கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) தடைகளைத் தகர்ப்பீங்க! சாதனை படைப்பீங்க! (60/100)
உழைப்பில் உறுதி மிக்க கும்ப ராசி அன்பர்களே!
ராகு-கேது பெயர்ச்சி சுமாரான பலனையே தரும் என்றாலும், மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ராகு இதுவரை 8-ம் இடமான கன்னி ராசியில் இருந்து முயற்சியில் தடையும், குடும்பத்தில் பிரிவும் ஏற்படுத்தி இருப்பார். உறவினர் வகையிலும் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்கும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகி இருக்கலாம். இப்போது ராகு 7-ம் இடமான சிம்மத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. இடப்பெயர்ச்சியும், அவப்பெயரும் சந்திக்க நேரலாம். கேது இதுவரை 2-ம் இடமான மீனத்தில் இருந்து பகைவரால் தொல்லை, அரசு வகையில் பிரச்னை, திருட்டு பயம் போன்றவற்றை ஏற்படுத்தி இருப்பார்.தொழிலதிபர்கள் அரசின் கெடுபிடியால் இன்னலுக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் கேது இப்போது உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல என்றாலும், கெடுபலன் ஓரளவு குறையும். தடைகள் குறுக்கிட்டாலும் குருவின் பார்வை பலத்தால் தடைகளை தகர்த்து வாழ்வில் சாதனை படைப்பீர்கள்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: குரு சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்துப்பார்வையால் மந்த நிலை படிப்படியாக மாறும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு அவ்வப்போது வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். வீண் விவாதம் பேசுவதைத் தவிர்க்கவும். உறவினர்கள் பக்கபலமாக இருப்பர். புதிதாக வீடு-மனை வாங்கும் எண்ணம் தடைபடலாம். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் வசிக்கும் சூழ்நிலை உருவாகலாம்.
பணியாளர்களுக்கு பணியில் பொறுப்பு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு எதிர்பாராத வகையில் இட, பணி மாற்றம் ஏற்படலாம்.
வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதிய வியாபார முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. தொழில் தொடங்க விரும்பினால், வக்கிர காலத்தில் குறைந்த முதலீட்டில் ஆரம்பிப்பது நல்லது. பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்க அதிக முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள், சமூகநல தொண்டர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும்.
மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ப கல்வி வளர்ச்சி உண்டாகும். குருவின் பார்வையால் வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
விவசாயம் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும்.புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும். பிறந்த வீட்டில் இருந்து உதவி அவ்வப்போது கிடைக்கப்
பெறலாம். குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
பெறலாம். குடும்ப ஒற்றுமைக்காக கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: குருபகவான் துலாம் ராசிக்கு வருவதால் சிறப்பான பலன் கிடைக்கும். அவரது 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை மேலோங்கும். எந்த தடைகளையும் முறியடித்து வெற்றி காண்பீர்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் உள்ள கருத்துவேறுபாடு மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடி வரும்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு குறையும். சிலர்அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப் படுவர்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
மாணவர்கள் சிறப்பான பலனைப் பெறலாம்.
விவசாயிகள் நெல், கோதுமை, கேழ்வரகு மற்றும் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு உண்டாகும்.
பெண்கள் மகிழ்ச்சியான வாழ்வு நடத்துவர். உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும்.
பரிகாரம்: ராகு,கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுங்கள். பாம்பு புற்றுக் கோவிலுக்குச் சென்று வரலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்குவது நல்லது. ஆதரவற்றோருக்கு உதவுங்கள்.
செல்ல வேண்டிய தலம்: திருச்செந்துõர் முருகன் கோவில்
No comments:
Post a Comment