Tuesday, 16 December 2014

துலாம்

துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) 50/100


இன்னும் மூணே வருஷம் கண்ணைப் பொத்திட்டுகழிச்சிடுங்க!

எதையும் ஆணித்தரமாக பேசும் தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே!

யாரிடமும் அதிகமாக நெருங்கி பழக மாட்டீர்கள். அனாவசியமாக யார் விஷயத்திலும் தலையிட மாட்டீர்கள். உங்களுக்கு சனிபகவான் கடந்த சில  ஆண்டுகளாகத்தான் அளவுக்கு அதிகமான சிக்கலையும், பிரச்னைகளையும் தந்திருப்பார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் உங்கள் ராசியில் இருந்து அதிக அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் தொல்லைகளே மிஞ்சி இருக்கும். உங்கள் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டார்கள். வீண் அலைச்சல் உங்களுக்கு மனச்சோர்வை தந்திருக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க வேண்டியதிருக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடத்திற்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஆனாலும், மேலே சொன்ன பிற்போக்கான பலன்கள் இனி நடக்காது. ஏழரை சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது
குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். பொருட்கள் களவு கொடுக்க நேரிடும். பணஇழப்பு ஏற்படும். இது பொதுவான விதி. ஆனால் மற்றைய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால், வரும் இரண்டரை ஆண்டு காலம் அவ்வளவு கடுமையாக அமையாது. காரணம், இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரத் தயங்க மாட்டார். மேலும் சனிபகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அவரது 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். எப்படியோ, இன்னும் மூன்று வருடங்களைக் கழித்து விட்டால் ஏழரை அகலும் காலம் வந்து விடும்.

2015ம் ஆண்டு நிலைகுடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டில் சிற்சில பிரச்னைகள் வரலாம். விட்டுக் கொடுத்து அனுசரித்து போகவும்அனாவசிய செலவைத் தவிர்க்க வேண்டும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு குறையும். புதிய சொத்து வீடு, மனை வாங்க யோகம் உண்டுஅதற்காக சிறிது கடன் வாங்க நேரிடலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதமாகலாம். ஆனால் அதுவும் நன்மைக்கே. மதிப்பு, மரியாதை  சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.பணியாளர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு  தடையேதும் இல்லை. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் தேவையற்ற மனக்குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் இருப் பர். தொழிலதிபர்கள், வியாபாரிகள் புதிய தொழில், வியாபாரத்தை தற்போது தொடங்க வேண்டாம். இருப்பதை சிறப்பாக நடத்தினால் போதும். õரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். கலைஞர்கள் சற்று முயற்சி எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்களைப் பெற முடியும். அரசிய ல்வாதிகள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயிகள் அதிக  செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். நிலம் தொடர்பான வழக்கு விவகாரங்கள் இழுத்தடிக்கும். பெண்கள் பிள்ளைகளால் பெருமை காண்பர்குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

2015 ஜூலை 4ல் குரு சிம்மத்திற்கு மாறுகிறார். அவர் சாதகமான இடத்துக்கு வந்துவிட்டார். இதனால் கடந்த கால பின்தங்கிய நிலை இனி இரு க்காது. இந்நேரத்தில் ராகு-கேதுவும் பெயர்ச்சி அடைகிறார்கள். ராகு நன்மை தரும் இடத்திற்கு வந்துள்ளார். ஆனால் கேது சாதகமற்ற நிலைக்கு ருகிறார். இந்த சமயத்தில் பொருளாதார வளம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக முடியும். சிற்சில தடைகள் வந்தாலும் அதை எளிதில்
முறியடிப்பீர்கள். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய  வாகனம் வாங்கலாம். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டுபோகலாம் சற்று கவனம் தேவை. பணியில் கடந்த கால பிற்போக்கான நிலை மறையும்சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.வியாபாரிகளுக்கு அரசின் வகையில் எதிர்பார்த்த சலுகை  கிடைக்கும். பொருள் விரயத்துக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளின் தொல்லை வரலாம். குடும்ப பிரச்னையை தொழிலில் காட்டாமல் உழைத்தால்  வளம் காணலாம். புதிய தொழிலை தவிர்க்கவும். கலைஞர்கள் மிகச்சிறப்பான பலன் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள், பொதுநல ÷ சவகர்களுக்கு உயர் பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. மாணவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பர். விவசாயத்தில் நல்ல வளத்தை காணலாம்நெல், கோதுமை பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். பெண்கள் பிறந்த வீடு மற்றும் உறவினர்கள் வகையில் இருந்த பிரச்னை மறையும். உடல்  நலம் நன்றாக இருக்கும்.

2016ம் ஆண்டு நிலை பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக
உறுதுணையாக இருப்பர். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். பணியில் இடமாற்றம் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் நிலை  உருவாகும். தொழில், வியாபாரத்தில் சிலர் ஊர்விட்டு ஊர் மாற்றும் நிலை ஏற்படும். போட்டியாளர்களால் இடையூறு வரலாம். புதிய முதலீடு  விஷயத்தில் அதிக கவனம் தேவை. கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிதுமாணவர்கள் முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லது. பி ள்ளைகள் நலனில் அக்கறை தேவை.

2017 ஜூலை வரைகுடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அதேபோல் அக்கம்பக்கத்தாரிடமும் அனவாசிய பேச்சை தவிர்க்கவும். பணிய õளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டுதொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு ஒருவித மந்த நிலை இருக்கும். அலைச்சல் கூடும். போட்டியாளர்களால் வரும் எந்த பிரச்னையையும்  சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் ஓரளவு பலன் காண்பர். மாணவர்கள்  விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் சீரான வசதி இருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு
காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம். எனினும், குருவின் பார்வை கை கொடுக்கும். பணியாளர்கள் சிலர் வேலையில்  ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருபிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம்.தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களின்  இடையூறு அவ்வப்போது தலைதுõக்கும். தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை  கிடைக்காமல் போகலாம். மாணவர்கள் சிலர் தகாத சேர்க்கையால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். விவசாயிகளுக்கு நிலம்  தொடர்பான வழக்கு விவகாரங்களில் பாதகமான தீர்ப்பு வரலாம். பெண்கள் திருப்திகரமாக
வாழலாம். குடும்பத் தேவைக்காக அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும. ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளவும்.

பரிகாரப்பாடல்!

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்நாதனே! நரசிங்கம் அதனாய்உம்பர் கோன் உலகம் ஏழும் அளந்தாய்
ஊழி யாயினாய்! ஆழி முன்னேந்திகம்ப காமகரி கோள் விடுத்தானே!காரணா! கடலைக் கடைந்தோனே!
எம்பிரான்! என்னை ஆளுடைத்தானே!ஏழையேன் இடரைக் களைவாயே!

பரிகாரம்!


காளியின் அருள் கிடைக்க அர்ச்சனை செய்யுங்கள். நரசிம்மர் வழிபாடும், பைரவர் வழிபாடும் தடைகளை கடந்து உங்களை முன்னேற்றும்சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சனிக்கிழமை சனிபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயரை  வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வாருங்கள்.


Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer