Showing posts with label விரதம். Show all posts
Showing posts with label விரதம். Show all posts

Tuesday, 10 September 2019

சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்

*சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்*

பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும்.

ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும்.

எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம்.

ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.

வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

Tuesday, 29 November 2016

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

பொன்மழை பொழிய வைத்த ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புனகபூஷன மாச்ரயந்தீ

ப்ருங்காங்கனேவ முகலாபரணம் தமாலம்

அங்கீக்ரு தாகில விபூதி ரபாங்கலீலா

மாங்கல்ய தாஸ்து மம மங்கல தேவதாயா: 1

 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.

முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:

ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி

மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா

ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2

 ஸ்ரீ லட்சுமி தேவியின் கண்களைப் பார்க்கும் போது நீலோத்பல மலரில் தேனை உண்ண வரும் பொன்வண்டுகளே நினைவிற்கு வருகின்றன. பெரிய நீலோத்பல மலர் போல காட்சியளிக்கும் பகவானின் திருமுகத்தை நோக்கி தேவியினுடைய கண்கள் ஆசையோடு செல்வதும், வெட்கத்துடன் திரும்புவதுமாக இருக்கின்றன. பாற்கடலில் தோன்றிய அன்னை ஸ்ரீலட்சுமிதேவி ஸ்ரீமஹாவிஷ்ணுவையே பார்த்துக் கொண்டிருக்கும் அருட்கண்கள் என்னையும்பார்க்கட்டும். எனக்கு செல்வத்தை வாரி வழங்கட்டும்.

ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்

ஆனந்த கந்த மநிமேஷ மனங்கதந்த்ரம்

ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்

பூத்யை பவேன்மம பூஜங்க சயாங்கனாயா 3

 ஆதிசேஷன் மீது படுத்து பாற்கடலில் எப்போது யோக நித்திரையில் இருந்துவரும் ஸ்ரீமஹாமிஷ்ணுவின் மீது விழுகின்ற ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை என்மீது பட்டு எனக்கு அளவில்லாமல் செல்வத்தை அள்ளித்தருவதற்கு துணைபுரியட்டும்.

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித கெளஸ்துபே யா

ஹாராவலீவஹரி நீலமயி விபாதி

காமப்ரதா பகவதோபி கடாட்ச மாலா

கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4

 மது என்றழைக்கப்படும் அரக்கனை ஜெயித்ததில் அடையாளமாக நீலநிற மணிமாலையுடன் காட்சி கொடுக்கும் பகவானுடைய மார்பில் இனைந்து கிடக்கும் போது ஸ்ரீ மஹாலட்சுமியின் கண்கள் பகவான் மார்பில் கிடக்கும் நீலநிறக் கற்கள் போன்று பிரகாசிக்கின்றன. அந்த அருட்பார்வை எனக்கு எல்லாவித மங்களகளையும் உண்டாக்கட்டும்.

காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:

தாராதரே ஸ்புரதியா தடிதங்கனேவ

மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹனீய மூர்த்தி

பத்ராணி மேதிசது பார்கவநந்தனாயா: 5

 மிகக் கொடிய அரக்கனான கைடபனை வதைத்த பகவானின் மார்பில்

 இணைந்த தேவியின் கண்கள் மழை மேகத்தில் தோன்றிய மின்னலைப் போன்று காட்சி தருகின்றன. ஸ்ரீலட்சுமியின் இந்த மின்னொளிக் கண்கள் எனக்கு செல்வத்தை அளிப்பதாக.

ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்

மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேன

மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்

மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

 ஸ்ரீ பெருமாளிடத்தில் மன்மதனின் ஆதிக்கம் உண்டாகக் காரணமாக இருந்த கண்கள் எதுவோ அந்த தேவியின் கண்கள் எனக்கு செல்வத்தை வழங்கட்டும்.

விச்வாம ரேந்த்ர பதவீ ப்ரமதான தட்சம்

ஆனந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி

ஈஷன் நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்

இந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா 7

 அரக்கர்கள் பலரை அழித்த மஹாவிஷ்ணுவின் மனதிற்கு பெரும் மகிழ்ச்சியூட்டும் ஆற்றல் கொண்ட மஹாலட்சுமியின் திருக்கண்கள் எனக்கு செல்வத்தை அள்ளி வழங்கட்டும்.

இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர

திருஷ்ட்யாத்ரி விஷ்டப பதம் ஸ லபம் லபந்தே

திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்

புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா 8

 எல்லாவித யாகங்களும் பெருந்தவங்களும் செய்தால் மட்டும் அடையக்கூடிய சொர்க்க பதவியை அன்னை ஸ்ரீமஹாலட்சுமி தேவியின் அருட்பார்வையினால் மட்டுமே அடைய முடியும். அந்தத் தேவியின் திருப்பார்வை எனது வேண்டுதலை நடத்தி வைக்கப்படும்.

தத்யாத் தயானுபவனோ த்ரவிணாம் புதாராம்

அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷன்ணே

துஷ்கர்ம தர்மமபனீய சிராயதூரம்

நாராயண ப்ரணயனீ நயனாம் புவாஹ: 9

 எவ்வாறு கார் மேகமானது காற்றினால் திரண்டு மழையாகப் பொழிகிறதோ, அது போன்று ஸ்ரீமஹாவிஷ்ணுவின் பிரியத்திற்குரிய ஸ்ரீமஹாலட்சுமியின் அருட்பார்வை பட்டவுடன் என்னைப் பிடித்திருந்த வறுமை ஒழிந்து செல்வந்தனானேன்.

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி சாகம்

பரீதி சசி சேகர வல்லபேதி

ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய மேலிஷீ ஸம்ஸ்திதாயை

தஸ்யை நமஸ்த்ரி புவனைக

குரோஸ்தருண்யை! 10

 திரிகாலம் என்று சொல்லப்படுபவைகளான சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றில் முதலும் முடிவுமான சிருஷ்டி காலங்களிலும், சம்ஹார காலங்களிலும் வாணியாகவும், லட்சுமியாகவும், ஈஸ்வரியாகவும் தோன்றுகிற ஸ்ரீமஹாலட்சுமியே உன்னை வணங்குகிறேன்.

ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை

ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை

சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை

புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை 11

 நல்ல ஒப்பற்ற பேரழகுள்ளவளும், அருட்குணம் கொண்டவளும், மகாசக்தியுள்ளவளும், பகவானின் பிரியத்தையுடையவளும், எல்லாவித சுபகர்மங்களுக்கும் பயனளிக்கிற கருணைக் கடலுமாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவி எனக்கு அருள வேண்டும்.

நமோஸ்து நாலீக நிபானனாயை

நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை

நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை

நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

 பாற்கடலில் யோகநித்திரையில் பள்ளிக்கொண்டிருக்கும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அன்பிற்குரிய நாயகியே எனக்கு அருள்புரிய வேண்டும்.

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை

நமோஸ்து பூ மண்டல நாயிகாயை

நமோஸ்து தேவாதி தயாபராயை

நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

 முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு தன் கருணை வெள்ளத்தைப் பொழிந்தும், பரந்த இவ்வுலகமாகிய பூமிக்கு நாயகியாக விளங்கும் ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை வணங்கிப் போற்றுகிறேன்.

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை

நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை

நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை

நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

 சிவந்த தாமரைப் பூவில் வசிப்பவளும் சகல வுயிர்களின் நன்மை தீமைகளையும் கவனித்தபடி இருப்பவளுமான ஸ்ரீமந்நாராயணனின் பிரியத்திற்குரிய நாயகியே! உன்னை வணங்குகிறேன்.

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை

நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை

நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை

நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

 சகல ஐஸ்வர்யங்கள், எல்லாவித செல்வங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாகவும், எல்லா உலகங்களையும் படைத்தவளாகிய ஸ்ரீலட்சுமிதேவியே உனக்கு நமஸ்காரம்.

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தனானி

ஸாம்ராஜ்யதான விபவானி ஸரோருஹாணி

த்வத் வந்தனானி துரிதா ஹரணோத்யதானி

மாமேவ மாதரனிசம் கலயந்து மான்யே 16

 எல்லாவகைச் செல்வங்களைத் தரக்கூடியவளும், உலகத்து உயிரினங்கள் அனைத்திற்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடியவளும், பக்தர்களாகிய அடியார்களுக்கு வேண்டும் வரங்களை அள்ளித் தருபவளுமாகிய ஸ்ரீமஹாலட்சுமியாகிய உன்னை வணங்குகிறேன்.

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி

ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்

ஸந்தனோதி வசனாங்க மானஸை

த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

 தனது கடைக்கண் பார்வையால் கருணையை தன்னை வழிபடும் பக்தர்கள் மீது பொழிந்து அவர்களுக்கு எல்லாவித செல்வங்களையும் அள்ளித் தருகிற ஸ்ரீலட்சுமிதேவியை மிகவும் அடிபணிந்து வணங்குகிறேன்.

ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே

தவல தராம்சுக கந்த மால்ய சோபே

பகவதி ஹரிவல்லபே மனோஜ்ஞே

த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம் 18

 சகல உலகங்களுக்கும் செல்வங்களை அளவின்றிக் கொடுப்பவளும், ஸ்ரீமந்நாராயணனின் அன்புக்குரிய நாயகியாகிய ஸ்ரீமஹாலட்சுமி தேவியே உன்னை அடிபணிந்து வணங்குகிறேன்.

திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட

ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாம்னு தாங்கீம

ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீம் அக்ஷே

லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம் 19

 பாற்கடலை தேவர்கள் கடைந்த போது கிடைத்ததற்கரிய அமிர்தம் உண்டாகியது. அந்தப் பெருமை பொருந்திய பாற்கடலின் மகளானவளும், உலகத்திற்கெல்லாம் நாயகனான ஸ்ரீமஹாமிஷ்ணுவின் நாயகியுமான ஸ்ரீலட்சுமிதேவியே! உன்னை

வணங்கிப் போற்றுகிறேன்.

கமலே கமலாட்ச வல்லபேத்வம்

கருணாபூர தரங்கிதைரபாங்கை

அவலோகய மாமநிஞ் சனானாம்

ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

 எப்போதும் கருணைவெள்ளம் ததும்பி ஓடும் உனது கடைக் கண்களால், வறியவர்களில் முதல் நிலையிலிருக்கிற உனது பக்தன் பிழைக்கும் வழியைக் காட்டியருள வேண்டும்.

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்

த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்

குணாதிகா குரிதர பாக்ய பாகினோ

பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

 மூவலகங்களுக்கும் தாயாகவும், வேதங்களின் உருவ மாகவும், கருணைவெள்ளம் கொண்டவளும் ஆகத் திகழும் ஸ்ரீ மஹாலட்சுமியை மேற்கூறிய ‘கனகதாரா ஸ்தோத்திரத்தினால்’, நாள்தோறும் 108 முறை போற்றி செய்து வழிபடுவோர் மிகச் சிறந்த குணம்பெற்றவர்களாகவும், குறையாத செல்வம் உள்ள செல்வந்தர்களாகவும், உலக வாழ்வில் எல்லா ஐஸ்வர்யர்களையும் அடைத்து பூரண நலத்துடன் வாழ்ந்து விளங்குவார்கள்.

Saturday, 26 November 2016

வேங்கடேஸ்வர ஸ்வாமி கோவிந்த நாமாவளி!

வேங்கடேஸ்வர ஸ்வாமி கோவிந்த நாமாவளி!

ஸ்ரீஸ்ரீநிவாசா    கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா  கோவிந்தா
பக்த வத்சலா    கோவிந்தா
பாகவத ப்ரிய    கோவிந்தா
நித்ய நிர்மலா    கோவிந்தா
நீலமேகஸ்யாம   கோவிந்தா
புராண புருஷா    கோவிந்தா
புண்டரீகாக்ஷா     கோவிந்தா
கோவிந்தா ஹரி   கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

நந்த நந்தனா    கோவிந்தா
நவநீத சோர    கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ    கோவிந்தா
பாப விமோசன    கோவிந்தா
துஷ்ட சம்ஹார     கோவிந்தா
துரித நிவாரண    கோவிந்தா
சிஷ்ட பரிபாலக    கோவிந்தா
கஷ்ட நிவாரண    கோவிந்தா
கோவிந்தா ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

வஜ்ர மகுடதர       கோவிந்தா
வராக மூர்த்திவி        கோவிந்தா
கோபி ஜனலோல     கோவிந்தா
கோவர்த்தனோத்தார கோவிந்தா
தசரத நந்தன          கோவிந்தா
தசமுக மர்தன         கோவிந்தா
பட்சி வாகன    கோவிந்தா
பாண்டவ ப்ரிய    கோவிந்தா
கோவிந்தா ஹரி   கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

மத்ஸ்ய கூர்மா    கோவிந்தா
மதுசூதனஹரி    கோவிந்தா
வராக நரசிம்ம    கோவிந்தா
வாமன ப்ருகுராம கோவிந்தா
பலராமாநுஜ    கோவிந்தா
பௌத்த கல்கிதர  கோவிந்தா
வேணுகான ப்ரிய கோவிந்தா
வேங்கடரமணா  கோவிந்தா
கோவிந்தா ஹரி   கோவிந்தா
கோகுல நந்தன   கோவிந்தா
சீதா நாயக    கோவிந்தா
ச்ரித பரிபாலக    கோவிந்தா
தரித்ர ஜனபோஷக கோவிந்தா
தர்ம ஸம்ஸ்தாபக  கோவிந்தா
அனாத ரட்சக    கோவிந்தா
ஆபத் பாந்தவ    கோவிந்தா
சரணாகத வத்ஸல கோவிந்தா
கருணா சாகர    கோவிந்தா
கோவிந்தா ஹரி   கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

கமல தளாக்ஷ    கோவிந்தா
காமித பலதாதா    கோவிந்தா
பாப விநாசக    கோவிந்தா
பாஹி முராரே    கோவிந்தா
ஸ்ரீமுத்ராங்கித    கோவிந்தா
ஸ்ரீவத்சாங்கித    கோவிந்தா
தரணீ நாயக    கோவிந்தா
தினகர தேஜா    கோவிந்தா
கோவிந்தா ஹரி  கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

பத்மாவதி ப்ரிய     கோவிந்தா
ப்ரசன்ன மூர்த்தி  கோவிந்தா
அபயஹஸ்தப்ரதர்சன கோவிந்தா
மர்த்யாவதாரா    கோவிந்தா
சங்க சக்ரதர    கோவிந்தா
சார்ங்க கதாதர    கோவிந்தா
விரஜா தீரஸ்தா    கோவிந்தா
விரோதி மர்தன     கோவிந்தா
கோவிந்தா ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

சாளகிராமதர    கோவிந்தா
சகஸ்ர நாமா    கோவிந்தா
லக்ஷ்மீ வல்லப    கோவிந்தா
லக்ஷ்மண ஆக்ரஜ கோவிந்தா
கஸ்தூரி திலக    கோவிந்தா
காஞ்சனாம்பரதர கோவிந்தா
கருடவாகன    கோவிந்தா
கஜராஜ ரக்ஷக     கோவிந்தா
கோவிந்தா ஹரி  கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

வானர சேவித    கோவிந்தா
வாரதி பந்தன    கோவிந்தா
ஏழுமலைவாசா    கோவிந்தா
ஏக ஸ்வரூபா    கோவிந்தா
ஸ்ரீராம கிருஷ்ணா கோவிந்தா
ரகுகுல நந்தன    கோவிந்தா
பிரத்யக்ஷ தேவா    கோவிந்தா
பரம தயாகர    கோவிந்தா
கோவிந்தா ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

வஜ்ரகவசதர    கோவிந்தா
வைஜயந்தி மால கோவிந்தா
வட்டிகாசுப்ரிய    கோவிந்தா
வசுதேவ தனயா    கோவிந்தா
பில்வ பத்ரார்ச்சித கோவிந்தா
பிட்சுக சம்ஸ்துத    கோவிந்தா
ஸ்திரீபும் ரூபா    கோவிந்தா
சிவகேசவ மூர்த்தி கோவிந்தா
கோவிந்தா ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன     கோவிந்தா

பிரம்மாண்ட ரூபா  கோவிந்தா
பக்த ரட்சக     கோவிந்தா
நித்ய கல்யாண    கோவிந்தா
நீரஜநாப    கோவிந்தா
ஹதீராம ப்ரிய    கோவிந்தா
ஹரி சர்வோத்தம கோவிந்தா
ஜனார்த்தன மூர்த்தி கோவிந்தா
ஜகத்சாக்ஷி ரூபா    கோவிந்தா
கோவிந்தா ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

அபிஷேகப்ரிய    கோவிந்தா
ஆபன் நிவாரண  கோவிந்தா
ரத்ன கிரீடா    கோவிந்தா
ராமாநுஜநுத     கோவிந்தா
சுயம் ப்ரகாச    கோவிந்தா
ஆஸ்ரித பக்ஷ    கோவிந்தா
நித்யசுபப்ரத    கோவிந்தா
நிகில லோகேசா    கோவிந்தா
கோவிந்தா ஹரி  கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

ஆனந்த ரூபா    கோவிந்தா
ஆத்யந்த ரஹிதா    கோவிந்தா
இகபர தாயக    கோவிந்தா
இபராஜ ரக்ஷக    கோவிந்தா
பரம தாயாளோ    கோவிந்தா
பத்மநாப ஹரி    கோவிந்தா
பத்மநாப ஹரி    கோவிந்தா
திருமலை வாசா  கோவிந்தா
துளசி வனமால   கோவிந்தா
கோவிந்த ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன   கோவிந்தா

சேஷாத்ரி நிலயா கோவிந்தா
சேஷ சாயினி    கோவிந்தா
ஸ்ரீ ஸ்ரீநிவாசா    கோவிந்தா
ஸ்ரீ வேங்கடேசா    கோவிந்தா
கோவிந்த ஹரி    கோவிந்தா
கோகுல நந்தன    கோவிந்தா

Wednesday, 25 November 2015

திருகார்த்திகை திருநாள்

திருகார்த்திகை திருநாள்

நாளை 25/11/2015 திருகார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சில சிறப்பான தகவல்களைக் காண்போம். 

|| கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். இது தீபாவளி முடிந்த பதினைந்தாம் நாள் பௌர்ணமி திதியில் வருகின்றது.

|| கார்த்திகை மாதம்

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

|| கார்த்திகை நாள்

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள்முக்கியமான நாளாக தமிழர்களால் போற்றப்பட்டு வருகின்றது.

|| கார்த்திகை விழா

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

|| மூன்று ஆலய தீபம்

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், விஷ்ணுவாலய தீபம், சர்வாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.

*குமராலய தீபம்: முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

*விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

*சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

|| விரத முறை

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்றுஅதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில்காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

|| வீடுகளை அலங்கரிக்கும் முறை

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

|| கார்த்திகை நட்சத்திரம்

கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.

|| சங்கநூல்களில் கார்த்திகை

கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது.

Monday, 12 October 2015

நவராத்திரி விரதம் பிறந்த கதை


நவராத்திரி விரதம் பிறந்த கதை

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள். மகிஷம் என்றால் எருமை.

இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை திதியிலிருந்து ஒன்பது நாள் விழா கொண் டாடப்படுகிறது. இந்த நாட்களில் நம்மை சூழ்ந்துள்ள அறியாமை என்னும் இருள் விலக அம்பிகையை இரவு நேரத்தில் பூஜை செய்கிறோம்.இருள் விலகி ஒளி பிறந்த பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாடுகிறோம்.

ஒரு நாளில் பகல் என்பது சிவனின் அம்சமாகவும் இரவு என்பது அம்பிகையின் அம்சமாகவும் கருதப்படுகிறது.பகலும் இரவும் இல்லாவிட்டால் நாள் என்பது கிடையாது. பகலில் உழைக்கும் உயிரினங்களை இரவில் அம்பாள் தன் மடியில் கிடத்தி தாலாட்டி உறங்க செய்கிறாள்.

இரவெல்லாம் விழித்திருந்து உலகை காக்கும் அம்பிகைக்காக ஒன்பது நாள் இரவு மட்டும் திருவிழா கொண்டாடப்படுகிறது என்பர். இதன் பின்னணியில் உள்ள கதை வருமாறு:-

சும்பன், நிசும்பன் என்ற அசுரர்கள் பிரம்மனின் அருளால் சாகாவரம்பெற்றனர். இருந்தாலும் தங்களுக்கு சமமான பெண்ணால் மட்டுமே எங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை  பெற்றிருந்தனர். எனவே தேவர்களை ஜெயித்தும் அதர்மங்களை விளைவித்தும் வந்தனர்.

அவர்களது அழிவு காலத்தில் ஆதிபராசக்தியிடமிருந்து கவுசிகியும், காளிகா என்ற காலராத்திரியும் தோன்றினர்.காளிகாவுக்கு துணையாக முப்பெரும்தேவியின் வடிவான அஷ்டமாதர்களும் அஷ்ராத்திரிகளாக தோன்றினர்.

பிராம்மணி என்ற பிரம்ம சக்தி அன்ன வாகனத்தில் அட்சமாலை , கமண்டலத்துடனும் வைஷ்ணவி என்ற விஷ்ணுசக்தி கருட வாகனத்தில் சங்கு சக்கரம் கதை தாமரைப்பூவுடனும் மகேஸ்வரி என்ற சிவனின் சக்தி ரிஷப வாகனத்தில் திரிசூலம் மற்றும் வரமுத்திரையுடனும் கவுமாரி என்ற கார்த்திகேய சக்தி ï வாகனத்தில் வேலாயுதத்துடனும் மாகேந்திரி என்ற இந்திரனின் சக்தி ஐராவதத்தில் வஜ்ராயதத்துவம் வாராஹி என்ற வாராஹிருடைய சக்தி எருமை வாகனத்தில் கலப்பையுடனும் சாமுண்டா என்ற பைரவரின் சக்தி எம வாகனத்தில் கத்தியை ஏந்தியவளாகவும் நரசிம்மஹி என்ற நரசிம்மரின் சக்தி கூரிய நகத்தை ஆயுதமாகவும்  கொண்டு கமல பீடத்தில் தோன்றினார்கள்.

இவர்கள் காளிகா என்ற சண்டிகா தேவியுடன் ஒன்பது ராத்திரிகளாயினர்  இந்த நவராத்திரி தேவதைகள் சும்ப நிசும்பர்களை ஒழித்தனர். அசுரர்களின் கொடுமையில் இருந்து விடுபட்ட தேவர்கள் கவுசிகியான அம்பிகையையும், நவராத்திரி தேவதைகளையும் போற்றி துதித்தனர். இந்த வைபவம் நவராத்திரிஎனப்படுகிறதுபடைத்தல், காத்தல், அழித்தல் அனைத்திற்கும் மூலமாக இருப்பவள் தேவியே.

பரம சுகத்தையும், நீண்ட ஆயுளையும், சுபிட்சம் பெற வகை செய்யும் அனைத்துச்  செல்வங்களையும்  அருள் பவள் அவளே. முத்தொழில் புரியும் மும் மூர்த்திகளும் வணங்கும் பரம் பொருள் பராசக்தியே. தினமும் அம்பிகையை வணங்கினாலும் புரட்டாசியில் வரும் நவராத்திரியில் வணங்குவது மிகுந்த பலனை அளிக்கும். புரட்டாசி மாதப் பிரதமை முதல் நவமி வரை நவராத்திரி காலமாகும்.

அதில் முக்குணங் களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன் பது நாள்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் துர்கா பரமேஸ்வரியையும் அடுத்த மூன்று நாள்கள் மகாலட்சுமியையுëம், கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதியையும் வணங்கவேëண்டும். வணங்குவதால் எதையும் பெறலாம். கல்வி,இசை,புகழ்செல்வம்தானியம்,வெற்றிதண்ணீர் ஆகிய அனைத்தையும் சக்தியே தருகிறாள்.

ஆதிபராசக்தியை துர்க் கையாக நினைத்து வழிபட்டால் பயம் நீங்கும்.லட்சுமி வடிவில் தரிசித் தால் செல்வம் பெருகும். சரஸ்வதியாக எண்ணி வணங்கினால் கல்விச்செல்வம் சிறக்கும். பார்வதியாக வழிபட்டால் ஞானப்பெருக்கு உண்டாகும். எனவே தான் இந்நாட்களில் கொலுவும் வைக்கிறார்கள். தேவியை நடுவில் வைத்து, இந்த உலகப்பொருட்களை எல்லாம் சுற்றிலும் வைக்கிறார்கள்.


இதற்கு காரணம், தேவியால் தான் இந்த உலகம் இயங்குகிறது என்பதைக் காட்டுவதற்காக. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும்  ருத்திரன், சதாசிவன் ஆகிய சிவனின் மற்ற வடிவங்களும் சரஸ்வதி,லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மனி ஆகிய சக்திகளுக்குள் அடëக்கமாக உள்ளனர். எனவே சக்தியை வழிபட்டாலே அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதாக அர்த்தம்.*
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer