Thursday, 16 July 2015

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது.

ஆடி முதல் வெள்ளி. ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது.

ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

ஆடி மாதம் - அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும்.

ஔவை நோன்பு:

ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருப்பதில்லை. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு. இந்த வழிபாடு மதுரை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் கடைபிடிக்கப்படுகிறது.

மகாலட்சுமி வழிபாடு:

ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

சண்டி ஹோமம்:

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஏன்

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் ஏன், இது அயன மாதம் அதாவது சூரியன் தெற்கு நோக்கிய பயணத்தை துவக்கும் காலம். தேவர்களுக்கு மாலைக் காலம் ஆரம்பம் அவர்கள் தூங்கச் செல்லும் காலம். பித்ருக்கள் பூமிக்கு வரும் காலம் பித்ருக்களுக்கு பூஜை செய்ய உகந்த காலம்.

இந்த ஆடி மாதத்தில் மழை நன்றாகப்பெய்து பூமித்தாய் சூல் கொள்ளும் காலம். நதியிலே புதுப்புனல் நுரையுடன் பொங்கி ஓடும் காலம். ஜகன்மாதா, ஜகத்ஜனனி அம்பிகையே சூல் கொண்டதாக கருதி பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடத்தும் காலம்.

ஆடி வெள்ளியும் செவ்வாயும் அம்மனுக்கு விசேஷமானவை. தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெள்ளி தொடங்கி ஞாயிறுவரை ஒவ்வொரு அம்மன் ஆலயத்திலும் கூழ் வார்க்கும் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.

மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்.

மாங்கல்ய பலம் தரும் ஆடி வெள்ளி விரதம்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளுக்கு தனிச் சிறப்பு உண்டு. அதிலும் ஆடி, தை மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாதங்களில் வரும் வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து வீடுகளிலும் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். தங்கள் குல வழக்கப்படி, கணவன் மற்றும் குடும்ப நன்மை வேண்டி அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆடி மாதமே அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. எந்த விதத்திலும் பக்திக்கு இடையூறு இருக்க கூடாது என்றே ஆடி மாதத்தில் திருமணம் உள்ளிட்ட இதர குடும்ப விசேஷங்கள் இடம் பெறுவதில்லை. ஆடி முதல் வெள்ளி மட்டுமின்றி இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக் கிழமைகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் காலை, மாலை என பெண்கள் வீடுகளிலும் கோயில்களிலும் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். அந்த வகையில் இந்த மாத கடைசி வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு அனுசரிக்கப்படுகிறது. மகாலட்சுமிக்கு உகந்த இந்த விரதத்தை அம்பாள்கோயில்ளில் பூஜைகள் செய்து பெண்கள் அனுஷ்டிப்பார்கள். சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்வார்கள்.ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதை வழிபாடும் சிறப்பானது.ஆடி மாதம் முழுவதுமே அம்மன் கோயில்களில் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெறுகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பக்தி மணம் கமழும் மாதமாக போற்றப்படுகிறது

Friday, 3 July 2015

குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) மேஷம்மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) 100/75 (அள்ளித்தர வாராரு ஐந்தாமிடத்து குரு)

மனதில் பட்டதை வெளிப்படுத்தும் மேஷ ராசி அன்பர்களே!

குரு பகவான் ராசிக்கு 4-ம் இடத்தில் இருந்து சிரமங்களைத் தந்திருப்பார். குடும்பத்தில் பல
பிரச்னைகளை உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு ஏற்பட்டு இருக்கும். இப்போது குரு பகவான் ராசிக்கு 5-ம் இடத்துக்கு வருவதால் நன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 2015 டிச.20ல் குரு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரது 9-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.
சனிபகவான் 2015 ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். இது சனியின் பொதுவான பலன்கள். ஆனால் வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம். நல்ல பணவரவு இருந்து கொண்டே இருக்கும். எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் சற்று முயற்சி செய்தால் வீடு, மனை வாங்கலாம். இதற்காக கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு தேவையான சகல வசதியும் கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபோக வாய்ப்புண்டாகும். திருமணம் போன்ற சுப விஷயப் பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும். புது மணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.

பணி சிறப்படையும். வேலைப்பளு பெருமளவில் குறையும். விருப்பமான இட, பணி மாற்றத்தைப் பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தடையின்றி கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழிவகை காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள
மற்றவர்கள் பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்கும்.

மாணவர்கள் முன்னேற்ற பலனைக் காணலாம். கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கப்பெறலாம். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயன்தரும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது.

விவசாயத்தில் வளர்ச்சி காணலாம். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதுஇருக்கும். நெல், கோதுமை, கேழ்வரகு, சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.

பெண்கள் குதூகலமான பலனைக் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு
சாப்பிடுங்கள். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.

குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) ரிஷபம்

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 100/60 (நான்காம் இடமானாலும் நல்லதைச் செய்வார்)

தடையை முறியடித்து வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே!

குருபகவான் இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். ஏனெனில், டிசம்பர் 20-ந் தேதி குருபகவான் கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம். அவர்
குடும்பத்தில் முன்னேற்றம், பொருளாதாரத்தில் வளர்ச்சி, மனநிம்மதி ஆகிய நற்பலன்களைத் தருவார். மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக அமையும். சனிபகவான் ஜூன் 12 அன்று வக்கிரம் அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம் அடைந்து 6-ம் இடத்தில் இருக்கும் சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்வார். குறிப்பாக, முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிவான பலனை காணலாம்.கேதுவின் பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது. நல்ல பணப்புழக்கம் இருக்கும். பகைவர்களின் தொல்லை இருக்காது. எனவே எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்த்தால் கெடுபலன்கள் அறவே இருக்காது.குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். உறவினர் வகைகளில் விரோதம் ஏற்படலாம். எனவே, அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். கணவன், மனைவி விட்டுக் கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் தடை ஏற்பட்டு விலகலாம்.


தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரயம் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானம் காணலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம் ஆகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றல் ஆகலாம். அது கூட எதிர்காலத்துக்கு நல்லதாக அமையலாம்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார நிலையில் எந்த பிற்போக்கான நிலையும் இருக்காது.

சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். விரும்பிய பாடம் கிடைக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.

விவசாயத்தில் நல்ல லாபம் காணலாம். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான
மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. கால்நடை செல்வம் பெருகும்.

பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். பொன்,பொருள் வந்து சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். ராகுவால் மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால்
திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள்.
லட்சுமி நரசிம்மரை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer