ரிஷபம்
(கிருத்திகை
2-ஆம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
நேர்மையே
குறிக்கோளாகக் கொண்டவராகவும் யாருக்கும் பயப்படாத குணம் படைத்தவராகவும் விளங்கும்
ஆற்றல்கொண்ட ரிஷப ராசி நேயர்களே!
உங்கள் ஜென்ம ராசிக்கு சமசப்தம
ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி
சஞ்சாரம் செய்வதும், ஆண்டின் தொடக்கத்தில் குரு
ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல்
சஞ்சரிப்பதும் சற்று சாதகமற்ற அமைப்பாகும்.
இதனால் குடும்பத்திலுள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. உடல்
ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகளும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளும் ஏற்படுக்கூடும். 3-ல் சஞ்சரிக்கும் குரு
7-ஆம் வீட்டை பார்ப்பதால் திருமண
வயதை அடைந்தவர்களுக்கு திருமண சுப காரியங்கள்
கைகூடும். ஆண்டின் தொடக்கம் சற்று
சாதகமின்றி இருந்தாலும் வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு
மாற்றத்தால் குரு பகவான் சுக
ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவுள்ளார்.
இதனால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைய ஆரம்பிக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கேது லாப ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன வரவுகளும் உண்டாகி
குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிட்டும்
என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்லவேண்டியிருக்கும். உத்தியோ கஸ்தர்கள் தங்கள்
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங் களைப் பெற்று உயர்பதவிகளைப்
பெறுவீர்கள். 5-ல் ராகு சஞ்சரிப்பதால்
புத்திர வழியில் மகிழ்ச்சிக் குறைவு,
பூர்வீகச் சொத்துகளால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். உடல்
ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும்
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. இந்த ஆண்டு
எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நல்ல அனுகூலமான பலனைப்
பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.
உடல் ஆரோக்கியம்
இந்த ஆண்டு முழுவதும் ஆயுள்
காரகனான சனி பகவான் ஜென்ம
ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ஆம்
வீட்டில் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குருவும்
ஜென்ம ராசிக்கு 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும்
உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை, சோர்வு, கை, கால்களில்
அசதி, எதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படவியலாத
நிலை, அஜீரணக் கோளாறு போன்றவை
உண்டாகும். மனைவிக்கும் எதிர்பாராத வகையில் உடல் ஆரோக்கியத்தில்
பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் ஏற்படும். 05-07-2015-ல்
ஏற்படும் குரு மாற்றத்தால் குரு
4-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கிய பாதிப்புகள்
சற்று குறையும். அன்றாடப் பணிகளிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும்.
குடும்பம்,
பொருளாதார நிலை
குடும்பத்திலுள்ளவர்களை
ஆண்டின் தொடக்கத்தில் அனுசரித்துச் செல்வதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் நல்லது. கணவன்- மனைவியிடையேயும்
அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உற்றார்- உறவினர்கள் அனுசரித்துச் செல்லமாட்டார்கள். இந்த வருடம் சனி
சாதகமின்றி சஞ்சரித்தாலும், கேது லாப ஸ்தானத்தில்
சஞ்சரிப்பதாலும் ஆண்டின் பிற்பாதியில் குரு
4-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-
மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள்
மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு
திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு
ஜீவனாதிபதி சனி 7-ல் சஞ்சரிப்பது
சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும், எதிலும்
சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடைந்துவிடமுடியும்.
உயரதிகாரிகளிடம் சற்று நிதானமுடன் பேசுவது,
உடன் பணிபுரிபவர்களுடன் அனுசரித்து நடந்துகொள்வது நன்மையளிக்கும். இந்த வருடம் குரு
சஞ்சாரமும் சுமாராக இருப்பதால் பணியில்
நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகள்
உங்களின் திறமைகளைப் பாராட்டுவதால் மனநிம்மதி ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு
அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். உங்கள்மீதிருந்த
தேவையற்ற பழிச்சொற்கள் மறையும்.
தொழில்,
வியாபாரம்
உங்கள்
ஜென்ம ராசிக்கு ஜீவனாதிபதியான சனி பகவான் கூட்டுத்
தொழில் ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால்
கூட்டாளிகளிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது
நல்லது. வேலையாட்களாலும் வீண் வம்பு, வழக்குகளை
சந்திக்கநேரிடும். தொழில்ரீதியாக நண்பர்களும் எதிரியாவார்கள். தொழிலிலும் மந்தமான நிலையிலேயே நடைபெறும்
என்றாலும் கேது 11-ல் சஞ்சரிப்பதால்
எதையும் சமாளித்துவிடுவீர்கள். போட்ட முதலீட்டினை எடுக்கும்
அளவுக்கு லாபங்கள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது
கூட்டாளிகளிடமும் கலந்தாலோசித்துச் செயல்படுவது அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள உதவும்.
பெண்களுக்கு
இந்த ஆண்டானது அவ்வளவு சாதகமாக இருக்கும்
என்று சொல்ல முடியாது. கணவரிடம்
பிரச்சினை, உறவினர்களிடையில் அடிக்கடி வீண் வாக்குவாதம் போன்றவை
உண்டாகி, மனநிம்மதி குறையும். 3-ல் சஞ்சரிக்கும் குரு
7-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமண வயதை எட்டியவர்களுக்கு
மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். வரும் 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு
மாற்றத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஒற்று
மையும் நிம்மதியும் சிறக்கும். பணவரவுகள் சுமாராக இருக்கும். கணவன்-
மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.
பகைமை பாராட்டிய உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
கொடுக்கல்-
வாங்கல்
இந்த ஆண்டின் தனகாரகன் குரு
3-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும், கேது 11-ல் சஞ்சரிப்பதால்
உறவினர்கள் உதவியால் எதையும் சமாளிப்பீர்கள்.
கமிஷன் ஏஜென்ஸி, கான்டிராக்ட் போன்ற துறைகளிலிருப்பவர்களுக்கும் நல்ல லாபம்
அமையும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக
வசூலாகும். பெரிய தொகைகளை முதலீட்டிற்குப்
பயன்படுத்தும்போது கவனம் தேவை.
அரசியல்வாதிகளுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உடனிருப்பவர்களை
அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது, எதிலும் சிந்தித்துச் செயலாற்றுவது
நல்லது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது
காப்பாற்றி அனைவரின் ஆதரவையும் பெறுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருக்கும் உயர்பதவிகளும் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கப்
பெற்று மனமகிழ்ச்சியடைவீர்கள்.
விவசாயிகளுக்கு
மகசூல்
சற்று சுமாராக இருந்தாலும் சந்தையில்
நல்ல விலைபோகும். ஆண்டின் தொடக்கத்தில் பங்காளிகளை
அனுசரித்துச் செல்வதும் வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளில் தலையீடு
செய்யாதிருப்பதும் மிகவும் நல்லது. ஆண்டின்
பிற்பாதியில் தாராள தன வரவுகளும்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும். கால்நடைகளால் ஓரளவுக்கு லாபத்தைப் பெறுவீர்கள். ஆழ்கிணறு போடுவது, புதிய நவீன கருவிகள்
வாங்குவது போன்றவையும் நிறைவேறும்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள்
கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. ஆண்டின் தொடக்கத்தில்
சிறுசிறு பொருளாதாரரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் குரு மாற்றத்திற்குப் பின்
சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும்
ஓரளவுக்கு சிறப்பாக அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும். வராமலிருந்த பணவரவுகளும் தடையின்றி வந்துசேரும்.
மாணவ- மாணவியருக்கு
கல்வியில்
சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் விடாமுயற்சியுடன் செயல் பட்டால் சாதகமான
பலனைப் பெறமுடியும். உடன்பழகும் நண்பர் களிடம் கவனமுடன்
செயல்படுவதும், பெற்றோர், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டுநடப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும்.
விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது மிகவும் கவனமுடன் இருப்பது
நல்லது.
மாதப்பலன்கள்
ஜனவரி
உங்கள் ஜென்ம ராசிக்கு
7-ல் சனியும் அஷ்டம ஸ்தானத்தில்
சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன்
இருப்பது நல்லது. பணவரவுகள் சுமாராகத்தானிருக்கும்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் கடன்களைத் தவிர்க்கலாம். சுபகாரியங் களுக்கான முயற்சிகளிலும் தடைகள் உண்டாகும். தொழில்,
வியாபாரம் செய்பவர்கள், பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி
செய்யநினைக்கும் காரியங்களைத் தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
18-01-2015 காலை 07.33 மணி முதல் 20-01-2015 காலை
08.57 மணி வரை.
பிப்ரவரி
10-ம் தேதி முதல்
செவ்வாய் 11-ல் சஞ்சரிக்கவுள்ளதாலும் 11-ல்
கேது சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் லாபங்களைப்
பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக ஓரளவுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை
சில காலம் தள்ளிவைப்பது நல்லது.
பணவரவுகள் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வேலைப் பளு
சற்று கூடும். ராகு காலங்களில்
துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
14-02-2015 மாலை 05.37 மணி முதல் 16-02-2015 இரவு
08.05 மணி வரை.
மார்ச்
மாதக் கோளான சூரியன்
சாதகமாக சஞ்சரிப்பதாலும் 11-ல் செவ்வாய், சுக்கிரன்
சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்று வீர்கள். தொழில், வியாபாரரீதியாக இருந்த
போட்டிகள் குறையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக அமையும்.
உற்றார்- உறவினர்களும் சாதகமாகச் செயல்படு வார்கள். எதிரிகளும் நட்புக்கரம் நீட்டுவார்கள். தொழில். வியாபாரமும் சிறந்த
நிலையில் நடைபெறும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
14-03-2015 அதிகாலை 01.31 மணி முதல் 16-03-2015 காலை
05.47 மணி வரை.
ஏப்ரல்
3-ல் குரு வக்ரகதியில்
சஞ்சரிப்பதாலும் 11-ல் சூரியன் சஞ்சாரம்
செய்வதாலும் எல்லாவகையிலும் லாபங்களை அடையமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு
பிரச்சினைகள் தோன்றிமறையும். 7-ல் சனி சஞ்சாரம்
செய்வதால் வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது
நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம்
விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. முருகப்பெருமானை
வழிபடவும்.
சந்திராஷ்டமம்:
10-04-2015 காலை 07.28 மணி முதல் 12-04-2015 பகல்
12.57 மணி வரை.
மே
ஜென்ம ராசிக்கு 3-ல்
குருவும் 12-ல் சூரியனும் சஞ்சாரம்
செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளைச் சந்திப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி குறையும். நெருங்கியவர்கள்
வீண் பிரச்சினைகளை உண்டாக்கு வார்கள். பணவரவுகள் சுமாராக இருக்கும் காலம்
என்பதால் வீண் செலவுகளைத் தவிர்ப்பதும்,
பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுப்பதைக்
குறைப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள்
பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால்
நற்பலனை அடையலாம். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
07-05-2015 மதியம் 01.02 மணி முதல் 09-05-2015 மாலை
06.30 மணிவரை.
ஜூன்
ஜென்ம ராசியிலேயே சூரியன்,
செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 3-ல் குரு சஞ்சாரம்
செய்வதாலும் உடல் ஆராக்கியத்தில் கவனமுடன்
இருப்பது, எதிலும்
சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நண்பர்களே விரோதியாக
மாறக்கூடும். பணவரவுகளிலும் இடையூறுகள் உண்டாகும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யவே கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை
ஏற்படும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் வேலைப் பளு கூடும்.
தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
03-06-2015 இரவு 07.49 மணி முதல் 05-06-2015 இரவு
12.18 மணி வரை.
ஜூலை
ராசிக்கு 6-ல் சனியும், 11-ல்
கேதுவும் சஞ்சரிப்பதாலும், மாத பிற்பாதியில் 3-ல்
சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் எதிலும் ஓரளவுக்கு ஏற்றங்களை
அடையமுடியும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள்
அனைத்தும் பூர்த்தியாகும். திருமண
சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் அமையும்.
தொழில், வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் இருந்த
இடம் தெரியாமல் மறையும். முருகப்பொருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
01-07-2015 அதிகாலை 04.17 மணி முதல் 03-07-2015 காலை
07.52 மணி வரை. மற்றும் 28-07-2015 மதியம்
01.50 மணி முதல் 30-07-2015 மாலை 05.19 மணி வரை.
ஆகஸ்ட்
3-ல் சூரியன், செவ்வாயும்
11-ல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக உயர்வுகள் உண்டாகும். பூர்வீக வழியிலும் லாபம்
கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றிகளைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்கள் ஒத்துழைப்புடன் இருப்பார்கள். கொடுத்த வாக் குறுதிகளைக்
காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்திலும் சிறப்பான
லாபம் கிட்டும். சேமிப்பும் பெருகும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்
24-08-2015 இரவு 11.10 மணி முதல் 27-08-2015 அதிகாலை
03.36 மணி வரை.
செப்டம்பர்
ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல்
கேது சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு ஏற்றங்களை
ஏற்படுத்தும் என்றாலும் 4-ல் சூரியன் சஞ்சாரம்
செய்வதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்
களுக்கு ஓரளவுக்கு லாபம் கிட்டும்-. உத்தியோகஸ்தர்களுக்கு
அனுகூலமும் திறமைக்கேற்ற பதவிகளும் கிடைக்கப்பெறும். பணம் கொடுக்கல்- வாங்கல்
சரளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங் கள் நடைபெறும்.
பிரதோஷகால விரதங்கள் மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
21-09-2015 காலை 07.03 மணி முதல் 23-09-2015 மதியம்
01.05 மணி வரை.
அக்டோபர்
ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், குரு
சஞ்சரித்தாலும் 11-ல்
கேதுவும் மாத- பிற்பாதியில் சூரியன்
6-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிர்பார்த்த லாபங்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிரிகளை வெல்லக் கூடிய அளவிற்கு
பலமும் வலிமையும் கூடும். தேவையற்ற பயணங்களைத்
தவிர்ப்பது அலைச்சலைக் குறைக்க உதவும். நினைத்ததை
நினைத்தபடி நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
தட்சிணாமுர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
18-10-2015 மதியம் 01.11 மணி முதல் 20-10-2015 இரவு
08.32 மணி வரை.
நவம்பர்
6-ல் சூரியன், 11-ல்
கேது சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் நிறைய பிரச்சினைகளையும் சமாளிக்க
வேண்டியிருக்கும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறுவதால் எதையும்
சமாளிக்க முடியும். பிறரை நம்பி முன்ஜாமீன்
கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம்
செய்பவர்கள் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே லாபத்தினை அடையமுடியும்.
சிவனை வழிபடுவது, பிரதோஷ கால விரதங்கள்
மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
14-11-2015 மாலை 06.44 மணி முதல் 17-11-2015 அதிகாலை
02.11 மணி வரை.
டிசம்பர்
ராசிக்கு 4-ல் குருவும் 7-ல்
சூரியன், செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்பு யாவும் உண்டாகும் என்றாலும்
11-ல் கேது இருப்பதால் எதையும்
சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல்போட்டே வெற்றிபெற வேண்டியிருக்கும். எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத
சூழ்நிலை உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில்
வீண் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. தட்சிணா மூர்த்தியை
வழிபாடு செய்யவும்.
சந்திராஷ்டமம்:
12-12-2015 அதிகாலை 01.19 மணி முதல் 14-12-2015 காலை
07.54 மணி வரை.
அதிர்ஷ்டம்
அளிப்பவை
எண் -
5, 6, 8; நிறம் - வெண்மை, நீலம்;
கிழமை - வெள்ளி, சனி; கல் -வைரம்; திசை
- தென்கிழக்கு; தெய்வம் - விஷ்ணு, லட்சுமி.
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு இந்த ஆண்டு 7-ல்
சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு
உதவிகள் செய்வதும் நல்லது.
சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபடலாம். குரு பகவானும் சாதகமின்றி சஞ்சாரம்
செய்வதால் தொடர்ந்து வியாழக்கிழமைதோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, தட்சிணாமூர்த்தியை
வழிபாடு செய்வது நல்லது.
No comments:
Post a Comment