Thursday 19 December 2013

சன்னதியில் கட்டும் கட்டி, சபரிமல காடு தேடி,

சன்னதியில் கட்டும் கட்டி,  
சபரிமல காடு தேடி,
கட்டு முடி ரெண்டும் கட்டி,
காந்தமலை ஜோதி காண
சபரிமல பயணம் தானப்பா-சாமி
வழி துணையா வந்து சேரப்பா,
குரு சாமி கால தொட்டு,
கூடி ஒரு சரணம் இட்டு,
புலி ஏறும் உன்ன நெனச்சு,
புல்லரிக்க சரணமிட்டு,
காந்தமல ஜோதியனவா-எங்க -
காவலாக வந்து சேரப்பா,
கார்த்திகையில் மாலையிட்டு,
கனிவாக விரதம் வச்சு,
மணி மணியா மாலையிட்டு,
மார்கழியில் பூச வச்சு,
சபரிமல பயணம் தானப்பா-சாமி
வழி துணையா வந்து சேரப்பா.
குரு சாமி சொன்னபடி,
கூடி நல்லா விரதம் வச்சு,
கருப்ப சாமி உன்னை நினச்சு,
காலை மாலை பூசை வச்சு,
காந்தமலை ஜோதியனவா,
எங்களுக்கு காவலாக வந்து சேரப்பா.
                                                                                                                (சன்னதியில் கட்டும் கட்டி, )
கருப்பு பச்சை ஆடை கட்டி,
மனசுக்கொரு லாடம் கட்டி,
துளசியில மாலை கட்டி,
சரண கோஷ பாட்டு கட்டி,
சபரிமல பயணம் தானப்பா,
ரன்களுக்கு காவலாக வந்து சேரப்பா,
நீல வண்ண கட்டி,
நித்தம் உன்னை மனசில் கட்டி,
நெய் போட்டு விழாக்கு ஏத்தி,
நேரம் ஒரு பாட்டு கட்டி,
காந்தமலை ஜோதியனவா,
எங்களுக்கு காவலாக வந்து சேரப்பா,
(சன்னதியில் கட்டும் கட்டி, )
உத்தரவு வந்ததுன்னு,
ஊருக்கெல்லாம் ஓலையிட்டு,
உச்சிமலை போறதுன்னு,
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு,
சபரிமல பயணம் தானப்பா, - சாமி
வழித்துணைய வந்து சேரப்பா,
மூத்த குரு முடியும் கட்ட,
முத்திரையில் நெய் பிடிச்சு,
முன்னும் ஒரு கட்டும் இட்டு,
பின்னும் ஒரு கட்டும் இட்டு,
காந்தமலை ஜோதியனவா-எங்களுக்கு
காவலாக வந்து சேரப்பா.

(சன்னதியில் கட்டும் கட்டி, )
வீட்டையெல்லாம் தான் மறந்து,
காட்டை மட்டும் மனசில் வச்சு,
சொந்தமெல்லாம் தான் மறந்து,
ஜோதி மட்டும் மனசில் வச்சு,
சபரிமல பயணம் தானப்பா, - சாமி
வழித்துணைய வந்து சேரப்பா,
(சன்னதியில் கட்டும் கட்டி, )
வன்புலி புலி போல் வாகனத்தில்,
வாழையாறு வழி கடந்து,
சேர நாடு தான் புகுந்து,
சேரும் இடம் தான் நினைச்சு,
காந்தமலை ஜோதியனவா-எங்களுக்கு
காவலாக வந்து சேரப்பா.

(சன்னதியில் கட்டும் கட்டி, )
வழியில் பல ஆலயங்கள்,
வணக்கம் பல சொல்லிக்கிட்டு,
பச்சை பசேல் தோட்டமெல்லாம்,
குண்டன் முகம் பாத்துகிட்டு,
சபரிமல பயணம் தானப்பா, - சாமி
வழித்துணைய வந்து சேரப்பா,
கோட்டயத்த தான் கடந்து,
கொட்ட வாசல் மேல் ஏறி,
எரிமேலி சீமையில,
எறங்கி சும்மா பேட்ட துள்ள,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )

வாவருக்கு சலாம் போட்டு,
வண்ணங்கள பூசிகிட்டு,
சரக்கொலு ஏந்திக்கிட்டு,
சாயங்கள பூசிகிட்டு,
(சபரிமல பயணம் தானப்பா)
பச்சிலைய கட்டிக்கிட்டு,
மேல தாளம் கூட்டிகிட்டு,
திந்தகதோம் ஆடிகிட்டு,
சாஸ்தா உன்ன வணங்கிகிட்டு,
(காந்தமலை ஜோதியனவா)
பெருவழி தான் திறந்து இருக்க,
குருசாமி முன் நடக்க,
நந்தவனம் தான் வணங்கி,
பொடிநடைய தான் நடந்து,
(சபரிமல பயணம் தானப்பா)
பேரூரு தோடு மேல,
பொறி போட்டு பூச பண்ணி,
கொட்டபடி அதனிறங்கி,
ஏலஎடுது பூச பண்ணி,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )

சிவபெருமான் வந்த இடம்,
சீர்மிகுந்த காளகட்டி,
காளகட்டி, காய் உடச்சு,
அடுத்த அடி அழுத நதி,
(சபரிமல பயணம் தானப்பா)
அழுத நதி தான் எறங்கி,
ஆறுதலா தான் குளிச்சு,
அடியிலொரு கல்லெடுத்து,
ஆழி பூச பண்ணிக்கிட்டு,
(காந்தமலை ஜோதியனவா)

அசராம சரணம் சொல்லி,
அழுதமேடு அதிலேறி,
கல்லெடுத்து தூக்கிகிட்டு,
கனிவாக சரணம் சொல்லி,
(சபரிமல பயணம் தானப்பா)
இஞ்சிப்பர கொட்டையில,
இருந்து ஒரு பூச பண்ணி,
முக்கால கோட்டையில,
உக்காந்து பூச பண்ணி,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )
மூசா பெரும் மூச்செடுத்து,
முக்குளியும் தான்கடந்து,
பேச்சா உன்-பேச்செடுத்து,
பெரியமல கரிமளையும்,
(சபரிமல பயணம் தானப்பா)

கடினமப்ப கரிமளையும்,
கால்கடுக்க உச்சியேறி,
கிடிகிடுவென ஏறக்கமப்பா
குடுகுடுவென கீழிறங்கி,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )
சிறியான வட்டத்துல,
சிலுசிலுன்னு காத்துவாங்கி,
சரங்குத்தியில ஓய்வெடுத்து,
கட்டெடுத்து சரணம் சொல்லி,
(சபரிமல பயணம் தானப்பா)
பெரியமனுர் பேர் சொல்லி,
பெரியான வட்டத்துல,
சல சலக்கும் பம்பையாற்றில்,
பெருவழிக்கு நன்றி சொல்லி,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )
பம்பையில தல முழுகி,
பாவங்கள அதில்கழுவி,
அன்னதான படையலிட்டு,
அழகழக தீபமிட்டு,
(சபரிமல பயணம் தானப்பா)

கண்ணிமூலன் சன்னதியில்,
கணபதிய கைதொழுது,
«ó¿¡ó¾¡  நீலிமலை,
அய்யா உன் கைபிடித்து,
(காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )
நீலிமல ஏத்தம் ஏறி,
அப்பாச்சிமேடு தொட்டு,
சபரிபீடம் காய் ஒடச்சு,
சரங்குத்தி அம்பும் விட்டு,
(சபரிமல பயணம் தானப்பா)
சன்னதிக்கு ஓட்டமாக,
அம்பலத்தின் வாசலிலே,
பக்கமொரு காய் ஒடச்சு,
பதினெட்டு படி ஏறி,
காந்தமலை ஜோதியனவா)
(சன்னதியில் கட்டும் கட்டி, )
பதினெட்டு படி ஏறி,
சாஸ்தா உன் முகம் காண,
அய்யா உன் நடைவாசல், நெருங்குதையா ஐயப்பா,
மெய்யாடும் திருமேனி, தெரியுதப்பா ஐயப்பா,
அய்யா உன் அழகுமுகம்,தெரியுதப்பா ஐயப்பா,
ஆனந்தம் கண்ணீராய், குவியுதப்பா ஐயப்பா,
அழகுமுகம் கண்டோம் ஐயப்பா,
நாங்க ஆனந்தனே கொண்டோம் ஐயப்பா,
பொன்னான திருமேனி,சாமி சரணம் ஐயப்பா,
கண்ணோடு கலக்குதப்பா, சரணம் சரணம் ஐயப்பா,
பார்க்க பார்க்க சலிக்காதே,சாமி சரணம் ஐயப்பா,
அய்யா உன் திருக்காட்சி, சரணம் சரணம் ஐயப்பா,
சாமி சரணம் சரணம் ஐயப்பா - உந்தன்
திருவடியே சரணம் ஐயப்பா,

சாமி சரணம் சரணம் ஐயப்பா - உந்தன்
திருவடியே சரணம் ஐயப்பா,

சுவாமியே ...
சுவாமியே ...
சுவாமியே ...


Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer