Friday, 5 December 2014

கானகத்தில் புலியிருக்க



சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் பக்தி துதிப் பாட்டு.

 

கானகத்தில் புலியிருக்க

புலியும் சேர்ந்து துணைக்கு வர 

போகணும் சபரிமலை போகணும்

போகணும் சபரிமலை போகணும் 

 

வனத்தில் பல குயிலிருக்க 

குயிலும் சேர்ந்து குரல் கொடுக்க 

கூவணும் ஐயன் பெயர் கூவணும்

கூவணும் ஐயன் பெயர் கூவணும் 

 

யானையடிப் பாதையிலே யானை பிளிரனும்

அந்த பிளிறல் பம்பை கணபதி ஓங்காரமாகனும்

ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என் 

வாழ்விலே எல்லாம் ஐயனப்பா 

ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என் 

வாழ்விலே எல்லாம் ஐயனப்பா 

 

போகும் வழி யாவும் பல இடர் கடக்கணும் 

சபரி காட்டினிலும் மேட்டினிலும் நீ நடக்கணும் 

ஐயப்பனின் இருமுடியை தலை சுமக்கணும்  

ஐயன் நாமங்களை பக்தர்களின் மனம் நினைக்கணும் 

காட்டினிலே வழி காட்டிடுவான் - அவன் சன்னதியில் அருள் கூட்டிடுவான்

காட்டினிலே வழி காட்டிடுவான் - அவன் சன்னதியில் அருள் கூட்டிடுவான் 

ஏற்றிடுவான் தூக்கிடுவான்

வாழ்வில் கரை சேர்த்திடுவான்

ஸ்வாமியப்பா ஐயப்பா சரணமப்பா - என் 

வாழ்விலே எல்லாம் ஐயனப்பா

 

பரமேஸ்வரன் பரந்தாமனுடன் சேர்ந்ததினாலே 

இந்த பூமியிலே ஹரிஹரசுதன் அவதரித்தானே 

காட்டினிலே மஹிஷியினை சம்ஹாரித்தானே 

கற்பூர ஜோதியாக சபரியில் 

அவன் ஜொலிப்பானே

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து - ஐயன் 

திருவருளோ எல்லோருக்கும் உண்டு

ஜாதிமத பேதமெல்லாம் கடந்து - ஐயன் 

திருவருளோ எல்லோருக்கும் உண்டு 

சிவபக்தரும் ஹரிபக்தரும்

ஐயப்பன் சன்னதியில் ஒன்று. (கா).

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer