சிம்மம்
(மகம்,
பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
எதிலும்
தனித்துநின்று போராடி வெற்றிபெறும் ஆற்றல்கொண்ட
சிம்ம ராசி நேயர்களே!
இந்த ஆண்டு முழுவதும் சனி
பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு
சுகஸ்தானமான 4-ல் சஞ்சரிக்க இருப்பதால்
உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இதனால்
உங்களுக்குத் தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எல்லாம் இருந்தும் அனுபவிக்க
முடியாத சூழ்நிலை, நேரத்திற்கு உணவு உண்ண இயலாத
நிலை உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் விரய
ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்கும் குரு
பகவான் 05-07-2015-க்குப் பிறகு ஜென்ம
ராசிக்கு மாறுதலாகிறார். இந்த வருடம் நீங்கள்
எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவதே
நல்லது. தயாள குணம்கொண்ட நீங்கள்
பண விஷயத்தில் சற்று கவனமுடனிருப்பது, பிறரை
நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அசையா சொத்துகளால்
அனுகூலம் உண்டு என்றாலும் அதை
சில தடைகளுக்குப் பின்பே பெறமுடியும். குடும்பத்தில்
சிறுசிறு பிரச்சினைகள் உண்டாக உங்களின் முன்கோபமே
காரணமாக இருக்கும் என்பதால் முன்கோபத்தையும் முரட்டு சுபாவத்தையும் சற்று
தளர்த்தி அனைவரிடமும் அன்பாக நடந்துகொண்டால் குடும்ப
ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உங்களின் மத்தியஸ்தத்திற்கு பலரிடம் நல்ல மதிப்பு
உண்டென்றாலும் இந்த வருடம் பிறர்
விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும்.
தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை
நிலவினாலும் பொருட்தேக்கமின்றி லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களின் உதவி ஓரளவுக்கு முன்னேற்றத்தை
ஏற்படுத்தும். உத்தியோகஸ்தர்கள் கௌரவமான பதவிகளை வகித்தாலும்
மேலதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானம் தேவை. கிரகங்களின்
சாதகமற்ற சஞ்சாரத்தால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை
சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது.
உடல் ஆரோக்கியம்
உங்களின்
உடல் ஆரோக்கியமானது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். அடிக்கடி
சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளாலும் அடிக்கடி
மருத்துவச் செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் இடையூறு, நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளால் மன உளைச்சல்கள் போன்றவை
உண்டாகும். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. நேரத்திற்கு உணவு
உண்பதின்மூலம் வயிறு
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுபட முடியும்.
குடும்பம்,
பொருளாதார நிலை
குடும்பத்திலுள்ளவர்களிடம்
அனுசரணையாக நடந்துகொள்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. உங்களுக்கு இந்த
வருடம் முழுவதும் குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால்
பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள்
ஏற்படுமென்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட்டால் அனைத்து நற்பலன்களையும் அடையமுடியும்.
திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை
மேற்கொண்டால் அதிக அலைச்சல்களையும் அடைவீர்கள்.
பூர்வீகச் சொத்துகளால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு
அனுகூலப் பலன்களைப் பெறுவீர்கள்.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள்
தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது,
பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம்.
எதிர்பார்க்கும் உயர்பதவிகள் தாமதப்பட்டாலும் இருக்கும் பதவிகளுக்கு பங்கம்வராமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. பிறர்செய்யும் தவறுகளுக்கும்
சில நேரங்களில் நீங்கள் பொறுப்பேற்கவேண்டியிருக்கும். கொடுத்த பணிகளைக் குறித்த
நேரத்தில் செய்துமுடிக்க முடியாத காரணத்தால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது
நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்கள்
விருப்பத்தை சற்று தள்ளிவைப்பது உத்தமம்.
தொழில்,
வியாபாரம்
தொழில்,
வியாபாரம் செய்பவர்கள் போட்டி, பெறாமைகளை சமாளித்தே
லாபத்தைப் பெறமுடியும். புதிய வாய்ப்புகள் வந்தாலும்
அதை பிறர் தட்டிச்செல்வதால் மனநிம்மதி
குறையும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி
செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுத்துவது
நல்லது. அரசு வழியில் சிறுசிறு
இடையூறுகள் நிலவினாலும் அதையும் சமாளிக்கும் ஆற்றலைப்
பெறுவீர்கள். வெளியூர், வெளிநாடு தொடர்புடையவற்றால் சுமாரான லாபத்தை அடையமுடியும்.
முடிந்த வரை கூட்டாளிகளை அனுசரித்துச்
செல்வது. தொழிலாளர்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.
பெண்களுக்கு
உங்களின்
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது
நல்லது. கணவன்- மனைவியிடையே சிறுசிறு
கருத்து வேறுபாடுகளும் உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்களும் உண்டாகும் என்றாலும் நீங்கள் எதிலும் விட்டுக்கொடுத்து
நடந்துகொண்டால் ஒற்று மையை நிலைநாட்டமுடியும்.
பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்
தாலும், செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சில
நேரங்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். வீடு,
மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும் பூர்வீகச் சொத்துகளால் வீண் செலவுகளும் ஏற்படும்.
பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் பளு சற்று
கூடும்.
கொடுக்கல்-
வாங்கல்
இந்த ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச்
சனி நடப்பதாலும், குரு பகவான் சாதகமின்றி
சஞ்சரிப்பதாலும் பணம் கொடுக்கல்- வாங்கல்
போன்றவற்றில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது
நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதால்
வீண் விரயங்களைச் சந்திப்பீர்கள். கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட்
போன்ற துறைகளிலிருப்போர் ஏற்ற இறக்கமான பலன்களையே
பெறமுடியும். பண விஷயத்தில் பிறரை
நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்தல் அவசியம். கொடுத்த கடன்களை சிறிது
சிறிதாக வசூலித்துவிட முடியும்.
அரசியல்வாதிகளுக்கு
அரசியல்வாதிகள்
தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது நல்லது. உடனிருப்பவர்களை
அனுசரித்து நடந்துகொண்டால் தேவையற்ற வதந்திகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருந்தாலும் நிதானத்தைக் கையாண்டால் நிச்சயம் வெற்றி உங்களுக்கே. மக்களின்
ஆதரவும் சிறப்பாக அமையும்.
விவசாயிகளுக்கு
விவசாயிகளுக்கு
விளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். நீர் பற்றாக்குறை, வரப்பு
தகாரறு என சில பிரச்சினைகளை
சந்தித்தாலும் பட்ட பாட்டிற்கான பலன்
உங்களுக்குக் கிடைத்துவிடும். அரசு வழியிலும் எதிர்பாராத
உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியினை அடைவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். புதிய நவீன கருவிகள்
வாங்குவது, பூமி, மனை வாங்குவது
போன்றவற்றில் வில்லங்கம் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு
கலைஞர்கள்
தகுந்த வாய்ப்புகளுக்காகக் காத்திருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவது நல்லது. பொருளாதார நிலை
சுமாராக இருந்தாலும் சுகவாழ்வு, சொகுசு வாழ்வுக்கு பஞ்சம்
ஏற்படாது. பத்திரிகைத் துறையில் உள்ளவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வெளியூர், வெளிநாடுகளுக்குச்
செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன்களும் குறையும்.
மாணவ- மாணவியருக்கு
கல்வியில்
சற்று மந்த நிலை நிலவும்.
ஞாபக மறதி, கல்வியில் முழுமையாக
ஈடுபாடு காட்டமுடியாத நிலை போன்றவை உண்டாகக்
கூடும். பெற்றோர், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சற்று
அனுசரித்து நடப்பது நல்லது. விளையாட்டுப்
போட்டிகளில் ஈடுபடும்போதும் சற்று கவனமுடன் செயல்படுவது
நல்லது. பயணங்களிலும்
நிதானம் தேவை.
மாதப் பலன்கள்
ஜனவரி
ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 4-ல்
சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு
என்பதால் தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியன்
6-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப்
பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற
பிரச்சினைகளும் நெருங்கியவர்களால் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்.
முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொண்டு அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணவரவுகள்
தேவைக்கேற்றபடி இருக்கும். அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:
24-01-2015 காலை 09.14 மணி முதல்26-01-2015 பகல்
11.48 மணி வரை.
பிப்ரவரி
பஞ்சம ஸ்தானமான 5-ல்
புதனும் 6-ல் சூரியனும் சஞ்சரிக்கவுள்ளதால்
எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெறுவீர்கள். என்றாலும் எதிலும் சற்று கவனமுடனிருப்பது
நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கும்
பொறுப்பேற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள்
அதிகரிக்கும். குடும்பத்திலும் தேவையற்ற வாக்குவாதங்களும் ஒற்றுமைக் குறைவுகளும் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப்பெறுவதால்
தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். முருகனை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:
20-02-2015 இரவு 07.15 மணி முதல் 22-02-2015 இரவு
08.01 மணி வரை.
மார்ச்
குடும்ப
ஸ்தானமான 2-ல் ராகுவும் அஷ்டம
ஸ்தானமான 8-ல் செவ்வாய், சுக்கிரன்,
கேதுவும் சஞ்சாரம் செய்வதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களும்,
அசையும்- அசையா சொத்துகளால் வீண்
விரயங்களும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி குறைவதோடு, நெருங்கியவர்களாலும்,
வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம்செலுத்
துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு
கூடும். அம்மன் வழிபாடு, முருக
வழிபாடு மேற்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
20-03-2015 காலை 06.34 மணி முதல்22-03-2015 காலை
06.29 மணி வரை.
ஏப்ரல்
அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியனும் விரய
ஸ்தானத்தில் குருவும் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத வீண் விரயங்கள் உண்டாகும்.
பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பதும்
நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து
வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு
அதிகரிப்பதுடன் உயரதிகாரிகளிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது
உத்தமம். சிவ வழிபாடு நல்லது.
சந்திராஷ்டமம்:
16-04-2015 மாலை 04.55 மணி முதல்18-04-2015 மாலை
05.22 மணி வரை.
மே
பாக்கிய
ஸ்தானமான 9-ல் சூரியனும் 10-ல்
சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் எதையும்
சமாளிக்கக்கூடிய ஆற்றலுண்டாகும். பணவரவு தேவைக்கேற்றபடி இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனமெடுப்பது நல்லது.
பூர்வீகச் சொத்துக்களால் ஓரளவுக்கு லாபம் அமையும். குடும்பத்திலிருந்த
பிரச்சினைகள் படிப்படியாக விலகும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு
செய்யாமலிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில்
தடைகளுக்குப்பின் வெற்றி கொடுக்கும். தொழில்,
வியாபாரம் சிறப்படையும். ஆஞ்சனேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்:
13-05-2015 இரவு 12.50 மணி முதல் 16-05-2015 அதிகாலை
02.41 மணி வரை.
ஜூன்
இம்மாதம்
ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய்
சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் லாப
ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய்
சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் தொழில், வியாபாரரீதியாக நல்ல
லாபத்தைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள்
எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகள் சுமாராக இருக்குமென்பதால் ஆடம்பரச்
செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு
செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:
10-06-2015 காலை 06.39 மணி முதல்12-06-2015 காலை
09.31 மணி வரை.
ஜூலை
லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய்,
புதன் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். கொடுக்கல்-
வாங்கலில் சற்று கவனமுடனிருப்பது நல்லது
பணவரவுகள் தேவைக்கேற்றப்படி இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
புத்திர வழியில் அடிக்கடி மனசஞ்சலங்கள்
தோன்றிமறையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். அம்மன், விநாயகர் வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்:
07-07-2015 பகல் 12.08 மணி முதல் 09-07-2015 மதியம்
03.07 மணி வரை.
ஆகஸ்ட்
முயற்சி ஸ்தானமான 3-ஆம்
வீட்டில் சனி சஞ்சரிப்பது சாதகமான
அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். என்றாலும் விரய ஸ்தானத்தில் சூரியன்,
செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சுகவாழ்வு சிறப்பாக
இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சிறுசிறு
கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது.
பணவரவுகள் சுமாராக இருக்கும். உடல்
ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனம்
தேவை. சிவ வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம்
03-08-2015 இரவு 07.11 மணி முதல் 05-08-2015 இரவு
08.57 மணி வரை.
செப்டம்பர்
ஜென்ம ராசியில் குருவும் 2-ல் ராகுவும் 12-ல்
செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆராக்கியத்தில் மிகவும்
கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. ஆடம்பரச் செலவுகளைக்
குறைப்பதும், தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் உத்தமம். பணவரவுகள் சுமாராகத் தானிருக்கும். நெருங்கியவர்களே துரோகம் செய்யக்கூடுமென்பதால் உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடனிருப்பது
நல்லது. எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே வெற்றியினைப் பெறமுடியும்.
துர்க்கை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம்:
31-08-2015 காலை 04.39 மணி முதல் 02-09-2015 அதிகாலை
04.48 மணி வரை. மற்றும் 27-09-2015 பகல்
03.37 மணி முதல் 29.09.2015 மதியம் 03.00 மணி வரை.
அக்டோபர்
ஜென்ம ராசியில் குரு, செவ்வாயும், 4-ல்
சனியும் சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு
என்றாலும் மாத பிற்பாதியில் 3-ல்
சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதால் ஓரளவுக்கு எதிலும் வெற்றிகளைப் பெறமுடியும்.
கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாகக்
குறையும். பொருளாதார நிலை சற்றே உயரும்.
எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளைத் தாண்டி வெற்றிபெறுவீர்கள். குடும்பத்திலும்
நிம்மதியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்களிடமிருந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்:
25-10-2015 அதிகாலை 02.18 மணி முதல் 27-10-2015 அதிகாலை
02.12 மணி வரை.
நவம்பர்
இம்மாத
முற்பாதி வரை சூரியன் 3-ல்
சஞ்ரிப்பது ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்துமென்றாலும்
ஜென்ம ராசியில் குருவும், 4-ல் சனியும் சஞ்சரிப்பதால்
வீண் அலைச்சல், டென்ஷன் உண்டாகும். பணவரவுகள்
ஏற்ற இறக்கமாகத்தானிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்களுக்கான
முயற்சிகளில் தடைகள் உண்டாகும். தொழில்,
வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப்படும்.
சனி பகவானை வழிபடுவதன் மூலம்
நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம்:
21-11-2015 காலை 10.48 மணி முதல் 23-11-2015 மதியம்
12.07 மணி வரை.
டிசம்பர்
ஜென்ம ராசியில் குருவும் 2-ல் செவ்வாய், ராகுவும்
4-ல் சூரியன், சனியும் சஞ்சாரம் செய்வதால்
நீங்கள் எதிலும் ஒருமுறைக்கு பலமுறை
சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியரீதியாக
பாதிப்புகளும் அதனால் மருத்துவச் செலவுகளும்
உண்டாகும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும்.
பணவரவுகளிலும் நெருக்கடிகள் உண்டாவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள்
ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அம்மன் வழிபாடு
செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்
18-12-2015 மதியம் 04.48 மணி முதல்20-12-2015 இரவு
07.44 மணி வரை.
அதிர்ஷ்டம்
அளிப்பவை
எண் -
1, 2, 3, 9; நிறம் - வெள்ளை, சிவப்பு; கிழமை
- ஞாயிறு, திங்கள்; கல் - மாணிக்கம்; திசை-
கிழக்கு; தெய்வம் - சிவன்.
பரிகாரம்
சிம்ம ராசியில் பிறந்த உங்களுக்கு சனி
இந்த ஆண்டு 4-ல் சஞ்சரிப்பதால்
அர்த்தாஷ்டமச் சனி
நடைபெறுகிறது. இதனால்
சனிக் கிழமைதோறும் சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது, எள் எண்ணெயில் தீபமேற்றுவது,
ஊனமுற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவிகள்
செய்வது நல்லது. வரும் 05-07-2015 வரை குரு
விரய ஸ்தானத்திலும் பின்பு ஜென்ம ராசியிலும்
சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைச் செய்வது, குருப்ரீதி தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாற்றி
நெய் வழிபடுவது நல்லது. அந்தணர்களுக்கு தானங்கள்
செய்வது உத்தமம். 2-ல் ராகு, 8-ல்
கேது சஞ்சாரம் செய்வதால் துர்க்கை வழிபாடு, விநாயகர்
வழிபாடு மேற்கொள்வது உத்தமம்.
No comments:
Post a Comment