சபரிமலை
ஸ்ரீ அய்யப்பன் துதிப் பாட்டு.
ஐயப்பா சாமியே... அருள் செய்யப்பா சாமியே
வெற்றிக் கருளும் சபரிமலைக்கு
விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும்
சற்று மறந்து தன்னை உணர்ந்தால்
சத்திய முரசும் சுற்றி முழங்கும். (ஐ).
மாலையணிந்து ஆலயம் வந்தால்
பால் முகம் போல் வாழ்வு மணக்கும்
குத்தும் கல்லும் கூரிய முள்ளும்
மெத்தையாக்கும் மெய்யருள் சேர்க்கும். (ஐ).
பம்பையாற்றில் ஆடிப் பணிந்தால்
பாற்கடல் வாசன் ஆற்றல் பிறக்கும். (ஐ).
உள்ள விளக்கம் உண்மை விளக்கம்
ஒளியின் விளக்கம் மகர விளக்கே. (ஐ).
மண்டல விரதம் மணிகண்டன் விரதம்
தொண்டர்கள் விரதம் திருவடி சரணம்
சித்தம் வளைந்தால் சித்தி கிடைக்கும்
பக்தி விளைந்தால் முக்தி கிடைக்கும். (ஐ).
நெய்யபிஷேகம் சாமிக்கே
ஐயனின் கருணை பூமிக்கே . (ஐ).
பதினெட்டாம் திருப்படி தொட்டு
மதிமுகம் காண நடை கட்டு
இருமுடி கட்டு திருவடி காண
விண்ணவர் போற்றும் தேவன் மலைக்கே. (ஐ).
பொற்பத மேடை அற்புத மேடை
நற்பத மேடை நாயகன் மேடை
சபரி வந்தால் சாந்தி கிடைக்கும்
சக்தி கிடைத்தால் சரணம் கிடைக்கும்
சபரிக்கு வந்தால் மோக்ஷம் கிடைக்கும்
சற்குரு நாதன் காட்சி கிடைக்கும்.
No comments:
Post a Comment