Tuesday, 16 December 2014

கன்னி

கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) 75/100

கிளம்பிட்டாரு!அப்பாடி! நிம்மதிபெருமூச்சு விட்டுக்கிறோம்!

மென்மையான அணுகுமுறையைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

உங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அளவுக்கு அதிகமான பிரச்னைகளை சனிபகவான் தந்திருப்பார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர், உங்கள்  ராசியில் இருந்து 3-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது மிக சிறப்பான காலம். இவ்வளவு நாளும் ஏழரைச் சனியின் பிடியில் இருந்த நீ ங்கள், இப்போது அதிலிருந்து பூரணமாக விடுபட்டு நிம்மதி பெருமூச்சுவிடுவீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களை தர காத்தி ருக்கிறது. ஏழரை சனி காலத்தில் நீங்கள் பட்ட துன்பத்தை சொல்லி மாளாது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலை உங்களைத் தொடர்ந்திருக்கும்குடும்பத்திலும் பிரச்னை தலை தூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றிருக்க கூடும். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவுபொருள் இழப்பு என்று நடந்திருக்க வாய்ப்புண்டு. இந்த நிலையில் இப்போது சனி 3-ம் இடத்துக்கு மாறுவதன் மூலம் முயற்சி அனைத்தையும்  வெற்றி அடையச் செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் பன்மடங்கு லாபம் அதிகரிக்கும்.

குரு 2015 ஜூலை 4ல் சிம்மத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவர் பொருள் விரயத்தையும், வீண் அலைச்சலையும்  ஏற்படுத்தலாம். ஆடம்பர பொருள் வாங்குவதை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி நடத்துவதில் தாமதம் ஆகலாம். கணவன், மனைவி  இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உறவினர் வகையிலும் அதிக நெருக்கத்தை தவிர்ப் பது அவசியம். முயற்சி எடுத்தால் புதிதாக வீடு, மனை வாங்கும் எண்ணம் நினைவேறும். பணியாளர்கள் கடந்த காலத்தை போல் பலனை எதிர்ப் பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உங்கள் வேலைகளை வேறு நபரிடம் ஒப்படைக்க ÷ வண்டாம். தொழில், வியாபாரத்தில் பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசாங்க  வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. கலைஞர்கள் விடா முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசிய ல்வாதிகள் சுமாரான வளர்ச்சி காண்பர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை  தவிர்க்கவும். மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். குடும்ப ஒற்றுமைக்காக கணவரிடம் விட்டுக்  கொடுத்து போகவும்.

2015ம் ஆண்டு நிலை குடும்பத்தில் அமைதியும், ஆனந்தமும் நிலவும். கணவன், மனைவி இடையே இருந்த பிணக்கு மறைந்து அன்பு மேம்படும்புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். தற்போது உள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய வாகனம் எண்ணம்  கை கூடும். பணியில் புதிய தெளிவு பிறக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி கரமாக இருப்பர். வேலை இன்றி இருப் பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பகைவர்கள் உங்களின் நற்குணத்தை  உணர்ந்து சரணடைவர். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கலைஞர்கள் இது வரை கிடைக்காத பாராட்டு, விருது போன்றவை கிடைக்கப்  பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பலனைப் பெற்று மகிழ்வர். பொது மக்களிடையே நற்பெயர் உண்டாகும். எதிர்பார்த்த புதிய பதவி  கிடைக்கப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் பளிச்சிடுவீர்கள். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் யோகத்தைப் பெறுவர். விவசாயிகள் புதிய  சொத்து வாங்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரத்தில் சாதகமான முடிவு அமையும். கைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப் படுவீர்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். வக்கீல் தொழில் சிறப்பாக நடக்கும். பெண்கள் குடும்பத்தில்  உன்னத நிலையைப் பெறுவர். பிறந்த வீட்டில் இருந்து வெகுமதிகள் வந்து சேரும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு பெருமிதம் கொள்வர். மனம்  போல ஆடை, அணிகலன், ஆடம்பர பொருள் அதிகமாக வாங்குவீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு மணவாழ்வு கைகூடும். புதுமணத் தம்பதிக்கு  புத்திர பாக்கியம் உண்டாகும்

2016ம் ஆண்டுநிலை குடும்பத்தில் கடந்த காலத்தைவிட மகிழ்ச்சி அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்- மனைவி இடையே அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டாலும் அமைதிக்கு பங்கம் உண்டாகாது. சுபநிகழ்ச்சிகளை  ஆடம்பரமாக நடத்துவதன் மூலம் கடன் பட நேரிடலாம். பணியாளர்களுக்குப் பணிச்சுமை ஏற்பட வாய்ப்புண்டு. அதிகாரிகளின் ஆதரவு ஓரளவே  இருக்கும். இடமாற்றம் ஏற்படுமோ என்ற பயம் தொடரத்தான் செய்யும். வியாபாரிகளுக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். பொருள்  விரயம் ஏற்படலாம். கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். புதிய ஒப்பந்தம் பெறுவதிலும் விடாமுயற்சி தேவைமாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. பெண்கள் ஆடம்பரச் செலவைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

2017 ஜூலை வரை குடும்பத்தில் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். உறவினர்கள் வகையில் நன்மை உண்டாகும். சிலரது வீடுகளில் பொரு ட்கள் திருட்டு போகலாம். பணியாளர்கள் சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு  நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசாங்க வகையில் நன்மையான போக்கு உண்டாகும். விரிவாக்கம் செய் வதற்கான கடன் வசதி கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கடந்த ஆண்டு ஏற்பட்ட பிற்போக்கான  நிலையில் இருந்து மீண்டும் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். பெண்கள் குடும்பத்தில் செல்வாக்கான நிலை அமையப் பெறுவர். புதுமணத் தம்பதி யருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

2017 டிசம்பர் வரை குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை மனம் போல வாங்கலாம். கணவன்,மனைவி இடையே  அன்னியோனியம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் இடமாற்றம் காண்பீர்கள். அதுவும் விரும்பிய இடமாக அமையும்.வியாபாரம்  கடந்த காலத்தைப் போல நஷ்டத்தை உண்டாக்காது. ஓரளவு சேமிப்பு
இருக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்கள் சிறந்து விளங்கும். கலைஞர்கள் சிறப்பான  முறையில் வாழ்வர். அரசியல்வாதிகள் பலவிதத்திலும் மேம்பாடு அடைவர். விரும்பிய விதத்தில் பதவியும், பணமும் கிடைக்கும். பண வரவு சிற ப்பாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடை, தோல்வி இனி இருக்காது. பொதுமக்களிடத்தில் நல்ல செல்வாக்கும், பாராட்டும் கிடைக்கும்மாணவர்கள் கல்வியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. விவசாயிகள் எள், பனை பொருள், மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்விவசாயத்தை நவீனப்படுத்தும் இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு  விவகாரத்தில் சாதகமாக நிலை உருவாகும். பெண்கள் குதுõகலமான பலனைக் காண்பர். உங்கள் சாதுரியத்தால் தடைகளை எளிதில் முறியடித்து  வெற்றி காண்பீர்கள். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.
கணவரின் அன்பு கிடைக்கும்.

பரிகாரப்பாடல்!

தாய் நினைந்த கன்றே யொக்க என்னையும்தன்னையே நினைக்கச் செய்து தானெனக்தாய் நினைத்தருள் செய்யும் அப்பனைஅன்று இவ்வையகம்  உண்டு உமிழ்ந்திட்டவாயனை மகரக் குழைக்காதனைமைந்தனை மதிள் கோவல் இடைகழிஆயனை அமரர்க்கரி யேற்றை என்அன்பனை அன்றி õதும் அறியேனே!

பரிகாரம்!


கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோயிலுக்குச் சென்று வரலாம். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறலாம்துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். கிருஷ்ணரை வழிபடுவது மேன்மையளிக்கும். ராகு காலத்தில் பைரவருக்கு தயிர்ச்சாதம் படைத்து வழிபடலாம்வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer