அவருமில்லே இவருமில்லே ஐயப்போ,
எங்க ஆதரவே நீங்க தானே ஐயப்போ,
கட்டுமுடி கட்டிகிட்டோம் ஐய்யப்பா, எங்க
கவனமெல்லம் நீங்க தானே நீங்க தானே
ஐய்யப்பா,
(அவருமில்லே…)
வீடுவாசல்
மறந்துபுட்டோம் ஐய்யப்பா,
புது விளையாட்டு
பாற்க்க வந்தோம் ஐய்யப்பா
(அவருமில்லே…)
,காடு-கழனி
மறந்துபுட்டோம் அய்யப்பா- சபரி
காடு மட்டும்
நினைச்சுகிட்டோம் ஐய்யப்பா,
(அவருமில்லே…)
குதிரை-குருளை வாகனம்தான்
ஐய்யப்பா- சபரியை
கும்பிட்டு
நினைச்சுகிட்டோம் ஐய்யப்பா
(அவருமில்லே…)
கன்னி
சாமி-கடுத்தசாமி ஐய்யப்பா, நாங்க
கலவையான
கூட்டமப்பா ஐய்யப்பா,
(அவருமில்லே…)
பாட்டுபாடி
பகனைபாடி ஐய்யப்பா, நாங்க
ஊரு மலை தண்டி வாரோம்
ஐய்யப்பா,
(அவருமில்லே…)
காட்டில் ஒரு
மேடு-பல்லம் ஐய்யப்பா, இந்த
வழியில் கூட
இருக்கிறத பாறப்பா,
(அவருமில்லே…)
மலையாள கறையை
தொட்டு ஐய்யப்பா, நாங்க
அடைமழையா
கிளம்பி வாறோம் ஐய்யப்பா,
(அவருமில்லே…)
உன் பலம் தான் பெரியதப்பா
ஐய்யப்பா, இதை
உணர்த்தும்
உந்தன் பெரியபாதை ஐய்யப்பா,
(அவருமில்லே…)
கோட்டயத்தை
தண்டுகிறோம் ஐயப்பா, உந்தன்
பாட்டு இப்போ
பலமாச்சு ஐய்யப்பா,
(அவருமில்லே…)
எரிமேலி வந்து இருக்கோம்
ஐய்யப்பா – நாங்க
பேட்டைதுள்ளி ஆட
வேணும் ஐயப்பா.
(அவருமில்லே…)
பெறிய பாதை
திரக்குதப்பா ஐய்யப்பா, நாங்க
காடு போக கூட
வாறோம் ஐய்யப்பா
(அவருமில்லே…)
No comments:
Post a Comment