தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு துரோகம் செய்தவர்களை அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டீர்கள்தற்போது உங்களுக்கு சனிபகவான் நல்லது தரும் காலம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே சனி பகவானால் நீங்கள் எண்ணற்ற இடர்ப்பாடுகளை சந்தித்து வந்திருப்பீர்கள். குறிப்பாக பொருள் நாசம், வீண்அலைச்சல்செயல்களில் தடை, மனஉளைச்சல் போன்ற இன்னல்களைக் கண்டிருக்கலாம். இப்போது சனிபகவான் 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். அதற்காக கவலை கொள்ள ÷ வண்டாம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் மூன்று ஆண்டு காலமும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில்  வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. எனினும், இவற்றைக் கண்டு பயம் வேண்டாம். மற்ற கிரக ங்களால் நன்மை கிடைக்கும். சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களைப் பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம்  இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில்  மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார்.

2015 டிசம்பர் வரை குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு  மறையும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அக்கம்பக்கத்தார் உங்களை பெருமையாக பேசுவார்கள். தம்பதியிடையே சிற்சில ஊடல்கள் வரத்தான் செய்யும். நீண்ட  காலமாக தடைப்பட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.   தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம்கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர்அரசியல்வாதிகள் பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் தேக்கநிலை இருக்காது. விவசாயம் நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக  மகசூல் கிடைக்கும்பெண்கள் சாதுரியத்தால் அதை எளிதில் முறியடித்து
வெற்றி காண்பீர்கள்.

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு சாதகமற்ற நிலைக்கு வருகிறார். முக்கிய கிரகங்கள் எதுவுமே சாதகமாக இல்லாத காலம். அதற்கான கவலை  கொள்ள வேண்டாம். இப்போது சனியின் 3-ம் இடத்துப்பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும். பொதுவாக இந்த காலத்தில் சற்று எச்சரிக்கையாக  இருக்க வேண்டும். அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும். திருமணம் போன்ற சுப  நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். பணியாளர்கள் கடந்த காலம் போல உன்னதமான பலனை எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், போலீஸ் மற்றும்  பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வளர்ச்சி சீராக இருக்கும். புதிய  வியாபாரம், தொழில் தற்போது துவங்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.மாணவர்கள் அதிக  முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலை தரும். பெண்கள் பிள்ளைகளால்  பெருமை காண்பர்.

2016 டிசம்பர் வரைகுரு சாதகமான இடத்துக்கு வந்து விடுவார். இதனால், சனியால் ஏற்பட்ட கடந்த கால பின் தங்கிய நிலை இனி இருக்காது. இப்போது ராகு-கேது பெயர்ச்சி அடைகிறார்கள். அவர்களால் பெரிய அளவு நன்மை தர இயலாவிட்டாலும் குரு வால் பலன்கள் மாறுபடும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும்  அதை எளிதில் முறியடிப்பீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். பணியாளர்கள் சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர்தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு அலைச்சலும், பளுவும் இருக்கும். பொருள் விரயத்துக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழில், வியாபாரம் துவ ங்குவதைத் தவிர்க்கவும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசிய ல்வாதிகளுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்புண்டு. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் சிறப்பான முன்னேற்றம் காண்பர். விவசாயத்தில் நல்ல  வளம் காணலாம். நெல், கோதுமை மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள்  வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல் நலத்தில் பிரச்னைவரும். பயணத்தின் போது கவனம் தேவை.

 2017 ஜூலை வரைஇப்போது குரு 12-ம் இடத்துக்கு வந்துவிட்டதால் அவரும் நன்மை தரமாட்டார். முக்கிய
கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலகட்டம். இந்த நிலையில் ஏழரையைச் சமாளிக்க கடும் பிரயத்தனம் செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை  முடிக்க அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண வேண்டும். பணவரவுக்கு தகுந்தாற்போல் செலவும்  இருக்கும். பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. பணியாளர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். இடமாற்றம் காரணமாக  குடும்பத்தை விட்டு பிரியும் நிலை உருவாகலாம். வியாபாரம், தொழிலில் புதிய முதலீடு விஷயத்தில் அதிக கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது. மாணவர்கள் முயற்சி  எடுத்து படிக்க வேண்டும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. உஷ்ணம், தோல், தொடர்பான பிரச்னை  வரலாம்.

2017 டிசம்பர் வரை இந்த சமயத்தில் கேதுவால் எண்ணற்ற நன்மைகளை காணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும் என்பதால் வாழ்க்கை மகிழ்ச்சி கரமாகவும், சிறப்பாகவும் அமையும். எதையும் வெற்றிகரமாக முடித்து காரிய அனுகூலத்தை காணலாம்.. உங்கள் மீதான பொல்லாப்பு மறையும்பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும்.வியாபாரத்தில் அரசின் வகையில் எதிர்பார்த்த  உதவி கிடைக்கும். கணினி, அச்சுத்துறை, பத்திரிகை, கோயில் மற்றும் ஆன்மிகம் சார்ந்த தொழில், வியாபாரம் சிறந்து விளங்கும். கலைஞர்கள் புதிய  ஒப்பந்தம் கிடைக்கும். புகழ், பாராட்டு போன்றவை வரும். அரசியலில் முன்னேற்றம் காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறலாம்மாணவர்கள் கடந்த ஆண்டு படித்த படிப்புக்கான முழு பலன்களும் இப்போது கிடைக்கும். விவசாயிகள் சிறப்பு காண்பர். நெல், கோதுமைபழவகைகள், கடலை போன்ற பயிர்களில் அதிக வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்தீர்ப்புகள் சாதகமாக அமையும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களின்  நிலை உயரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரு ம்புவர். பிள்ளைகள் நலம்
மேம்படும். ஏழரையில் கடைசி ஆறு மாதங்கள் நல்ல காலமாகவே இருக்கும்.

பரிகாரப்பாடல்!

அண்ணல் ரகுராமன் அருள்பதம் கொண்டவனே!விண்ணவர் போற்றும் வீர பராக்கிரமனே!தண்ணினும் இனிய தன்மை கொண்டவனே!உன்னிரு பதம் பணிந்தேன் அனுமனே!அஞ்சனை சுதனே அசுரன் தசமுகன்அஞ்சிட எதிர் அமர்ந்தவனே!வஞ்சனை சூதில்லாத நெஞ்சினில்வந்து அமர்ந்திடும்  ஆஞ்சநேயா சரணம்!

பரிகாரம்!


சனீஸ்வரர் சாதகமற்ற நிலையில் இருக்கிறார். அவரால் கெடு பலன்கள் ஏற்படாமல் இருக்க ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாரு ங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பத்திரகாளிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தையும், ÷ கதுவுக்கு சிவப்பு நிற வஸ்திரத்தையும் சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer