மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) கேதுவால் நன்மை ராகுவால் பிரச்னை! (100/70)
அன்புள்ளம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது சிறப்பான பலனைத் தருவார். குடும்பத்தில் மேன்மை உண்டாகும். செயல்களை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல்அதிகரிக்கும். ராகு இதுவரை 6-ம் இடமான கன்னி ராசியில் இருந்து, உடல் ஆரோக்கியத்தையும், காரியஅனுகூலத்தையும் தந்திருப்பார். இப்போது 5-ம் இடமான சிம்ம ராசிக்கு வருவதால் மனைவி, குழந்தைகள் வகையில் கருத்து வேறுபாட்டை உருவாக்கலாம்.
2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை: இந்த சமயத்தில் கேதுவின் இருப்பிடத்தாலும், குருவின் 9-ம் இடத்துப் பார்வையாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். ராகுவால் அவ்வப்போது தடைகள் வந்தாலும் அதை முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். ராகு சில சிரமங்களைத் தரும் அதே நேரம், நல்ல வேளையாக குரு காலமாகிய 7-2-2016 முதல்1-8-2016 வரை வக்ரம் அடைகிறார். இதனால் ராகு தரும்சிரமங்களைக் குறைத்து பலன்கள் கிடைக்கச் செய்வார். கேதுவால் குடும்பத்தில் வசதிகள் பெருகும்.உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் ஆரம்பத்தில் தடைபடலாம். அதே நேரம் தீவிர முயற்சியின் பேரில் பிப்ரவரி முதல் ஜூலைக்குள் நடப்பதற்கு வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். கேது பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால், சம்பள உயர்வுக்கு தடை இல்லை.
கலைஞர்கள் தீவிர முயற்சி எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் பெறமுடியும்.
அரசியல்வாதிகள் கேதுவால் சிறப்பான பலனை காணலாம். மாணவர்களுக்கு கேதுவின் அருளாலும், குருவின் பார்வையாலும் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.
விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் சாகுபடி எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவரின் அன்பு கிடைக்கும். ஆடம்பர செலவைக் குறைப்பது புத்திசாலித்தனம். கேதுவால் உடல்நிலை நன்றாக இருக்கும். மருத்துவ செலவு குறையும்.
2017 ஜனவரி முதல் ஜூலை வரை: கேதுவும், குருவும் சாதகமான இடத்தில் இருப்பார்கள். அவர்கள் சுபநிகழ்ச்சியை நடத்தித் தருவர். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.
கணவன்-மனைவி இடையே அன்னியோனியம் கூடும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் மாறி, மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ராகுவால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்து போகும்.
பணியில் மேம்பாடு காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலை இன்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் அவதியுற்றவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.
கலைஞர்களுக்கு பாராட்டு, விருது கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.
மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக அமையும்.
விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். புதிய சொத்து வாங்கலாம்.
பெண்கள் குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். கேதுவால் உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்: ராகுவுக்கும், சனிபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.
செல்ல வேண்டிய தலம்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
No comments:
Post a Comment