Tuesday, 16 December 2014

சிம்மம்

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 55/100

சனீஸ்வரரே! நீங்க நல்லவராகெட்டவரா?

திறமையுடன் செயல்பட்டு வெற்றி காணும் சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருந்து உங்களுக்கு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார வளத்தை  கொடுத்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றிருப்பார். இந்த நிலையில் சனி தற்போது 4-ம் இடத்தில் அடியெடுத்து வைக்கிறார். இது  அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் வீண் விரோதத்தை உண்டாக்குவார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகலாம். பெற்றோரைப் பிரிந்து செல்லும் நிலையும் ஏற்படலாம்.- இவை எல்லாம்  பொதுவான பலன். இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப் பார்வை சிறப்பான  இடத்தில் விழுகிறது. இது உங்களுக்கு மிகவும் சாதகமான பலனைக் கொடுக்கும். மொத்தத்தில், அவர் நல்லவரா இல்லை கெட்டவரா என்று அறிய õ முடியாத அளவுக்கு நல்லதும் சிரமமுமாய் மாறி மாறி வரும்.

2015ம் ஆண்டு நிலை சீரான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் காலமாக அமையும். எடுத்த செயலை முடிக்க அவ்வப்போது தடைகள் குறுக்கிட்டாலும்முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற் போல் செலவும் இருக்கும். எனவே அனாவசிய செலவைக் குறைக்கவும்மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். சனீஸ்வரரின் பார்வையால் உங்கள் நிலை சற்றும் தாழ்ந்து ÷ பாகாது. எதையும் சமாளித்து முன்னேற அவர் கருணை காட்டுவார். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். அவ்வப்போது சிறு சண்டை  சச்சரவு ஏற்பட வாய்ப்பிருந்தாலும், குடும்ப அமைதிக்கு பங்கம் உண்டாகாது. ஆடம்பர செலவுகளைத் தவிர்க்கவும். சுப நிகழ்ச்சி நடத்துவதில்  தாமதம் ஏற்படலாம்பணியில் இருப்பவர்கள் கடந்த காலத்தைப் போல நற்பலன் அதிகமாக இருக்கும் என்று எண்ணுவது கூடாது. முக்கியமான  பொறுப்புகளை வேறு யாரிடமும் ஒப்படைப்பது நல்லதல்ல. சிலருக்கு திடீர் இட, ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில்  கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். புதிய முதலீடு விஷயத்தில் விழிப்புடன் செயல்படுவது அவசியம். யாரையும் நம்பி பணத்தை ஒப் படைக்க வேண்டாம்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க விடாமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி  கிடைப்பது எளிதான விஷயமல்ல. மாணவர்கள் முயற்சி எடுத்து படிப்பது அவசியம். பெற்றோர் அறிவுரையை ஏற்பது நன்மையளிக்கும். விவசாயிகள் அதிக முதலீடு செய்யும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரத்தில் சாதகமான சூழ்நிலை அமையாதுபெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போவது நல்லதுஉஷ்ணம், தோல், தொடர்பான நோயால் பாதிக்கப்படலாம். கவனம் தேவை.

குரு 2015 ஜூலை 4ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் கலகம் விரோதம் வரும் என்றும் மந்த நிலை ஏற்படும் என்றும் பொதுபலனாகக்  கூறப்படுவதுண்டு. குடும்பத்தில் கணவன், மனைவி இடையே பிரச்னை உருவாகலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதே÷ பால் அக்கம்பக்கத்தாரிடமும் அனாவசியமான பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருள் திருட்டு போக வாய்ப்புண்டு. பணியாளர்களுக்கு  பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பாராமல் பணி, இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டாகும். தொழில், வியாபாரத்தில் வீண் அலைச்சல் இருக்கும்.   அரசாங்க வகையில் சாதகமான பலன் கிடைக்காது. வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நன்மைஅளிக்கும். கலைஞர்கள் திருப் திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அரசியல்வாதிகள் சீரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது அவசியம். விவசாயி கள் மிதமான லாபம் கிடைக்கப் பெறுவர். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

2016ம் ஆண்டு நிலை குரு உங்கள் ராசிக்கு 2ல் செல்வது சிறப்பு. அவரால் இனி நன்மை அதிகரிக்கும். ராகுவும் கேதுவும் இடம் மாறுகிறார்கள்.  7-1-2016 அன்று ராகு கன்னியில் இருந்து சிம்ம ராசிக்கு மாறுகிறார்.7-1-2016 அன்று கேது மீனத்தில் இருந்து கும்பத்திற்கு மாறுகிறார். இருவரும்  சாதகமற்ற நிலையில் தான் இருக்கிறார்கள்இந்த காலக்கட்டத்தில் குருவால் இதுவரை இருந்த மந்த நிலை மாறும். உங்களது ஆற்றல் அதிகரிக்கும்எடுத்த செயலைச் சிறப்பாக செய்து முடிக்கலாம். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம்கணவன், மனைவி  இடையே அன்பு பெருகும். அடிக்கடி விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். உறவினர்களால் நன்மை  கிடைக்கப் பெறுவீர்கள். பணியாளர்களுக்கு பணிச்சுமை குறையும். நிர்வாகம், அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலர் இழந்த பதவி மீண்டும்  கிடைக்கப் பெறுவர். இடமாற்ற பீதி அடியோடு மறையும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டியால் சிரமம் ஏற்பட்டிருக்கலாம்கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விவசாயப் பணி சிறக்கும். நெல், போதுமைகொண்டை கடலை, கேழ்வரகு, எள் போன்ற தானியங்கள் சிறப்பான மகசூலை கொடுக்கும். பெண்கள் குடும்பத்தில் சிறப்பான நிலையை அடைவர்புதிதாக மணமான தம்பதிகள் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர்.

2017 ஜூலை வரை கடந்த காலத்தைப் போல் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தில் எந்த பின்னடைவும் இருக்காது. முக்கிய பொறுப்புகளை  குடும்ப பெரியோர்களிடம் ஒப்படைப்பது நல்லது. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது அவசியம். பணியில் சிலருக்கு ÷ வலையில் வெறுப்பு வரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவதால் பிரச்னை குறையும். வியாபாரத்தில் அலைச்சலும், பணிச்சுமையும் ருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்திற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டு மே தேர்ச்சி பெற முடியும். விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சுமாராக  இருக்கும். கால்நடை  வளர்ப்பின் மூலம் ஓரளவு  வருமானம் கிடைக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன், மனைவி இடையே அன்பு பலப்படும். உறவினர்  வகையிலும் பிரச்னை நீங்கி இணக்கம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பணியில் அவ்வப்போது பிரச்னையைச் சந்திக்க ÷ வண்டியிருக்கும். வியாபாரிகள் சீரான வளர்ச்சி காண்பர். யாரையும் நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க வகையில் எந்த
சலுகையையும் எதிர்பார்க்க முடியாது. கலைஞர்கள் விடாமுயற்சி மூலம் புதிய ஒப்பந்தங்களை பெற இயலும். அரசியல்வாதிகள் பிரதிபலனை  எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அவசியம். இல்லாவிட்டால் ஆசிரியர் கண்டிப்புக்கு ஆளாக ÷ நரிடலாம். விவசாயிகள் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நிலக்கடலை மற்றும் கிழங்கு பயிர்கள் நல்ல மகசூலைத் தரும். புதிய நிலம் வாங்கும்  முயற்சி நிறைவேறும். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்குடன் திகழ்வர். ஆடம்பர பொருட்களை வா ங்குவீர்கள். புத்தாடை, ஆபரணங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல்நலம் சீராகும். மரு த்துவச் செலவு குறையும்.

பரிகாரப்பாடல்!

செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்எழில்மேனித் திருவே வேலைஅங்கணுலகு இருள் துரக்கும் அவர் கதிராய்வெண் மதியாய் அமரர்  கூட்டும்பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியேநெடுங்கானில் பொருப்பில் மண்ணில்எங்குளை நீ அவனன்றோ மல்லல் வளம் சிறந்தோங்கி  இருப்பதம்மா!

பரிகாரம்!


ராகு, சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வாருங்கள். மகாலட்சுமியை வணங்குவதால் நன்மை  உண்டாகும். ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டு வாருங்கள்சதுர்த்தியில் விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள். எள்சாதத்தை காக்கைக்கு இடு ங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer