அருள்மிகு
அய்யப்பன்
பக்திப்
பாடல்.
பாடுவேன் உன்புகழ் பாடுவேன்
பத்மாசன யோகங் கொண்ட
பம்பா தீரவாசா உன்னை. (பாடு).
தேடுவேன் உன்னைத் தேடுவேன்
தேவாதி தேவா உந்தன்
திருமலரடி காணத் தேடுவேன்
உன்னைத் தேடுவேன். (பாடு).
நாடுவேன் நான் நாடுவேன்
நாயகனே சபரிமலைவாசா - நின்
அருளைப் பெற வேண்டி
நாடுவேன் உன்னை நாடுவேன். (பாடு).
ஆடுவேன் நான் ஆடுவேன்
ஹரிஹரசுதனே சரணமையப்பாவென்று
ஆனந்தமாக பாடி ஆடுவேன்.
சரணம் சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
No comments:
Post a Comment