அருள்மிகு
முருகப்பெருமான்
சுப மங்களம் பக்தித் துதி.
மங்களம் மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்
பழனிமலை பாலனுக்கு ஜெய மங்களம்
பார்வதியின் மைந்தனுக்கு சுப மங்களம்
விநாயகன் தம்பிக்கு ஜெய மங்களம்
வெற்றி வடிவேலனுக்கு சுப மங்களம்
பத்துமலை வேலனுக்கு ஜெய மங்களம்
சுவாமிமலை சுப்பனுக்கு சுப மங்களம்
அரோஹரா சுவாமிக்கு ஜெய மங்களம்
அறுபடை முருகனுக்கு சுப மங்களம்
ஆயிக்குடி முருகனுக்கு ஜெய மங்களம்
குன்றத்தூர் குமரனுக்கு சுப மங்களம்
மைலத்து மாலனுக்கு ஜெய மங்களம்
திருப்போரூர் தீரனுக்கு சுப மங்களம்
வடபழனி ஆண்டவருக்கு ஜெய மங்களம்
சிறுவாபுரி சீலனுக்கு சுப மங்களம்
திருச்செந்தூர் குருவுக்கு ஜெய மங்களம்
திருத்தணிகை வேலனுக்கு சுப மங்களம்
கந்தசாமி கடவுளுக்கு ஜெய மங்களம்
கதிர்காம கந்தனுக்கு சுப மங்களம்
கலியுக வேலனுக்கு ஜெய மங்களம்
கண்கண்ட வேந்தனுக்கு சுப மங்களம்
நடந்துவரும் பக்தருக்கு ஜெய மங்களம்
பார்புகழும் முருகனுக்கு சுப மங்களம்
மங்களம் மங்களம் ஜெய மங்களம்
மங்களம் மங்களம் சுப மங்களம்.
No comments:
Post a Comment