Showing posts with label குரு பெயர்ச்சி பலன்கள். Show all posts
Showing posts with label குரு பெயர்ச்சி பலன்கள். Show all posts
Sunday, 12 July 2015
Friday, 3 July 2015
குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) மேஷம்
மேஷம்:
(அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
100/75 (அள்ளித்தர வாராரு ஐந்தாமிடத்து குரு)
மனதில்
பட்டதை வெளிப்படுத்தும் மேஷ ராசி அன்பர்களே!
குரு பகவான் ராசிக்கு 4-ம்
இடத்தில் இருந்து சிரமங்களைத் தந்திருப்பார்.
குடும்பத்தில் பல
பிரச்னைகளை
உருவாக்கி இருப்பார். உறவினர்களிடையே விரோதம் வந்திருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு
ஏற்பட்டு இருக்கும். இப்போது குரு பகவான்
ராசிக்கு 5-ம் இடத்துக்கு வருவதால்
நன்மை நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்பத்தில்
மகிழ்ச்சி நிலைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி
சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால்
மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
2015 டிச.20ல் குரு சிம்மத்தில்
இருந்து கன்னி ராசிக்கு செல்கிறார்.
இது சிறப்பான இடம் என்று சொல்ல
முடியாது. ஆனால் அவரது 9-ம்
இடத்துப்பார்வை சாதகமாக அமையும்.
சனிபகவான்
2015 ஜூன் 12ல் வக்கிரம் அடைந்து
துலாம் ராசிக்கு மாறுகிறார். அதாவது பின்னோக்கி நகர
ஆரம்பிக்கிறார். பொதுவாக இந்த இடத்தில்
இருக்கும் போது சனி குடும்பத்தில்
பல்வேறு பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். இது
சனியின் பொதுவான பலன்கள். ஆனால்
வக்ரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது. அந்த
வகையில் சனிபகவான் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலன்களை தரமாட்டார்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து
விரிவான பலனை காணலாம். நல்ல
பணவரவு இருந்து கொண்டே இருக்கும்.
எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து
வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். சிலர் சற்று முயற்சி
செய்தால் வீடு, மனை வாங்கலாம்.
இதற்காக கடன் வாங்க நேரிடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே
அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுக்கு
தேவையான சகல வசதியும் கிடைக்கும்.
தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு
குடிபோக வாய்ப்புண்டாகும். திருமணம் போன்ற சுப விஷயப்
பேச்சில் நல்ல முடிவு கிடைக்கும்.
புது மணத் தம்பதியருக்கு குழந்தை
பாக்கியம் கிடைக்கும். உறவினர் மத்தியில் நற்பெயர்
உண்டாகும்.
பணி சிறப்படையும். வேலைப்பளு பெருமளவில் குறையும். விருப்பமான இட, பணி மாற்றத்தைப்
பெறலாம். உங்கள் ஆற்றல் மேம்பட்டு
இருக்கும். பதவி உயர்வு, சம்பள
உயர்வு போன்றவை தடையின்றி கிடைக்கும்.
வியாபாரத்தில்
லாபத்துக்கு குறை இருக்காது. வருமானம்
அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க
வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களிடம்
அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை
தக்க வைத்துக் கொள்ளவும். புதிய வியாபாரம் தற்போது
தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் உங்கள் அறிவை பயன்படுத்தி
முதல் போடாமல் முன்னேற வழிவகை
காணுங்கள். அதுவும் குடும்பத்தில் உள்ள
மற்றவர்கள்
பெயரில் தொடங்கவும். அரசு வகையில் அனுகூலமான
போக்கு இருக்கும்.
மாணவர்கள்
முன்னேற்ற பலனைக் காணலாம். கடந்த
கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கப்பெறலாம்.
போட்டிகளில் வெற்றி கிடைக்கும். ஆசிரியர்களின்
அறிவுரை பயன்தரும்.
கலைஞர்களுக்கு
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவு குறையாது.
விவசாயத்தில்
வளர்ச்சி காணலாம். கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியதுஇருக்கும். நெல்,
கோதுமை, கேழ்வரகு, சோளம் மற்றும் மானாவாரி
பயிர்கள் நல்ல வருமானத்தை தரும்.
அதிக செலவு பிடிக்கும் பயிரை
தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக
இருக்கும். ஆனால் புதிய வழக்கு
எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள்
குதூகலமான பலனைக் காண்பர். கணவரின்
அன்பு கிடைக்கும். உங்கள் மூலம் குடும்பம்
சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து
பொன், பொருள் வரலாம். பிள்ளை
வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல்
நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்:
சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கலாம். பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். துர்க்கை
வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு
சாப்பிடுங்கள்.
ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
குரு பெயர்ச்சி பலன் (06.07.15 முதல் 01.08.16 வரை) ரிஷபம்
ரிஷபம்:
(கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) 100/60 (நான்காம் இடமானாலும்
நல்லதைச் செய்வார்)
தடையை முறியடித்து வெற்றி காணும் ரிஷப
ராசி அன்பர்களே!
குருபகவான்
இதுவரை 3-ம் இடத்தில் இருந்தார்.
அது அவ்வளவு சிறப்பான நிலை
அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது
தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும்
நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு
4-ம் இடமான சிம்மத்திற்கு மாறுகிறார்.
இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது
என்று சொல்ல முடியாது. ஆனால்
கடந்த கால பலன்களில் இருந்து
இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல்
இருக்கும்போது மன உளைச்சலையும், உறவினர்
வகையில் வீண் பகையையும் உருவாக்குவார்
என்பது ஜோதிட வாக்கு. ஆனால்
அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம்.
ஏனெனில், டிசம்பர் 20-ந் தேதி குருபகவான்
கன்னி ராசிக்கு அதிசாரமாகச் செல்கிறார். இதுசிறப்பான இடம். அவர்
குடும்பத்தில்
முன்னேற்றம், பொருளாதாரத்தில் வளர்ச்சி, மனநிம்மதி ஆகிய நற்பலன்களைத் தருவார்.
மேலும் குருவின் 5 மற்றும் 7-ம் இடத்துப்பார்வைகள் சிறப்பாக
அமையும். சனிபகவான் ஜூன் 12 அன்று வக்கிரம்
அடைந்து, துலாம் ராசிக்கு மாறுகிறார்.
அதாவது பின்னோக்கி நகர ஆரம்பிக்கிறார். வக்கிரம்
அடைந்து 6-ம் இடத்தில் இருக்கும்
சனி பகவான் உங்களுக்கு எண்ணற்ற
நன்மைகளைச் செய்வார். குறிப்பாக, முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும்.
மேற்கண்ட கிரக நிலையில் இருந்து
விரிவான பலனை காணலாம்.கேதுவின்
பலத்தால் பொருளாதார வளத்திற்கு எந்த குறையும் இருக்காது.
நல்ல பணப்புழக்கம் இருக்கும். பகைவர்களின் தொல்லை இருக்காது. எனவே
எடுத்த எந்த காரியத்தையும் சிறப்பாக
செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு,
மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை
தவிர்த்தால் கெடுபலன்கள் அறவே இருக்காது.குடும்பத்தில்
வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம்.
உறவினர் வகைகளில் விரோதம் ஏற்படலாம். எனவே,
அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.
கணவன், மனைவி விட்டுக் கொடுத்து
போகவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில்
தடை ஏற்பட்டு விலகலாம்.
தொழிலதிபர்கள்
மற்றும் வியாபாரிகளுக்கு இருந்து வந்த தொய்வு
நிலை மாறும். வீண் அலைச்சல்
இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம்
காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரயம் குறைந்து,
சேமிப்பு அதிகரிக்கும். நல்ல வருமானம் காணலாம்.
வேலை இன்றி இருப்பவர்கள் தொழில்
தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை
காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால்
முறியடிப்பீர்கள். பெண்கள் மிகவும் உறுதுணையாக
இருப்பர்.
பணியாளர்களுக்கு
வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து
போகவும். சம்பள உயர்வு கிடைக்கும்.
ஆனால், எதிர்பார்த்த பதவி உயர்வு தாமதம்
ஆகலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக
இருப்பர். சிலர் எதிர்பாராத இடத்துக்கு
மாற்றல் ஆகலாம். அது கூட
எதிர்காலத்துக்கு நல்லதாக அமையலாம்.
கலைஞர்கள்
சுமாரான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு
எளிதாக கிடைக்காது. அதே நேரம் பொருளாதார
நிலையில் எந்த பிற்போக்கான நிலையும்
இருக்காது.
சமூக நல சேவகர்கள், அரசியல்வாதிகள்
நல்ல வசதியுடன் காணப்படுவர். எதிர்பார்த்த பொறுப்பு கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
மாணவர்கள்
சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும்.
ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும்.
விரும்பிய பாடம் கிடைக்க தீவிர
முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
விவசாயத்தில்
நல்ல லாபம் காணலாம். புதிய
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான
மகசூலை
பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள்
வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க
வாய்ப்பு உண்டு. கால்நடை செல்வம்
பெருகும்.
பெண்கள்
மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரிடம் விட்டுக் கொடுத்துபோகவும். பொன்,பொருள் வந்து
சேரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக
இருக்கும். உடல்நலம் சுமாராகவே இருக்கும். ராகுவால் மனதில் ஏனோ இனம்
புரியாத வேதனை குடி கொண்டு
இருக்கும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால்
திருச்செந்தூர்,
அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள்
படிக்க உதவுங்கள்.
லட்சுமி
நரசிம்மரை நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
Subscribe to:
Posts (Atom)