Showing posts with label astrology. Show all posts
Showing posts with label astrology. Show all posts

Thursday, 1 December 2016

எவரை எந்த கிரகமும் ஒன்றுசெய்துவிடமுடியாது

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துகொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றுசெய்துவிடமுடியாது.

 குலதெய்வத்திற்க்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தெய்வங்கள் மாறலாம் ஆனால் அதன் சக்தி ஒரே அளவில் இருக்கும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் நீங்கள் எப்பேர்பட்ட மகானை வைத்து பூஜை செய்தாலும் ஒரு புண்ணியமும் கிடைக்காது. பிற தெய்வத்தை வணங்குங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் பிறதெய்வத்தை வணங்கினாலும் உங்களின் குலதெய்வத்தை வணங்கிய பிறகு நீங்கள் பிற தெய்வங்களின் கோவிலுக்கு சென்றால் மட்டும் அந்த தெய்வத்தின் புண்ணியம் கிடைக்கும

 உங்களது குலதெய்வம் கோவிலுக்கு மாதம் ஒரு முறையோ தங்கள் வசதி ஏற்ப வருடம் ஒரு  முறையோ  கண்டிப்பாக . நேரில் சென்று பூஜை செய்துகொள்ளவேண்டும்.மற்ற கோவில்களுக்குச் சென்று பூஜை செய்வதற்கும்,குல தெய்வத்தை வணங்குவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.மற்ற கோவில்களுக்குச் செல்லும்போது தேங்காய்,பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள்.ஆனால் குலதெய்வத்தை வழிபடச்செல்லும்போது கூடுதலாக ஒரு கடமையும் இருக்கின்றது.உங்களது குலதெய்வம் கோவிலுக்குச் சென்றதும் பொங்கல்வைத்து படையல் போட்டு வணங்கியப்பின்னரே,அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும
அவரவர் சம்ப்ரதாயம் ஏற்ப பூஜை செய்யலாம் .இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும்.

குலதெய்வம் படத்தை வாங்கிவந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ள வேண்டும்.உங்களது மணிப்பர்ஸில் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.வீடு கட்டுவதற்கும்,திருமணம் செய்வதற்கும் முன்பு குலதெய்வத்தை வழிபட்டப்பின்னரே செயலில் இறங்கிட வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை.

இந்த பதிவின் நோக்கம்  தங்கள் வாழ்கையில் ஆனந்த்தமாய் வாழ வேண்டும் என்று நல்ல என்னத்தில் தான். செய்கிறேன்,ஆன்மிகம் என்பது கடவுளை அடையும் வழி அதை அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம்

Tuesday, 29 November 2016

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1

 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2

 ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம பூஜங்க சயாங்கனாயா 3

 ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவஹரி நீலமயி விபாதி

காமப்ரதா பகவதோபி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4

 மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தனாயா: 5

 மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில்

 இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேன

மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்

மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

 ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவீ ப்ரமதான தட்சம்

ஆனந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷன் நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா 7

 அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யாத்ரி விஷ்டப பதம் ஸ லபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா 8

 எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம்

அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷன்ணே

துஷ்கர்ம தர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயனீ நயனாம் புவாஹ: 9

 எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி சாகம்

பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய மேலிஷீ ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரி புவனைக

குரோஸ்தருண்யை! 10

 திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை 11

 நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாலீக நிபானனாயை

நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

 பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை

நமோஸ்து பூ மண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதி தயாபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

 முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

 சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை

நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

 சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தனானி

ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாணி

த்வத் வந்தனானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரனிசம் கலயந்து மான்யே 16

 எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

 தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தராம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் 18

 சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாம்னு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீம் அக்ஷே

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம் 19

 பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை

வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்

கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

 எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்

த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குரிதர பாக்ய பாகினோ

பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

 மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய ‘கனகதாரா ஸ்தோத்திரத்தினால்’, நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

Monday, 28 November 2016

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

10 பொருத்தம் என்றால் என்ன? ஏன் அவசியம் பார்க்க வேண்டும்? - தெரிந்துக் கொள்ளுங்கள்!

திருமணம் என்ற பேச்சு வீட்டில் எழும்போது அடிக்கடி இந்த வார்த்தை உங்கள் காதை எட்டும், எத்தனை பொருத்தம் பொருந்தியுள்ளது. பத்து பொருத்தமும் பொருந்தியிருந்தால் அது உத்தமமான ஜாதகம் என்றெல்லாம் கூட கூறுவார்கள். பத்தில் குறைந்தது எட்டு பொருத்தமாவது எதிர்பார்ப்பது வழக்கம்.நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!அதிலும் கூட மகேந்திர பொருத்தம், வசியப் பொருத்தம் போன்றவை இல்லற வாழ்க்கையை குறிப்பவை, இவை கண்டிப்பாக பொருந்த வேண்டும் என்று ஆண், பெண் வீட்டார் எதிர்பார்ப்பது இயல்பு. இப்படி ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால் தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.எந்த ராசிக்காரர்கள் காதலில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்?அப்படி இந்த பொருத்தங்களில் ஏதேனும் சிறுசிறு குறைபாடு அல்லது குளறுபடி இருந்தால், அதை தோஷம் கழித்து சரிசெய்யலாம் என்றும் ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். இனி, 10 பொருத்தம் என்றால் என்ன? மற்றும் அதன் உண்மை விளக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்...

உங்கள் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசையா?

தினப் பொருத்தம்
தினப் பொருத்தம் என்பதை நட்சத்திர பொருத்தம் என்பார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ள தினப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
   
கணப் பொருத்தம்
குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம் தான் குணப் பொருத்தம். மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

   
மகேந்திரப் பொருத்தம்
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண்ணுக்கு இந்த பொருத்தம் மிகவும் முக்கியம். இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
   
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் பெருக பார்க்கப்படும் பொருத்தமாகும். அதனால், இந்த பொருத்தமும் கூட ஓர் முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது.

   
யோனிப் பொருத்தம்
யோனிப் பொருத்தம் முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக் கூடியது பொருத்தம் தான் யோனிப் பொருத்தம். இந்த பொருத்தம் இருவருக்கும் ஒத்துப் போக வேண்டியது அவசியம்.
   
ராசிப் பொருத்தம்
பெண் ராசி தொட்டு ஆண் ராசி 6 க்கு மேல் எனில் பொருத்தம் உண்டு எனப்படுகிறது. ஆனால் அனுபவத்தில் சிலர் ஒரே ராசி என்றால் கூட அது உத்தமம் தான். ஆனால் நட்சத்திரம் மாறுபட்டு இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும் இந்த பொருத்தம் முக்கியம்.
   
ராசி அதிபதிப் பொருத்தம்
குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க பார்க்கப்படும் பொருத்தம் தான் ராசி அதிபதிப் பொருத்தம். பன்னிரண்டு இராசிக்கும் அதிபதி உண்டு அந்த அதிபதி கிரகத்திற்கு நட்பு, சமம், பகை என மூன்று வகையில் மற்ற கிரகங்களுடன் உறவும் உண்டு. இதில் ஆண், பெண் இராசிக்கு இடையில் பகை தவிர மற்ற இரண்டு இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்று பொருள்.
   
வசியப் பொருத்தம்
கணவன், மனைவி இருவருக்குள் அன்யோன்யம் இருக்குமா, இல்லையா என்று பார்ப்பதற்கு இந்த வசியப் பொருத்தம் உதவுகிறது. இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஈர்ப்பு ஏற்படும் கூறப்படுகிறது.
   
ரஜ்ஜூ (அ) ரச்சுப் பொருத்தம்
இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமண பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
   
வேதைப் பொருத்தம்
திருமணம் செய்யப் போகும் தம்பதியர் வாழ்க்கையில் இன்ப - துன்பங்கள் எவ்வாறு அமையும், எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த வேதைப் பொருத்தம்.

Sunday, 27 November 2016

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள்

எண் 1 யில் பிறந்தவருக்குரிய பலன்கள் -

சூரியன் (Sun) :


எல்லா எண்களுக்கும் இந்த ஒன்றாம் எண்ணே தலைமை வகிக்கிறது. நமது சூரியக் குடும்பத்தின் தலைவனான சூரியன்தான் இதனை ஆட்சி செய்கிறார். இந்த எண்ணில் பிற்தநவர்கள் பழகுவதற்கும், பார் வைக்கம் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்கள் மற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்குவார்கள். ஆனால் அதே சமயம் மனித நேயத்துடனும் அவர்களுடன் நடந்த கொள்வார்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத் தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள். அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

அரசியல் அல்லது அரசு சார்ந்துள்ள தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் ஏற்படும். ஒன்றின் எண் ஆதிக்கம் நன்கு அமைந்திரந்தால், (பெரும்பாலும்) இவர்கள் அரசியலில் பெரும் செல்வாக்குடன் விளங்குவார்கள். ஆனால் நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். (இந்த எண்காரர்கள் மட்டும்தான்). மற்றவர்கள் அரசியலில் ஈடுபட்டால் சுயநலமம், பண வேட்கையும் அதிகமாகக் கொண்டு இருப்பார்கள். அதிகாரம் காண்பிப்பதில் இவர்கள் மிகவும் ஆசை கொண்டவர்கள். மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கடின உழைப்பும், கண்டிப்பான நடத்தையும் இவர்களைத் தலைமை ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லும்.

மனிதல் ஊக்கமும், எதையும் தாங்கும் மனோபலமும் கொண்டவர்கள். தோல்வி ஏற்படுவதைத் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் மனத் துணிவுடனும், புதிய திட்டத்துடனும் சலிக்காமல் செயலாற்றுவார்கள். புதிய செய்தியினை ஆராய்வதில் மகிழ்ச்சியடைவார்கள். நேர்மையான முறையிலேயே எதையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றம் அணியும் பொருள்கள் மிகவும் மதிப்பாகத் தெரிய வேண்டும் என்று அதற்காகச் செலவு செய்வர்கள். மன மகிழ்ச்சிக்காக தாராளமாகச் செலவு செய்யத் தயங்காதவர்கள்.

தாங்கள் உதவுவதைக் கூட வெளிப்படையாகச் சொல்லி விளம்பரம் அடைய ஆசைப்பட மாட்டார்கள். சூரிய புத்திரன் கர்ணன் இவரது ஆதிக்கம் நிறைந்தவர்கள். எதிரியுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்களே தவிரக் குறுக்கு வழியைத் தேட மாட்டார்கள். இதனால்தான் சகுனியின் சதித் திட்டங்களை எல்லாம் கர்ணன் எதிர்த்துக் கொண்டே இருந்தான். தங்களின் இரக்க குணத்ததால் பல பிரச்சினைகளையும் சந்திப்பார்கள். ஆனால் நல்ல பெயரும் புகழும் நிச்சயம் அடைவார்கள். ‘‘இவர்தான் எனது நண்பன், இவர்தான் எனது எதிரி’’ என்று எதையும் மறைத்து வைக்காமல் கூறி விடுவார்கள். மிகுந்த ரோஷமும், எதையும் எடை போடும் குணமும் உண்டு.

வாக்குறுதி கொடுத்துவிட்டால் எப்பாடு பட்டாவது அதை நிறைவேற்றுவார்கள். பொதுவாகச் சோம்பேறித் தனமும், பொறாமையும் இவர்களுக்கு பிடிக்காது. அடுத்தவர் பொருட்களையும் சொத்துக்களையும் தீயென வெறுத்து ஒதுக்கி விடுபவர்கள் இவர்களே. படிப்பறிவை விடப் பட்டறிவு (அனுபவம்) அதிகம் உண்டு. இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங்களும், பெரும் பயணங்களும் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த வாணிகத்திலும், நேர்மையையும், வாக்குறுதியையும் கடைப்பிடிப்பார்கள். இலாபத்திற்காகத் தங்களது மனச்சாட்சியை ஒதுக்க மாட்டார்கள். தேவையானால் பெருந்தன்மையுடன் மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால் மற்றவர்கள் அலட்சியம் செய்தால் மட்டும் இவர்களால் தாங்க முடியாது. அவர்களை உண்டு அல்லது இல்லை எனச் செய்து விடுவார்கள். ஆனால் நேர்மையான வழியில்தான் நடப்பார்கள். பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட எதிரியும், நேராக வந்து மன்னிப்புக் கேட்டால், உடனே மன்னிக்கும் 

நீங்கள் 9 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 9 எண்ணில் பிறந்தவர்களா?*

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.
இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.
கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி   சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.
அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.
நீதி, நேர்மை, ஒழுங்கு,  கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.
மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.
அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.
எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:

நன்மை தரும் முதல் எழுத்து

: C,G,L,S,U,V,W,A,J,Q,Y

நன்மை தரும் தேதி

: 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30

நன்மை தரும் கிழமை

: வியாழன், ஞாயிறு, செவ்வாய்

நன்மை தரும் நிறம்

: சிவப்பு, மஞ்சள்

நன்மை தரும் திசை

: தெற்கு, வடகிழக்கு

நன்மை தரும் தொழில்

: நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,

விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,

பூஜை பொருட்கள், கார் விற்பனை,

ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்

நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 8 எண்ணில் பிறந்தவர்களா?*

8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!

இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.
எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர்.  எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.
உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது.  அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

8ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்து

: E,H,N,X

நன்மை தரும் தேதி

: 5,14,23

நன்மை தரும் கிழமை

: புதன், சனி

நன்மை தரும் நிறம்

: சாம்பல், பச்சை

நன்மை தரும் திசை

: வடக்கு

நன்மை தரும் தொழில்

: எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்

எட்டில் பிறந்த பிரபலங்கள்

ஈ.வெ.ராமசாமி

: 17.9.1879

எம்.ஜி.ஆர்.

: 17.1.1917

எலிசபெத் டெய்லர்

: 17.1.1901

குருநானக்

: 8.11.1470

ஜார்ஜ் பெர்னாட்ஷா

: 26.7.1856

நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

*நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.

வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்ட இவர்கள், காதல் வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.
புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர்.
பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.
நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.
அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.

ஏழாம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள்

: O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W

நன்மை தரும் திகதிகள்

: 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29

நன்மை தரும் கிழமைகள்

: ஞாயிறு, திங்கள், வெள்ளி

நன்மை தரும் நிறங்கள்

: வெள்ளை, இளஞ்சிவப்பு

நன்மை தரும் திசைகள்

: கிழக்கு, மேற்கு

நன்மை தரும் தொழில்கள்

: இலத்திரனியல், பூஜைப் பொருட்கள், ஏற்றுமதி,

சினிமா, அரசியல்,  ஆன்மிகம், சேவை நிறுவனம்,

 கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை,நீதித்துறை, மருத்துவம்

7ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

இயேசுநாதர்

: டிசம்பர் 25

கிருபானந்த வாரியார்

: 25.08.1906

எம்.எஸ்.சுப்புலட்சுமி

: 16.09.1916

வாஜ்பாய்

: 25.12.1924

சார்லி சாப்ளின்

: 16.04.1889

நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 6 எண்ணில் பிறந்தவர்களா?*

6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.
எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்குமுன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.
இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.
பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

6ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகான் அரவிந்தர்

: 15.08.1872

அண்ணாத்துரை

: 15.09.1909

காமராஜர்

: 15.07.1903

ஜெயலலிதா

: 24.02.1948

ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?

*ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?*

5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.
பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.
ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர்.
ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.
ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர்.
சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்\' ஜாம்பவான்களாக இருப்பர்.

5 ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்
வள்ளலார் - 05.10.1823ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759வ.உ. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872ஜவகர்லால் நேரு - 14.11. 1889டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889அம்பேத்கர் - 14.04.1891சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897திலகர் - 23.07.1856வில்லியம் ஷேக்ஸ்யிர் - 24.04.1564

நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

*நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?*

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.
மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.
சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.
சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.
இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.
ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.
பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;ன விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.

4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

ராமானுஜர்

: 04.04.1917

கணிதமேதை ராமானுஜம்

: 22.12.1887

திருப்பூர் குமரன்

: 04.10.1904

சர்தார் வல்லபாய் படேல்

: 31.10.1875

தாதாபாய் நௌரோஜி

: 04.09.1825

ராஜாராம் மோகன்ராய்

: 22.05.1772

நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?

*நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?*

3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர்.  இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்.  சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

3ஆம் எண்ணுக்கு உகந்தவை:

நன்மை தரும் முதல் எழுத்துக்கள்

: C,G,L,S,A,I,J,Q,Y

நன்மை தரும் தேதிகள்

: 1,3,9,10,12,18,19,21,27,28,30

நன்மை தரும் கிழமை

: வியாழன், ஞாயிறு, செவ்வாய்

நன்மை தரும் நிறம்

: மஞ்சள், இளம் சிவப்பு

நன்மை தரும் ஹோரை

: குரு

நன்மை தரும் திசை

: கிழக்கு

நன்மை தரும் தொழில்

: கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,

அரசியல், ராணுவம், வங்கி.

3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:

ஜெகதீஷ் சந்திரபோஸ்

: 30.11.1863

சர்.சி.வி.ராமன்

: 12.01.1879

சுவாமி விவேகானந்தர்

: 12.1.1863

அலெக்சாண்டர் கிரகாம்பெல்

: 3.3.1847

வீரபாண்டிய கட்டபொம்மன்

: 3.1.1760

பகவான் ரமணர்

: 30.12.1879

ஞானி சுத்தானந்தபாரதி

: 12.5.1897

ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)

: 12.12.1950

திப்பு சுல்தான்

: 21.11.1750

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

: 30.10.1908

நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?

*நீங்கள் 2 எண்ணில் பிறந்தவரா?*

2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2 இன் அதிபதி சந்திரன்.

இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.
உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.
இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.
பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.
அவ்வப்போது அழையா விருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.
இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை

நன்மை தரும் எழுத்துக்கள்

: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W

நன்மை தரும் எண்கள்

: 2,7,1,6

நன்மை தரும் தேதி

: 27,11,16,20,25,29

நன்மை தரும் நிறம்

: வெள்ளை, சந்தனம்

நன்மை தரும் ரத்தினம்

: முத்து

நன்மை தரும் ஹோரை

: சந்திரன், குரு, சுக்கிரன்

நன்மை தரும் திசை

: வடகிழக்கு

நன்மை தரும் தொழில்

: நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்

மகாத்மா காந்தி

: 02.10.1969

தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா

: 02.10.1908

தாமஸ் ஆல்வா எடிசன்

: 11.02.1847

டைரக்டர் சத்யஜித்ரே

: 02.05.1921

ராஜிவ் காந்தி

: 20.08.1994

லால்பகதூர் சாஸ்திரி

: 02.10.1904

மகாகவி பாரதியார்

: 11.09.1882

காஞ்சிப் பெரியவர்

: 20.05.1894

பாடகி கே.பி சுந்தரம்பாள்

: 11.10.1908

Saturday, 26 November 2016

சனி த்ரியோதசி மஹா பிரதோஷம்-26.11.16

சனி த்ரியோதசி மஹா பிரதோஷம்-26.11.16


நாளை மாலை 4:30 மணியளவில் சிவன் சன்னதி சென்று பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்வித்து, கர்ப்ப கிரக விளக்கிற்கு தூய நெய் சேர்த்து, பின் சண்டிகேஸ்வரர் சன்னதியில் ஓர் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமும் நந்தியெம்பெருமானுக்கு ஒரு நெய் விளக்கும் இட்டு, பின் வெளி பிரகாரத்தில் 8 மண் அகலில் கருப்பு திரி கொண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி 5 :30 மணிவரை கோவிலில் இருந்து வழிபாடு செய்து  வர தீராத கடனும் தீரும்-கிடைத்தற்கரிய அற்புத நாள் இன்று.

வேறு முறை : சுவாதியும் சேர்ந்தே வருவதால்,  மாலை 5 :30 - 6  மணிக்குள்  லட்சுமி நரசிம்மர் சன்னதி கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் தீபம் சேர்த்து, அங்குள்ளோர்க்கு எலுமிச்சை சாதம் தானம் செய்ய கடன்கள் அனைத்தும்  கரைந்து போகும். ( பரிகாரமாக தானம் கொடுக்கும் பொருளை தாங்கள் உண்ண கூடாது )

மேற்கண்ட இரண்டில் எது வேண்டுமானாலும் செய்யலாம். இரண்டையும் செய்ய முடிந்தோர் மஹா பாக்கியசாலிகள் ஆவர். இதே நேரத்தில் அரச,ஆல மரத்திற்கு நீர் ஊற்றி வருவதும் மிக நன்று.

Tuesday, 22 November 2016

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆  மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋  ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇  விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :

1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏  கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

Thursday, 7 April 2016

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)









மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருக்கும் அஷ்டதிக் பாலகர்கள்.

மனிதர்கள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக இருக்கும் அஷ்டதிக் பாலகர்கள்.


அஷ்டதிக் பாலகர்கள் என்று இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை குறிப்பிடுவார்கள். இவர்களை வணங்கினால் அனைத்து விதபலன்களையும் பெறலாம்.
மனிதர்கள் செய்யும் நற்பலன்களுக்கும், தீய பலன்களுக்கும் இவர்களே சாட்சியாக இருக்கின்றனர்.
இந்திரனை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும், சுகமும் உண்டாகும். அக்னியை வழிபட்டால் ஒளி பொருந்திய நல்ல ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறலாம். எமனை வழிபட்டால் தீவினைப் பயன்கள் நீங்கி தர்ம வழியில் நடக்கலாம். நிருதியை வழிபட்டால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம். வருணனை வழிபட்டால் பயிர்வகைகள் சிறந்து வளர்ந்து பசுமையை உண்டாக்கி செழிப்பாக வாழலாம். வாயு நம் மூச்சுக்கு ஆதாரமாக இருப்பவர், நீண்ட ஆயுளையும், பலத்தையும் வழங்குவார், குபேரனை வழிபட்டால் சகலவித செல்வங்களையும் தந்து வாழ்க்கையை சிறப்பிப்பார். ஈசானனை வழிபட்டால் ஞானத்தை வழங்கி ஆன்ம விடுதலையை தருவார்.
இதனால் இந்த அஷ்டதிக் பாலகர்களை வழிபட்டால் வாழ்வில் அனைத்தும் பெற்று இன்பமாக வாழலாம், திருவண்ணாமலையில் சிவபெருமான் கிரிவல பாதையை சுற்றி அஷ்டதிக் பாலகர்களை உள்ளடக்கியவாறு சிவலிங்கமாக காட்சி தருகின்றார்.

Tuesday, 5 April 2016

குழந்தை பாக்கியம் தரும் பைரவ விரதம்

குழந்தை பாக்கியம் தரும் பைரவ விரதம்: கெட்ட கனவு, வறுமையையும் தீர்க்கும் அதி சக்தி படைத்தவர்


காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் காலபைரவர்.
ஒருவருக்கு மோசமான காலம் நடந்தாலும் காலச்சக்கரத்தினால் துன்புறும் பக்தர்களை காப்பாற்றக்கூடியவர்ஆதலால்தான் இவரை ஆபதுத்தாரண பைரவர் என்று போற்றப்படுகின்றார்.
ஆபதுத்தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்றும் பொருள்படும். இவரே மகாகாலர், சட்டநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பைரவர் என்ற பதத்திற்கு பயத்தை போக்குகிறவர் என்று பெயர்.
ஒருவருக்கு வறுமையும்,கஷ்டமும்,தைரிய இழப்பு ஏற்பட்டால் இவரை சனிக்கிழமைகளிலோ அல்லது தேய்பிறை அஷ்டமி,வளர்பிறை அஷ்டமியில் வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன்-மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சிகப்பு அரளியால் பைரவருக்கு அர்ச்சனை செய்வதால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
*உங்களுக்கு எப்போதாவது கெட்ட கனவோ அல்லது மன பயமோ,எதிர்மறை சிந்தனையோ ஏற்பட்டால் கால பைரவரை மனமுருகி அழையுங்கள் அவர் ஓடோடி வந்து உங்கள் உள்ளத்தில் புகுந்து அசாத்திய தைரியத்தை கொடுப்பார்.

ருத்ராட்ஷம் அணிய சிறப்பு தகுதி தேவையா? யார் எல்லாம் அணியலாம்?

ருத்ராட்ஷம் அணிய சிறப்பு தகுதி தேவையா? யார் எல்லாம் அணியலாம்?


ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்ஷம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.
சிறுவர், சிறுமியர் ருத்ராட்ஷம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும்.
ருத்ராட்ஷத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள்.
இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றியு்ம் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும்.
ஆகையால் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியவேண்டும்.
சுத்தபத்தமாக இருப்பவர்கள் தான் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சொல்வார்கள்?, குளித் தவர்தான் ப்பு உபயோகப்படுத்த வேண்டும் என்று யாராவது சொல்வார்களா?
ஆரோக்கியம் உள்ளவனுக்குத்தான் மருந்து: நோயில் தவிப்பவனுக்கு கிடையாது, என்று எவரேனும் சொன்னால் ஏற்றுக்கொள்வோமா? அதுபோலத்தான் சுத்தமாக இருப்பவர்கள்தான் ருத்ராட்ஷம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதும். ருத்ராட்ஷம் அணிந்தால்தான் மனமும், உடலும் தூய்மை அடையும். எனவே உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்ளாமல் நம்பிக்கையோடு ருத்ராட்ஷம் அணிந்து கொள்ளுங்கள்.
எப்படி மருந்துக்குப் பத்தியம் அவசியமோ அதுபோல ருத்ராட்ஷம் அணிபவர்களும் மது அருந்துதல், புகை பிடித்தல், புலால் உண்ணுதல் போன்றவற்றை படிப்படியாக விட்டுவிட முயற்சிக்க வேண்டும். (முக்கியமாக மாடு, பன்றி மாமிசம் எப்போதும் சாப்பிடக்கூடாது).,
ருத்ராட்ஷத்தின் குறுக்கே அழுத்தமான கோடுகளைக் காணலாம், இதற்குத்தான் முகம் என்று பெயர். ஐந்து கோடுகள் இருந்தால் ஐந்து முகம்.
ஆறு கோடுகள் இருந்தால் ஆறு முகம் என்று இப்படியே கணக்கிட வேண்டியதுதான். எத்தனை முகம் என்பதைக் கண்டுபிடிக்க எவ்வித முன் அனுபவமும் தேவையில்லை. கண்ணால் சாதாரணமாகப் பார்த்தாலேயே தெரியும்.
அதுமட்டுமல்ல, எல்லா இடங்களிலும் எளிதில், மிகமிக சகாயமான விலையில் கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்ஷம் அணிவதே போதுமானது.
பகவானின் திருமுகம் ஐந்து. நமச்சிவாய ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்ஷத்தையே படைக்கின்றார்.
ஆகையால் ஐந்து முக ருத்ராட்ஷங்கள் அணிவதே மிகச் சிறப்பு. இதை ஆண், பெண் மற்றும் குழந்தைகள் என சகலமானவர்களும் அணியலாம். ஐந்து முக ருத்ராட்ஷத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்ஷங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.
பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாம்:
பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்ஷம் அணிந்திருப்பதை, கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று விவரிக்கிறது (அருணாசலபுராணம் (பாடல் எண் 330) பழி, பாவம் முதலியவற்றை முழுவதுமாகத் தீர்த்துக் கட்டுகிற திருநீறையும், ருத்ராட்ஷத்தையும் தனது திருமேனி முழுவதிலும் அகிலாண்டேஸ்வரி அணிந்து கொண்டாளாம். பராசத்திக்கு ஏது பழியும், பாவமும்? நமக்கு வழி காட்டுவதற்காகத்தானே அம்பிகையே ருத்ராட்ஷம் அணிந்து கொள்கிறாள்!.
எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்ஷம் அணிய வேண்டும். மேலும், சிவ மஹாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்ஷம் அணிய வேண்டும் என்று சிவபெருமானே வலியுறுத்தியுள்ளார்.
எல்லா நாட்களிலும் பெண்கள் ருத்ராட்ஷம் அணியலாம்:
பெண்கள், தங்களுடைய தாலிக் கொடியில் அவரவர் மரபையொட்டி சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்துதான் அணிந்திருக்கின்றனர். அதை எல்லா நாட்களிலும் தானே அணிகிறார்கள்? சில பெண்கள், யந்திரங்கள் வரையப்பட்ட தாயத்து போன்றவற்றையும் எப்போதும் அணிந்திருப்பதுண்டே?
இவற்றைப் போல் ருத்ராட்ஷத்தையும் எல்லா நாட்களிலும் கழற்றாமல் அணிய வேண்டும். ருத்ராட்ஷம் வாழும் இந்த உடம்பிற்காக அல்ல. உயிரின் ஆத்மாவிற்காகவே சிவபெருமானால் அருளப்பட்டது.
ருத்ராட்ஷம் கண்டிப்பாக அணிய வேண்டும்
இன்று பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை ஆண் - பெண் இருபாலரும் கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ஏனெனில் நம்மைப் படைத்ததே பாவங்களைப் போக்கி சிவபெருமானின் திருவடியை அடைவதற்காகவே நம் வாழ்க்கையில் வரும் கஷ்டம், வேதனை, துன்பம், வலி இவைகளிலிருந்து விடுபடுவதற்காகவே ருத்ராட்ஷம் அணிய வேண்டும்.
ருத்ராட்ஷம் அணிந்தால் மறுவிறவி இல்லை மஹா பேரானந்தமே. ருத்ராட்ஷம் அணிவதை சிலபேர் நீ அணியக்கூடாது சுத்தமானவர்கள் தான் அணிய வேண்டும் என்று சொல்வார்கள், அதைப் பொருட்படுத்தக் கூடாது.
இறைவனுக்கு ஒருவர் மீது கருணை இருந்தால் மட்டுமே ருத்ராட்ஷம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். ருத்ராட்ஷம் முழுக்க முழுக்க சிவபெருமானுடையது. சிவபெருமான் கண்களை விழித்து 1000 வருடங்கள் கடும் தவம் இருந்து அவர் கண்களில் இருந்து தோன்றியதே ருத்ராட்ஷம்.
ருத்ராட்ஷத்தை அணிந்து கொண்டவர்கள் சிவ குடும்பத்தில் ஒருவராவார். சிவபெருமான் தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கஷ்டத்தையும், துன்பத்தையும் கொடுப்பாரா?. அதனால் யார் என்ன சொன்னாலும் கண்டிப்பாக ருத்ராட்ஷத்தை அணியவேண்டும்.
ருத்ராட்ஷதை அணிந்த பின் எந்த சூழ்நிலையிலுமே கழற்றவே கூடாது. நீங்கள் இப்பொழுது எப்படி வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கின்றீர்களோ அதேபோல் வாழ்ந்தால் போதும் இதில் எவ்வித மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை. நெற்றியில் திருநீறு அணிந்து ஓம் நமசிவாய சொல்லி வந்தாலே போதுமானது.
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாம்:
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது.
நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம்.
இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

உண்மையான தரமான நவரத்தினங்களை அடையாளம் காண்பது எப்படி...??

போலிகள் நிறைந்த வியாபாரிகளிடமிருந்து உண்மையான தரமான நவரத்தினங்களை அடையாளம் காண்பது எப்படி...??


உண்மையான நவரத்தினங்களை இனம் காண்பது எப்படி என தெரிந்துக்கொள்வேம்....
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.
நம்மில் சிலருக்கு நவரத்தின கற்கள் வாங்குவதற்கு தயக்கம் இது உண்மையாத
எனக் குழப்பம்..சரி இனி கிழே உள்ள சில குறிப்புகளில் பரிசோதித்த வாங்க முயற்சி செய்யுங்கள்
முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.
அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

Saturday, 2 April 2016

மேஷம் ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - (8.1.2016 முதல் 26.7.2017 வரை)

மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கேதுவால் நன்மை ராகுவால் பிரச்னை! (100/70)

அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது சிறப்பான பலனைத் தருவார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். செயல்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல்அதிகரிக்கும். ராகு இதுவரை 6-ம் இடமான கன்னி ராசியில் இருந்து, உடல் ஆரோக்கியத்தையும், காரியஅனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது 5-ம் இடமான சிம்ம ராசிக்கு வருவதால் மனைவி, குழந்தைகள் வகையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: இந்த சமயத்தில் கேதுவின் இருப்பிடத்தாலும், குருவின் 9-ம் இடத்துப் பார்வையாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். ராகுவால் அவ்வப்போது தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும்.  ராகு சில சிரமங்களைத் தரும் அதே நேரம், நல்ல வேளையாக குரு காலமாகிய 7-2-2016 முதல்1-8-2016 வரை வக்ரம் அடைகிறார். இதனால் ராகு தரும்சிரமங்களைக் குறைத்து பலன்கள் கிடைக்கச் செய்வார்.  கேதுவால் குடும்பத்தில் வசதிகள் பெருகும்.உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் ஆரம்பத்தில் தடைபடலாம். அதே நேரம் தீவிர முயற்சியின் பேரில் பிப்ரவரி முதல் ஜூலைக்குள் நடப்பதற்கு வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். கேது பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால், சம்பள உயர்வுக்கு தடை இல்லை.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும்.
அரசியல்வாதிகள் கேதுவால் சிறப்பான பலனை காணலாம். மாணவர்களுக்கு கேதுவின் அருளாலும், குருவின் பார்வையாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் சாகுபடி எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம். கேதுவால் உடல்நிலை நன்றாக இருக்கும். மருத்துவ செலவு குறையும்.
2017 ஜனவரி முதல்  ஜூலை வரை: கேதுவும், குருவும் சாதகமான இடத்தில் இருப்பார்கள். அவர்கள் சுபநிகழ்ச்சியை நடத்தித் தருவர். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.
கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ராகுவால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும்.
பணியில் மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.
கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.
மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.
விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். கேதுவால் உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்: ராகுவுக்கும், சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
செல்ல வேண்டிய தலம்:  நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer