Showing posts with label Anmikam. Show all posts
Showing posts with label Anmikam. Show all posts

Wednesday, 11 September 2019

சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும் #பலன்கள்!

#சாளக்கிராம பூஜை செய்வதால் ஏற்படும்
#பலன்கள்!

1. சாளக்கிராம பூஜை #செய்பவன் #சித்தம் #சுத்தமாகும்.

2. சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுவாகவே #ஆகிவிடுகிறான்.

3. சாளக்கிராம சிலாவின் பிம்ப தரிசனம்
#கொலை செய்தவனின் #பாபத்தையும் போக்கும்.

4. சாளக்கிராமத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல #பாபங்கள்_கழன்று_ஓடும்.

5. இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் #திடீரென பூஜை செய்ய #நேர்ந்தாலும்_முக்தி_உண்டு.

6.சாளக்கிராம பூஜை செய்பவனுக்கு #எமபயமில்லை.

7. சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம் #இப்பூஜையினை_செய்பவர்கள்
#விஷ்ணுலோகத்தில் அனந்தகாலம் #வாழ்வார்கள்.

8. சாளக்கிராமத்தை #பக்தியுடன்_நமஸ்கரித்தவன் #தேவனாகிறான்...!
#அவன் சாதாரண #மனிதன் #அல்லன்...!

9. #சாளக்கிராமம்- பகவான் #இருக்குமிடம்.
#சர்வ பாபங்களையும்
#நாசம்_செய்யவல்லது.

10. பாபங்கள் செய்தவர்கள் கூட சாளக்கிராம பூஜையினால் #பரகதி அடைகிறார்கள். #பக்தியோடு செய்பவர்கள் #முக்தியடைகிறார்கள்.

11. அரணி கட்டையில் அக்னி உண்டாவதுபோல, #சாளக்கிராமத்தில் #ஹரி இருக்கின்றார். #லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட  ஹரி சாளக்கிராமத்தில் மிகவும் #பிரசன்னமாகவே உள்ளார்.

12. சாளக்கிராமத்தை பூஜை செய்தால் #அக்னிஹோத்தரமும் #பூதானமும் செய்த பலன்.

13. இராஜசூய யாகம் ஆயிரம் செய்தாலும்,
#ஒரு நாள் சாளக்கிராமத்தை #பூஜை செய்த பலனுக்கு #ஈடாகாது.

14. பன்னிரெண்டு சாளக்கிராமம் கொண்டு பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் #பூஜை செய்தபலன்
#ஒரே நாளில் கிடைக்கும்.

15. காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சாளக்கிராம பூஜையினால் #முக்திபெறுவான்.

16.#தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமலே #சாளக்கிராம பூஜையினால் #முக்தியடைவான்.

17. #சாளக்கிராம தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

18. பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சாளக்கிராமத்தில் #சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர்.

19. விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் #விஷ்ணுபதம் அடைகிறான்.

20. சாளக்கிராமம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும்,
#சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம்.

21. பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும்..! சாளக்கிராம தீர்த்தமே #போதுமே நம் #உள்ளும் #புறமும் #சுத்தமாகுமே.

22. ஒரு திவலை சாளக்கிராமம் தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவாநிலை கிடைத்துவிடும்.

#ஸ்ரீராமஜயம்

Tuesday, 10 September 2019

சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்

*சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்*

பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும்.

ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும்.

எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.

அம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம்.

எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான்.

அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.

சக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.

மாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.

கோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.

அம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம்.

ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும்.

வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.

Monday, 1 April 2019

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​


கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக்காப்பாற்றக்கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளை குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப்போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப்பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக்காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை
ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்கு புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மை காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
 சர்வமும் சிவமயம்
ஓம் வெற்றிவேல் முருகா....

கந்தர் ஷஷ்டி கவசம் பாடலுக்கு இங்கு கிளிக் செய்யவும் 


Saturday, 23 March 2019

தீப தீட்சை

சித்தர்களின்ஸ்ரீசக்கரம்
வாழ்க வாழ்க
*தீப தீட்சை*

வீட்டில் எல்லோரும் செய்யக்கூடிய ஒரு எளிய முறை ஒன்று சொல்லப் போகிறேன்.

நாம் நம் பூஜை அறையில் தினமும் தீபம் ஏற்றுவோம். அந்த தீப ஒளியை தினமும் 15 நிமிடம் பார்த்து வந்தால் பல நன்மைகளை அடையலாம்.

(முதல் நாள் 3 நிமிடம் தீப ஒளியை பாா்த்து செய்யவும் படி படியாக நேரத்தை அதிகாிக்கவும். இல்லை என்றாள் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும்)

அந்த தீபத்தில் இருந்து வரும் ஒளியை கண் அசைக்காமல் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, நமது மனமும் அடங்கும், கண்களுக்கும் மிகவும் நல்லது. கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண் எரிச்சல் போன்ற பல நோய்கள் சரியாகும். எவ்வளவு மனம் பாரமாக இருந்தாலும் சரி குறைந்துவிடும்.

பல பிரச்சனைகளுக்கு பதில் கிடைக்கும் என்பது மிகப்பெரிய உண்மையாகும். நமக்கே தெரியாமல் அதில் இருந்து நிறைய சக்திகள் நமக்கு கிடைக்கும். அந்த சக்தி என்ன மாற்றத்தை தரும் என்பதை பற்றி கூறுகிறேன்.

 1.மனக் கவலை தூள் படும்

 2.முடிவு எடுக்கும் திறன் ஏற்படும்

 3.கண்கள் புத்துணர்ச்சி பெறும்

 4.நாம் புதிய தெம்புடன் காணப்படுவோம்

5.ஆசைகள் நம்மை அடக்குவது போய், நாம் ஆசைகளை அடக்கிவிடுவோம்

6.ஒரு புதிய மனிதராய் காணப்படுவோம்

 7.ஒற்றைத்தலைவலி சரியாகும்

எனவே எல்லோரும் இதை தினமும் குறைந்தது 15 நிமிடம் அதற்கு மேலும் செய்யலாம். தொடர்ந்து செய்து வந்தால் பலன் அடைவது நிச்சயம்.

கடவுள் எப்படி உருவானார்?



கடவுள் எப்படி உருவானார்?


முதன் முதலாக கடவுள் எப்படி உருவானார் குருவே ? என்றான் அவருடைய பிரதான சீடன். நான் சொல்கிறேன், ஆனால் உன்னால் நான் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியுமா? என்று கேட்டார் குரு.

எனக்குப் புரிகிறார்ப்போல் சொல்லுங்களேன் என்றான் சீடன். சரி அதற்கு தகுந்த நேரம் வரும் அப்போது சொல்கிறேன் என்றார் குரு.

வழக்கம் போல இருவரும் ஆற்றில்
குளித்துவிட்டு நந்தவனத்துக்கு சென்று மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து தியான அறையில் வைத்தனர்.

தியானத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளையெல்லாம் செய்தான் சீடன்.குருவும் தியானத்தைத் தொடங்கினார்.சீடனின் மனம் தியானத்தில் லயிக்கவில்லை
அவன் கேட்ட கேள்வியிலேயே
சுழன்றுகொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ கூக்குரல்கள். உணர்வுக்கு வந்த போது அவன் கண்ட காட்சி, சற்று முன் உணர்வோடு தியானம் செய்து
கொண்டிருந்த அவனுடைய குரு மல்லாந்து படுத்திருந்தார். ஆமாம் அவர் உடலில் சலனமில்லை. அவர் உடல் சில்லிட்டுப் போயிருந்தது. அவர்முக்தி அடைந்துவிட்டார்.

அவனால் நம்ப முடியவில்லை ஆனாலும் அடுத்தடுத்து குருவை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அவன் அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவன் உலகமே குருதான். இப்போது அவரும் போய்விட்டாரே இனி அவன் என்ன செய்யப் போகிறான்.அவனுக்கு துயரம் மேலிட்டது, எதிர்காலம் அவனை பயமுறுத்தியது.

யார் யாரோ அவனுக்கு ஆறுதல்
சொன்னார்கள். இனி அவன்தான் அந்த ஆசிரமத்துக்கு தலைமை என்றார்கள். அவன் மனதில் இதெல்லாம் உறைக்கவில்லை..
ஆயிற்று குருவின் உடலை சமாதியில் இட்டு மண்ணை நிரப்பி மேலே மூடினர்.

மறு நாள் சீடன் குளித்துவிட்டு வந்தான்.ஆஸ்ரமத்தில் குருவின் புகைப்படம் ஒரு பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருந்தது.அவருடைய படத்துக்கு மாலை சாற்றிவிட்டு..அவரை வணங்கி தன் கடமைகளைத் தொடங்கினான்.

அசரீரியாய் குருவின் குரல் கேட்டது சீடனே என்ன செய்கிறாய்?

குருவே உங்களை வணங்கி விட்டு என் கடமைகளைத் தொடங்குகிறேன் என்றான் அவன்.

ஆமாம் நீ ஏன் என்னை வணங்க வேண்டும் ?,

கடவுளையல்லவா வணங்க வேண்டும்? என்றார் குரு.

குருவே என்னைப் பொறுத்தவரை
தாய்,தந்தை, குரு ,கடவுள் எல்லாமே
நீங்கள்தானே அதனால்தான் உங்களை வணங்கி விட்டு கடமைகளை தொடங்குகிறேன் என்றான்.

அப்படியானால் நீ என்னைக் கடவுளாகவும் மதிக்கிறாயா? என்றார் குரு.

ஆம் குருவே என்றான் சீடன்.
இப்போது புரிந்ததா கடவுள் எப்படி
உருவானாரென்று ? என்று கேட்டார் குரு.

ஆமாம் இப்போது புரிந்து கொண்டேன் என்றான் கண்களில் நீர் வழிய சீடன்.அவன் காதுகளில் யாரோ பிரார்த்தனை செய்யும் சப்தம் கேட்டது.கண்களைத் துடைத்துக்கொண்டு,
உணர்வுக்கு திரும்பினான்.

எதிரே அவனுடைய குரு
தியானம் செய்துகொண்டிருந்தார்.

தியானத்தை முடித்துவிட்டு அவனைப் பார்த்து இந்தப் பிரசாதத்தை எல்லோருக்கும் கொடு என்றார்.சீடனும் பிரசாதத்தை எல்லோருக்கும் வினியோகிக்கத் தொடங்கினான் ஒரு புதிய தெளிவுடன்.

"நீங்கள் எல்லா மதங்களுடைய கருத்தும் ஒன்று என்று எப்படிச் சொல்ல முடியும் என்று
கேட்டார்கள்.

யார் கடவுளை வணங்கினாலும்
தன்னுடைய எண்ணத்தைத்தான்,
மனதைத்தான் வணங்குகிறானே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தஒரு கவிதையைப் படித்துக் காண்பித்தேன்.

"கடவுளை வணங்கும் போது கருத்தினைஉற்றுப்பார் நீ
கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே"

எனவே யார் எந்த வகையில் கடவுளை வணங்கினாலும் சரி, சிறிது நேரம் பொறுத்து எது நிற்கிறது என்று பார்த்தால் உன்னுடைய மனம்தான் அந்த வடிவம் எடுக்கிறது.விக்ரகத்தையோ,சக்தியையோ,.அகண்டகாரமாக இருக்கக் கூடியதையோ வேறு எந்தப்
பொருளையோ கடவுள் என்று
வணங்கினாலும் அந்த வடிவம் எடுப்பது நீதான் உன் மனம்தான்" என்கிறார் மகரிஷி...

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

Monday, 4 March 2019

மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது?

1)மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது?
2) இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?
3) இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்?

(காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.... இந்த பதிவை முழுமையாக படித்தாலே முழு சிவ ரகசியங்களும் தானாக புரியும்)

எல்லா கேள்விகளுக்கும்...
      ஆன்மீக வழியில் ஒருபதிலும்,
      அறிவியல் ரீதியான ஒரு பதிவும் ,
      புராண ரீதியாக ஒரு பதிலும் ,
      மருத்துவ ரீதியாக ஒரு பதிலும் ,
      வாழ்வியல் ரீதியாக ஒரு பதிலும் ,
ஆக எந்த விதத்தில் வேண்டுமோ அந்த வகையில் பதில் கிடைக்கும் .

இந்து மதம் என்பது மதம் இல்லை , அது வாழ்வியல் நெறிமுறை , எப்படி ஒரு மனிதன் வாழவேண்டும் என்று செல்லும் நெறிமுறை பின்னடைய முனிவர்கள் , சித்தர்கள் , ஞானிகள் மூலம் மக்களுக்கு இறைவனால் சொல்லப்பட்ட விதிமுறைகள். என்பதே நிதர்சனமான உண்மை. சரி இனி ஒவ்வரு ரீதியான பதில்களையும் பார்க்கலாம்.

சிவராத்திரி என்பது விழா அல்ல! அது, மனதைக் கட்டுப்படுத்தும் மகாவிரதம். அதனால், இதைக் கொண்டாடுகிறோம் என்று சொல்வதை விட, அனுஷ்டிக்கிறோம் என்று சொல்வதே சரி.

 சிவராத்திரி என்றால் பட்டினி கிடப்பது, கண்விழிப்பது, கோவிலுக்குப் போவதுடன் நின்று விடாமல், இதன் தத்துவம் உணர்ந்து இவ்விரதத்தை அனுஷ்டித்தால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளலாம்.

நம் மனம் சந்திரனின் இயக்கத்தை பொறுத்து செயல்படுகிறது. சந்திரன் வளரும் நாட்கள் 15; தேயும் நாட்கள் 15. இதில் தேய்பிறையின், 14வது நாள், அதாவது, அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரன் ஏறத்தாழ மறைந்துவிடும். நம் மனமும் இப்படித்தான்… ஒருநாள், ஒன்றை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை பொங்கும். அடுத்த நாளே, ‘அது எதற்கு, அதனால் என்ன பயன்…’ என எண்ணி, அந்த எண்ணம் தேய்ந்து போகும். மறுநாளே, ’விட்டேனா பார்…’ என்று, அதே ஆசையின் மீது லயிக்க ஆரம்பித்து விடும்; இப்படி நிலையில்லாமல் இருப்பது மனம்.

சிவராத்திரியை ஏன் தேய்பிறையின்,14ஆம் நாள் அனுஷ்டிக்கின்றனர் தெரியுமா?

மனித மனம், ஒரு நிலைப் பட தியானம் அவசியம். அலைபாயும் மனதை, சிவத்தின் மீது வைத்து, எங்கும் போகாமல் கட்டிப் போட வேண்டும். அப்படி கட்டிப் போட்டாலும்,அமாவாசைக்கு முந்தைய நாள், சந்திரனின் சிறு கீற்றுப் போல, மனதின் ஏதோ ஒரு மூலையில் முந்தைய ஆசை எண்ணங்களின் சிறு வடிவம் புதைந்து தான் இருக்கும். அதையும் ஒழித்தால் தான், நாம் பிறவியிலிருந்து விடுபட்டு சிவனை அடையமுடியும். அதற்காக சிவனை வழிபடும் நாளே சிவராத்திரி.இந்த தத்துவத்தை உணர்த்தத்தான், சிவனை லிங்க வடிவில் படைத்தனர் நம் முன்னோர். லிங்கத்தின் பாணம் ஏறத்தாழ முட்டையின் வடிவில் இருக்கும். ஒரு முட்டை படம் வரையுங்கள். அதற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை. சுற்றிச் சுற்றிபோய்க் கொண்டே இருக்கும். அதே போன்றுதான் சிவனும்,
முதலும், முடிவும் இல்லாதவர்.

 மனிதர்களுக்கு அப்படி இல்லை. நமக்கு பிறப்பு என்னும் முதலும், மரணம் என்னும் முடிவும் இருக்கிறது. இது, நாம் செய்யும் பாவ, புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைத் தருகின்றன. சிலர் ஏழு பிறவி என்று மனிதர்களுக்கு கணக்குச் சொல்வர். ‘எழுபிறவி’ என்பதே சரி! நம் பாவக்கணக்கு கரையும் வரை, மீண்டும் மீண்டும் பூமியில் எழுந்து கொண்டே இருப்போம். பிறவிச் சூழலில் இருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்றால், இருக்கிறது… அதற்கு ஒரு மந்திர வார்த்தையைச் சொல்லியிருக்கின்றனர் முன்னோர்… அதுதான், ‘அன்பே சிவம்!’ பிற உயிர்களையும் தம்மை போல கருதி அன்பு செலுத்த வேண்டும்.

ப்ரதோஷத்தின் அடுத்தநாள் சிவராத்திரியைக் கொண்டாடுவதன் சூட்சுமம் என்ன?

புராணம் சொல்லியிருப்பதை முதலில் பார்ப்போம். என்றும் அழிவே இல்லாமல் அமிர்தம்
கடையப்படுகிறது. கடைபவர்கள் தேவர்களும்அ அசுரர்களும். மந்தார மலை மத்து, கடையும்போது முதலில் ஆலம், காலம் என்கிற இரண்டு விதமான விஷம் வருகிறது. உலகமக்களை இரட்சிக்கும் பொருட்டு சிவன் அதை பருகுகிறார். உமையாகிய சக்தி அதைக்கண்டத்தில் நிறுத்தி வைக்கிறார். எனவே சிவன் திருநீல கண்டர் என்று போற்றப்படுகிறார். ஆனால் இதற்குப் பின்னால் தெளிவான யோக விஷயங்கள் மறைந்துள்ளன.

 முதலில்நந்தியின் கொம்பின் நடுவில் நின்று தாண்டவமாடுவது குறித்துப் பார்ப்போம்.

 திருமந்திரத்தில் ,
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே”
                          இந்தபாடலை படிக்கும் போது ஒரு சந்தேகம் வரக்கூடும். வினாயகர் சிவனின் மகன்தானே? நந்தி மகன் என்று போடப்பட்டிருக்கிறதே என்று. சிவபெருமானே நந்தி தேவனாக குருவாக வந்தார் என்றும் சொல்வார்கள். அப்படி என்றால் வாகனமாகக் காட்டுவது எதனால் ?

இதில் உள்ள சூட்சுமத்த நந்தனாரின் பாடலில் ஒரு வரியில் கேட்கலாம். அதாவது அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் ஜாதியில் குறைந்தவர். ஆனால் பக்தியில் அவருக்கு ஈடு சொல்ல அன்று யாருமே இல்லை. சரி வாசலில் நின்று எட்டிப் பார்க்கலாம் என்றால், இந்த நந்தி மறைக்கிறது. அதை அவர் ”நான் செய்த பாவங்களல்லவா இப்படி நந்தியாக வந்து குறுக்கே நிற்கிறது ” என்பார். ஆக சிவபெருமானை நாம் அடையத் தடையாக உள்ள வினைகள் எங்கே இருக்கும்? நம் உயிர் சக்தியில் பதிந்திருக்கும். அந்த உயிர் சக்தியே நமக்குள் இருக்கும் நெருப்பாகிய குண்டலினி ஆகும். அதாவது நம் தீ என்பதே நந்தி என்றழைக்கப்படுகிறது. அசையாமல் இருக்கும்
பேராற்றல் சிவம் அவரே இயக்கும் வல்லமையுள்ள சக்தியாகி நம் உடலில் உயிராக விளங்குகிறார். இதையே குண்டலினி சக்தியாகிய நந்தியின் மேலேறி அமர்ந்திருப்பது போல் காட்டப்படுகிறது. வினாயகர் பார்வதியின் பிள்ளை தான் என்று சொல்வார்கள்.

 சிவத்தின் சக்தி அம்சமே குண்டலினியாகி நம் மூலாதாரத்தில் உறைகிறது. எனவேதான் மூலாதாரத்தின் தேவதையாக கணபதியைக் குறிப்பிடுவார்கள். வினாயகரின் உருவமே யோகத்தை உணர்த்துவது என்பதை வினாயகர் அகவல் மூலம் ஔவை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

                   குண்டலினியானவளை உச்சிக்கு ஏற்றி
சிவத்தோடு கலக்கும் போது அமிர்தம் உண்ணலாம். குண்டலினி உச்சியில் இருக்கும் போது உச்சியில் சிவதாண்டவம் காணலாம்.எல்லாமே யோக விஷயங்களின் குறிகாட்டிகளாகவே திகழ்கின்றன. பாற்கடல் நம் உடல், நம் முதுகுத் தண்டே மந்தாரமலை, வாசி எனப்படும் சுவாசமே வாசுகி, இடகலை, பிங்கலை என்பது தேவர்கள், அசுரர்கள். வாசி யோகத்தின் மூலம் தவம் செய்யும் போது குண்டலினியானவள் மேலேரும் போது முதலில் நமது பாவ வினைகள்தான் மேலேறும். அது அனாகதம் வரும் போதே அதாவது ஆத்ம லிங்க தரிசனம் காணும் போதே இறையாற்றலோடு கலக்கும், அவ்வாறு கலந்தால் எல்லா தவப் பலனும் வீணாகிவிடும் என்று குண்டலினி தேவியானவள் அதை விசுத்திக்கு மேலேறாமல் தடுத்து விடுவாள். விசுத்திக்கு மேலே பாவம் நீங்கிய சுத்த சக்தியே சிவத்தோடு ஒன்று சேர்ந்துசாதகனுக்கு அமிர்தம் கிடைக்கச்செய்யும். பிரதோஷம் என்றால் பகல் முடிந்து சூரியன்அஷ்தமிக்கும் காலம் என்பார்கள். அதற்குஇன்னொரு பொருளும் உண்டு. அதாவதுஒடுங்கும் நேரம். எல்லா புலன்களும் ஓடுங்கி மகாசக்தி மேலேறும் நேரம். ஶ்ரீவித்யை மார்க்கத்தில் தோள்கண்டம், நீள் கண்டம் என்று சொல்வார்கள். அண்டத்தையும் , பிண்டத்தையும் இணைக்கும் கண்டமாகிய தொண்டைப்பகுதியைக் குறித்துசொல்வார்கள். பக்தர்களை இரட்சிக்கும் படிக்கு அவர்களது பாவமாகிய விஷத்தை சிவன் ஏற்றுக் கொள்வார். ஆனால், மகா சக்தியானவள் அது மேலேறினால் எல்லாம் கெடும் என்று அதை கண்டத்தில் நிறுத்திவிடுவாள்.

ஆக பிரதோஷ வேளையில் (ஒடுங்கும் நேரத்தில்) நமது பாவங்களை சிவன் ஏற்றுக் கொள்வார் என்றுதான் பிரதோஷமும். இதற்கு முன்னால் ஒடுங்கியவர்களின் (நம் முன்னோர்களின்) பாவத்தை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும். பூமியில் உள்ளவர்கள் காலத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு சந்திரனைத் தேய்து வளரச் செய்து அருளியதற்காகவும், அவ்வாறு தேயும் போது அமாவாசையை ஒட்டிய காலங்களில் ஏற்படும் பலவீனத்தை சரி செய்வதற்காகவும், சிவராத்திரி பூஜை எற்படுத்தப்பட்டது.

நீங்கள் மேல் நாடுகளில் உள்ளவர்களைக் கேளுங்கள் பதிமூன்றாம் நாள், அல்லது எண்ணைக் கண்டு பயப்படுவார்கள்.இதில் ஆச்சரியம் என்னவென்றால், நம் முன்னோர்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. பதி மூன்றாவது நாளான (திதி) அன்று பிரதோஷ வேளையில் பூமிக்கு வானில் இருந்து விஷத்தன்மையும், தீயசக்திகளும் வருவதாக நம்பிக்கை இருக்கிறது. அந்த வேளையில் பூஜை செய்து உலகை காக்க வேண்டுவதே பிரதோஷ பூஜை என்றும். அந்த நேரத்தில் முறைப்படி அதாவது ஆகமவிதிப்படி கட்டப்பட்ட கோவிலில் இருந்தால் அந்த விஷத்தன்மை உள்ள தீயசக்தியின் பாதிப்பு ஏற்படாது என்றகருத்தும் நிலவுகிறது .

 எது எப்படியோ எல்லா பாதைகளும் வழிபாடுகளோ, யோகமோ எதுவாயினும் பலன் இறைவனை அடைவதே. என்ன சற்று முன் பின்னாக அமையும். சிவ இராத்திரி எதனால் என்று புராணக்கதைகள் கேட்டிருக்கிறோம். ஒரு வேடன் புலிக்கு பயந்து மரத்துக்கு மேலே ஏறி அமர்ந்திருந்ததும், அது வில்வ மரம் என்பதும், தூக்கம் வராமல் இருக்க ஒவ்வொரு இலையாகப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருக்க, அது கீழே இருக்கும் சிவலிங்கத்தில் விழுந்ததனால், அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது, அதுவே சிவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
                               மற்றொரு புராணமும் உண்டு. நான்கு முகம் கொண்ட அயனும், திருமாலும் தங்களுக்குள்சொற்போரிட்டுத் தன்னை தேடின பொழுது, சிவ பெருமான் திருவுளம் கொண்டு மாசித் திங்கள் பதினான்காம் நாள் திங்கட்கிழமை திருவோணம் கூடிய நல்ல நாள் இராத்திரி பதினான்கு நாழிகையில் மகேஷ்வர மூர்த்தமாக அடியும் முடியும் காட்டாமல் அவ்விருவருக்கும் காட்சி அளித்து, விசாரிக்கும் போது, பிரம்ம தேவன் சிவனாரின் திருமுடியைக் கண்டதாகப் பொய்யும், திருமாலானவர் திருஅடியைக் காணவில்லை என்று மெய்யும் விளம்பின படியால், நான்முகனுக்கு கோவிலே இல்லாமல் போவது என்ற சாபமும், திருமாலுக்கு காத்தற்சிறப்புரிமை உண்டாகக் கடவது என்று வாழ்த்தும் அருளின தன்றி, அக்காட்சி ஒருமூன்றேமுக்கால் நாழிகை அளவு விளங்கி மற்ற தேவர்கள் எல்லோரும் கண்டுள்ளமையால், லிங்கோற்பவ காலமே முகூர்த்தம் என்றும், இராத்திரியில் பரமசிவன் மகேஷ்வர மூர்த்தமாகத் தோன்றினபடியால் சிவராத்திரி என்றும் பெயர் பெற்றது. வேடனானவன் இதே நாளில் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்ததால் சிவதரிசனம் பெற்றான் என்பதே உண்மையாகும்.

ஆனால்,

இதற்குப் பின்னால் விஞ்ஞான ரீதியான காரணம் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசை,பௌர்ணமி அதற்கு முன் பின் தினங்களில் பூமியில் சந்திரனுடைய காந்த சக்தியில் மாற்றம் ஏற்பட்டு சகல விதமான ஜீவராசிகளும் மனநிலைத் தடுமாற்றத்திற்கு ஆளாகி, அந்த நேரத்தில் உதிக்கும் எண்ணங்களினால் செயல்படும் செயல்களின் விளைவாகத்துன்பங்களை அனுபவிக்கின்றனர். இது அவர்களை அறியாமலேயே ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டிருக்கிறது.காரணம் என்னவென்றால் சந்திரன் மனோகாரகன். மனதையும் அதன் எண்ணங்களையும் ஆள்பவன். மனநோயாளிகள் அமாவாசையை ஒட்டிய நாட்களில் அதிகத் துன்பத்திற்கு ஆளாவதும் இதனால்தான். மேற்படி நாட்களில் வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதுஅனுபவத்தில் நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சாதாரணமானவர்களுக்கு மேற்படி நாட்களில் ஞாபகமறதி, அலர்ஜி, டென்சன்(மன அழுத்தம்), ஜீரண சக்திக் குறைபாடு போன்றவைகளால், சோர்வு, தூக்கமின்மை, அதிக உஷணம் போன்ற துன்பங்கள் ஏற்படும். இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் இதை உணராமல் நாம் வாழந்து பழகிக்கொண்டோம். நம் முன்னோர்கள் இதைப்புரிந்து கொண்டதால், அமாவாசை மற்றும் பௌர்ணமியை ஒட்டிய நாட்களில் மனவலிமையையும், அறிவின் விழிப்பாற்றலைத்தூண்டவும் மன ஒருமை மற்றும் உடல் இயக்கங்களில் நிதானத்தைக் கொண்டுவரவும் விரதம் மற்றும், பூஜைகள், தியானம் போன்றவற்றைக் கடை பிடித்தார்கள்.

 மாதாந்த வளர்பிறை, தேய்பிறை இரண்டிலும் வருகின்ற ஏகாதசி திதிகளில் குறைவான உணவுப்பழக்கத்தை கை கொள்வார்கள். துவாதசி திதிகளில் கிழங்கு உணவு வகைகளைத் தவிர்த்து, உப்பைக் குறைத்து, கீரைவகைகளை அதிகமாகச் சேர்ப்பார்கள். திரியோதிசி நாட்களில் உணவில் எண்ணெயை நீக்கி, இனிப்பை சொஞ்சம் சேர்த்து மதியம்1.30 மணிக்குள் உண்பார்கள். சதுர்தசி திதிகளில்(மாத சிவராத்திரி) மதிய உணவு அரை வயிறும் இரவு பால் பழம் உணவாகக் கொள்வார்கள். சிலர் சிவ சிந்தனையில் இருந்து பூஜை, அபிஷேக ஆராதனைகளைச்செய்வார்கள், யோக சாதகர்கள் தியானம் மேற்கொள்வார்கள்.

 மாத சிவராத்திரியில் நடுச்சாமம் (இரவு 12.00 மணி) வரை விழித்திருந்து ஈசனை நினைத்து பூஜைகளோ, தியானமோ மேற்கொள்வார்கள். அதற்குப்பிறகு ஓய்வு எடுப்பார்கள். இவ்வாறாக சிவராத்திரி பூஜையினை மாமாங்க வழிமுறையாக செய்து வந்து 12 வது மாதம் வருகிற மஹாசிவராத்திரி (சூரியன் சந்திரனின் வீட்டுக்கு எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கும் காலம்) அன்று இரவு முழுவதும் கண்விழித்து ஈசனை மனதில் நிறுத்தி சிவ பூஜையினைச் செய்து மாமாங்க பூஜையினை நிறைவு செய்வார்கள். அதாவது சரியை வழியில் உள்ளவர்கள் பூஜைகள் விரதங்கள். கிரியை வழியில் உள்ளவர்கள் இரவில் தூங்கி விடும் அறிவை தூங்காமல் விழிப்பு நிலையில் இருக்கச்செய்வது(தியானம்). இதைக்கடைபிடிப்பதால்உடல்நலமும், மனவளமும் காக்கப்படும்.

சைவசமய ஆகமங்களில் சிவராத்திரி ஆகம வழிமுறைகள், கால வரையறை, பூஜைமுறை என்று விரிவான விளக்கங்கள்
கூறப்பட்டுள்ளன. பக்தியும், பூஜைகளும், விரதங்களும், தியான யோகங்களும் எல்லாமே ஈசனை அடைவதற்குத்தான். அதற்கு உடல்நலமும், மனவளமும் அவசியம் என்பதைக்கருத்தில் கொண்டே இத்தகைய நுட்பமான விரத முறைகள் நம் முன்னோர்களால் தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் இந்தப் பிரபஞ்ச சக்தியின் இயக்கத்தை ஒட்டியே வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள் என்பதையோசித்துப் பார்க்கும் போது அவர்களின்
விஞ்ஞான அறிவு குறித்து ஆச்சரியம் தோன்றுகிறது. மேலும் மெய்ஞானத்தின் ஒருசிறு பகுதியே விஞ்ஞானம் என்பதுவும் புலனாகிறது. அதற்காக நம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் நாளே சிவராத்திரி. இந்த விரதத்தை
பொருள்உணர்ந்து அனுஷ்டித்தால் சிவனருளால் அனைத்து வரங்களும் கிடைக்கும்.

மகா சிவராத்திரியில் இதை எல்லாம் செய்யாதீர்கள்!

*************************

மகா சிவராத்திரி அன்று இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம்.

மகா சிவராத்திரி அன்று நாம் செய்ய கூடாத சில நடைமுறை பழக்கத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்......

நான் கடந்த வருடம் சிவராத்திரி அன்று சிவனை தரிசிக்க கோவில் சென்ற பொழுது ஒரு புரம் உணவு வழங்கப்பட்டு கொண்டு இருந்தது, மக்கள் உணவுகளை உண்டு விட்டு கோவிலில் இலைகளை சிதறி கோவிலை அசுத்தப்படுத்தி கொண்டு இருந்தார்கள்.

மகா சிவராத்திரி அன்று செய்ய கூடாத மிக முக்கியமான தவறு பக்தர்களுக்கு உணவு அளிப்பது...

அடியார்கள், சிவாச்சாரியார்கள், கோவிலில் உள்ள குருக்கள் ஏன் இதை கவனித்து தானம் செய்பவர்களிடம் சொல்ல தவறுகிறார்கள் என்று புரியவில்லை,

உண்மையில் சிவராத்திரி நமக்கு அருளப்பட்டதன் காரணத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு மிக முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம். இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும்.

உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெறமுடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியும் இந்த நோக்கம் தான்.

கோவில் என்ன சிற்றுண்டி கடையா? இப்படி பிரசாதம் என்று அவர்கள் பசியை வெல்ல உதவாமல் தரிசிக்க வரும் பக்தர்களை பசியாற்றி மஹா சிவராத்திரி நோக்கத்தை கெடுத்து சாபத்தை பெறுகிறார்கள் என்ற காரணத்தை யார் சொல்வது. கோவில் நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை.

மகா சிவராத்திரி அன்று அம்பாளே உணவு அருந்தாமல் இருக்கும் பொழுது நமக்கு ஏன் உணவு?

மேலும் சிவபெருமான் ஆரவாரத்தை விரும்பாதவர், ஏகாந்தம்; ஏகாந்தம்; ஏகாந்தம். முற்றிலும் அமைதி இவர் விரும்புவது அமைதி

மஹா சிவராத்திரி அன்று சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம்.

சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாட்களில் நூறுகோடி முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.

ஆனால் பக்தர்களின் ஆரவாரம், கேளிக்கைகள், சப்தம் கோவிலை பிளக்கிறது. சிவராத்திரி விழாவாக மாறிக்கொண்டு இருக்கிறது.

ஆன்ம தரிசனம் தேடும் சிவ பித்தர்களுக்கு,

மாலை 6 மணிக்குள் குளித்து விட்டு, உணவு முடித்து விட்டு கோவிலுக்கு செல்லுங்கள், பணியில் உள்ளவர்கள் பணி முடித்து விட்டு குளித்து விட்டு கோவிலுக்கு சென்று அமைதியாக ஒரு இடத்தில அமர்ந்து சிவ சிந்தனைகள் செய்தாலே போதுமானது.

மனதில் சொல்லவேண்டிய மந்திரம்

'சிவாய நம ஓம்
சிவாய சிவ ஓம்
சிவாய வசி ஓம்
சிவ சிவ சிவ ஓம்'

இப்படி செய்வது ஒரு விதம்,

மற்றது 9 லிங்க தரிசனம் ஒரே இரவில் தரிசிப்பது இன்னொரு விதம்,

சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவருடைய உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.

தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது, முடிந்தால் இவைகளை கோவிலுக்கு உபயமாக தரலாம்.

இப்படி சரியாக எதுவும் செய்யாமல் இரவு முழுவதும் தொலைகாட்சி பார்த்து கண்விழிப்பது, நண்பர்களுடன் பொழுது போக்கிற்காக கோவிலை சுற்றி வருவது, கோவிலில் உணவு கொடுத்து புண்ணியம் சேர்கிறேன் என்று செய்வது பலன் இல்லை.

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள்.

நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

முடிந்தால் முறையாக வழிபாடு செய்யுங்கள், தவறுகளும் மாறுதலும் செய்யவேண்டாம்.
திருச்சிற்றம்பலம்..

காசியில் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை என்பது பற்றி சிறு விளக்கம்

காசியில் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை என்பது பற்றி  சிறு விளக்கம் :

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை.

காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை.

ராமர், ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டுவரும்படி தெரிவித்தார்.

அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள். எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார்.

அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது.

இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார்.

என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறித் தடுத்தார்.

பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது.

அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

பைரவர் சாந்தியடைந்து, சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார்.

ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார்.

அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை.

நன்றி

ஓம் நமசிவாய 

இப்படி நம்பகத்தன்மையில்லாத ஒரு வழிபாட்டு முறை ஏன் வந்தது

*சிவபெருமான் என்றால்  ஏன் பயம்*


 • ஒரு சிலர் சிவாலயங்களுக்கு  சென்றால் எதுவுமே இல்லாமல் , ஓட்டையாண்டியாகிவிடுவோம் என பயப்படுகிறார்..!

 • சிவத்திருமேனி வீட்டில் வைத்தால் குடும்பமே ஆடிவிடும்.

 • ஒற்றைக்காலில் நிக்கிற சாமி

 • சுடுகாட்டு சாமி இன்பத்தையே தராது பணமே சேராது என பயபபடுகிறார்..!

 • ஒருவர் சிவனடியாராக ஆக வேண்டுமென்றால் கட்டுப்பாடு சுத்தம் பத்தம் புலால் மது மாது இதையெல்லாம் சமாளிப்பது சாத்தியமா என பயப்படுகிறார்...!

 • ஒரு சிவனடிாரைப் பார்த்தால் இவர் இப்படித்தானே இருக்க முடியும் ஏன் இப்படியிருக்கிறார் ..?

இப்படி இருந்தால் சிவனடியாராக எப்படியிருக்க முடியும் ? என சிவத்திற்கே  பயப்படுகிறார்...!

 • ஒரு சிலர்தான் இதைத் தாண்டி சிவத்தை வணங்க துணிகிறார்கள்

அவர்களில் பலர் மேற்காட்டப்பட்ட கட்டுப்பாடுகளை கடைபிடித்து எங்கு மீறிவிடுவோமோ என பயந்தே  வாழ்கின்றனர்...!

 • சிவம் சோதனைச் செய்யும் அறிவியல் ஆசிரியராகவே பார்க்கப்படுகிறார்...!

*இப்படி நம்பகத்தன்மையில்லாத ஒரு வழிபாட்டு முறை ஏன் வந்தது*

 • சிவாலயங்களுக்கோ ,வீட்டிலிருந்த படியோ  தென்னாடுடைய சிவனேப் போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !
என கூட்டத்தோடு கோசம் போட்டுவிட்டு
"அப்பா இறைவா (பிரதோசமோ சிவராத்திரியோ) இப்படி ஒரு நல்ல நாளில் உன்னை வணங்குகிறேன்..

என்னை எப்படியாவது காப்பாற்று
பெருந்துன்பத்திலிருக்கிறேன் " என ஒரு நிபந்தனை...!

 • மறுநாள் "ஆத்தா தாயி என்ன பெத்தவளே ,
உன் பிள்ளைய நீதாமா காப்பாத்தனும் ..
தீரா துன்பத்துல இருக்கிறேன் "என ஒரு நிபந்தனை...!

 • அன்று மாலையே "அப்பனே பிள்ளையாரப்பா,
சங்கட சதூர்த்தி திருநாள்ள உன்னப் பார்க்க வந்துருக்கன் ..
நீதான் பா என் சங்கடத்த தீர்க்கனும் "
என ஒரு நிபந்தனை..!

 • மறுநாள் "முருகா முருகா முருகா,
அப்பனுக்கு உரைத்த அப்பனே ஆறமுகனே உனக்கு காவடிதூக்குறன் நீதான்பா காப்பாத்தனும் "
என ஒரு நிபந்தனை..!

 • கார்திகை மாதம் வந்துவிட்டது
"சாமியே சரணம் ஐயப்பா ஒரு மண்டலம் நீதான்பா முழுமுதற்கடவுள் ....
இந்த வருசம் பூரா நீதான் காப்பாத்தனும்" என நிபந்தனை..!

 • அப்பா மலைக்குப்போய்வந்து இரண்டுமாதம் ஆயிட்டு திருப்பதி போய்  மொட்டபோட்டு வந்தா திருப்பம் வரும்னாங்க .குடும்பத்தோட போய்டு வருவோம்...திருப்பம் வரும்..."! என நிபந்தனை..!

 • இப்படி அடுக்கிக்கேட்டே போனா எப்ப எந்த சாமி  அருள்புரியுது ...!
அந்த அருளை வைத்து எப்பதான் வாழ்க்கை திருப்தியடைந்தது?
இதுதான் வழிபாட்டு முறையா ..?

இப்படிப்பட்ட வழிபாடுமுறையால
மக்கள் மனமெல்லாம் சந்தோசமா அமைதியா இருக்கா?

இல்லை என்றால் ,
வழிபாட்டு முறையிலும் ,அமைதியும் தெளிவும் நம்பத்தன்மையும் இல்லாததே காரணம்...!

தெய்வம் என்று நீங்கள் எந்த ஒன்றை உண்மையாக மெய்யாக நம்புகிறீர்களோ
அந்த தெய்வம் எந்தப்பெயரில் ,எந்த உருவத்தில் இருந்தாலும் அதுதான் சிவம்...!

இதைத்தான்
"யாதொரு தெய்வமாகினும்
மாதொருபாகத்தனாய் அருள்வதாகப் பொருள்.."!

தவிர பார்ப்தையெல்லாம் நம்புகிறோம் என்ற மாயையில் ,
எதிலும் நம்பகத்தன்மையில்லாது இருப்பது  பக்தியல்ல.!

*சிவபெருமான் அன்பே வடிவானவர்*

கருணையே உருவானவர் என்பது அவரை முழுமுதற் கடவுளாக உணர்ந்தவரால் மட்டுமே உணர முடியும்..!

அவர் கேட்பதை கொடக்கிற சாமியா என கேட்க வேணாம் ...
நமக்கு  உகந்தது என்றால் நாம்  கேட்காவிடுனும் கொடுக்கும் தயாபரன் சிவம்..!

இது உண்மையா என கேட்க வேணாம் .
ஒருமுறை முழுதா நம்பினோர்கு தன்னை முழுசா காண்பிக்கும் கூத்தப் பெருமான் சிவம்..!

தன் பிரச்சனை தீர்ப்பாரா என கேட்க வேணாம் ...
பிரச்சனைக்கு பரிகாரம் சொல்லாமல் தீர்வுதரும் நீதிமான் சிவம்..!

இன்பம் தருவாரா என கேட்க வேணாம் .
இன்பத்தின் வழியே உள்ளே நுழையும் தென்றல் சிவம்..!

நம்பலாமா என்று கேட்க்க வேணாம் .
உண்மையாக நம்பிக் கெட்டவரில்லா சாதனையாளன் சிவம்..!

ஒருமுறை உண்மையா நம்பி ஒருநிமிடம் கண்ணை மூடுங்க தில்லை அம்பலத்தான் ஆடுவார் ...!
உங்கள் வாழ்வில் இனி உங்களுக்காக என்ற மெய்ப் புலப்படும்..!

• சிவாய நம ஓம் அபாயம் யாவும் போம் !
• அபாயம் யாவும் போம் உபாயம் அறிவோம் !!

• சிவ சிவ என்போம் சிவகதி  பெறுவோம் !
• ஹர ஹர என்போம் அவன் தாள் பணிவோம் !!

நற்றுணையாவது நம்சிவாயவே !

திருச்சிற்றம்பலம்

கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?

🕉🔯
*கடவுள் மந்திரம், ஜோதிடம் உண்மையா? பொய்யா?*

திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இதற்கு சான்றளிக்கிறது.

*மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு..*
*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு..*
*சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு..*
*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு..*

இதுதான், நமது சந்தேகங்களை தெளிவிக்கும் சூத்திரம்..

*இதற்கான விளக்கம்:*

மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல தெரிந்தவரை சொல்ல விட்டு நீங்கள் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்

*மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு:* வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து
அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள் என்பதுதான் இதன் பொருள்.

*சாஸ்திரம்தான் பொய்யானால் கிரகணம் பாரு:* ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்றிருப்பதைப் பார்த்து வியப்படைந்திருப்பர்.

எனவே ஜோதிடம் பொய் கிடையாது. அது அறிவியல் என்பதை கிரகணம் குறித்து பஞ்சாங்கம் சொல்லியுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்பது அதன் பொருள்.

*சாமிதான் பொய்யானால் சாணம் பாரு:* இது ரொம்ப சுவாரசியமான விஷயம். கிராமங்களில் பசு சாணத்தை எடுத்து அதை விநாயகர் என்று உருவம் பிடித்து வணங்குவார்கள்.
இப்படி விநாயகர் உருவம் பிடித்த சாணத்தை பிறகு தூக்கிப்போட்டு விடுவார்கள். அதில்தான் ஆச்சரியம். விநாயகர் என்று கும்பிட்ட அந்த சாணத்தில் மட்டும் கரையான் அரிக்காது. மற்றபடி தெருவில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் கிடக்கும் சாணத்தில் கரையான் குடியேறி, அதை சாப்பிடும். விநாயகர் என்று நாம் உருவேற்றி விட்ட அந்த சாணத்தில் கரையான் சேட்டை செய்யாது. இதில் இருந்து கடவுள் இருப்பதை பாமரனும் சாணத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம் என்பது தான் இந்த பழமொழியின் கருத்து.

நன்றி....

மகா சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம்

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே சிறந்தது மகாசிவராத்திரி தான். அதனால்தான் மகாசிவராத்திரியன்று நாம் சிவபெருமானை வழிபட்டால் நமது பாவங்கள் அனைத்தும் விலகும் என்கின்றனர். மகாசிவராத்திரியன்று எவ்வாறு விரதம் இருப்பதெப்படி? விரதம் இருப்பதால் ஏற்படும் பலன் என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.

• சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைப்பிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும்
அளிப்பார் என்பது ஐதீகம்.

• மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தியாகும்.

• மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் அனைத்து வளமும் வந்து சேரும்.

சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பவர்கள், சிவராத்திரிக்கு முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சிவபெருமானின் உருவப்படத்திற்கு தீப ஆராதனை காண்பித்து வழிபட வேண்டும். இதைத்தொடர்ந்து, சிவன் கோயிலுக்கு சென்று முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். மாலையில் மீண்டும் குளித்து சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இதை மேற்கொள்ளலாம். அருகில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டும் வழிபடலாம்.

ஜையின் போது சிவாய நம என்ற மந்திரத்தை உச்சரிப்பது மனோ சக்தியை கொடுக்கும். பூஜையின் போது, சிவனுக்கு உகந்த வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகச் சிறந்த பலனை தரும். அன்றைய தினம் இரவில் உறங்காமல், நான்கு வேளையும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, சிவனை வழிபட்டு, ஏழை-எளியவர்களுக்கு தங்களால் முடிந்த தானத்தை வழங்கி, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

சிவராத்திரி முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப்பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடைப்பிடிப்பது, நூறு அசுவமேதயாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பதற்கு ஈடாகாது

மகாசிவராத்திரி

Friday, 1 March 2019

எல்லாம் ஐந்து தான் எம்பெருமானுக்கு

ஓம்நமசிவாய. .......அன்பேசிவம்

எல்லாம் ஐந்து தான் எம்பெருமானுக்கு:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.பஞ்ச பூதங்கள்:-
~~~~~~~~~~~
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம் ஐந்து:-
~~~~~~~~~~~~~~
நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ - காரண பஞ்சாட்சரம்
சி - மகா காரண பஞ்சாட்சரம்

3). சிவமூர்த்தங்கள்:-
~~~~~~~~~~~~~
1.பைரவர் -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர் -வசீகர மூர்த்தி
4.நடராசர் -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர் - கருணா மூர்த்தி

4). பஞ்சலிங்க சேத்திரங்கள்:
~~~~~~~~~~~~~~~~~~
1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம் -நேபாளம்
3.போகலிங்கம் -சிருங்கேரி
4.ஏகலிங்கம் -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

5). பஞ்சவனதலங்கள்:-
~~~~~~~~~~~~~~
1.முல்லை வனம் -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -அவளிவணல்லூர்
3.வன்னிவனம் -அரதைபெரும்பாழி
4.பூளை வனம் -திருஇரும்பூளை
5.வில்வ வனம் -திருக்கொள்ளம்புதூர்

6). பஞ்ச ஆரண்ய தலங்கள்:-
~~~~~~~~~~~~~~~~~~
1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு -திருப்பாசூர்
3.ஈக்காடு -திருவேப்பூர்
4.ஆலங்காடு -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு -திருவிற்குடி

7). பஞ்ச சபைகள்:
~~~~~~~~~~~~
1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம் -பொன் சபை
3.மதுரை -வெள்ளி சபை
4.திருநெல்வேலி -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை

8). ஐந்து முகங்கள்:-
~~~~~~~~~~~~
1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு

9). ஐந்தொழில்கள்:-
~~~~~~~~~~~~
1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்

10). ஐந்து தாண்டவங்கள்:-
~~~~~~~~~~~~~~~~~~
1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்

11). பஞ்சபூத தலங்கள்:-
~~~~~~~~~~~~~~~~
1.நிலம் -திருவாரூர்
2.நீர் -திருவானைக்கா
3.நெருப்பு -திருவண்ணாமலை
4.காற்று -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை

12). இறைவனும் பஞ்சபூதமும்:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.நிலம் - 5 வகை பண்புகளையுடையது
(மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர் - 4 வகை பண்புகளையுடையது
(சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு - 3 வகை பண்புகளையுடையது
(ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று - 2 வகை பண்புகளையுடையது
(ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
(ஓசை )

13). ஆன் ஐந்து:-
~~~~~~~~~~~
பால் ,தயிர் ,நெய் ,கோமியம், கோசலம்

14). ஐங்கலைகள்:-
~~~~~~~~~~~~
1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை

15). பஞ்ச வில்வம்:-
~~~~~~~~~~~~
1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்

16). ஐந்து நிறங்கள்:-
~~~~~~~~~~~~~~
1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு - வெண்மை நிறம்

17). பஞ்ச புராணம் :-
~~~~~~~~~~~~~
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்

18). இறைவன் விரும்ப நாம் செய்யும் ஐந்து:-
~~~~~~~~~~~~~~~~~~~~~~
1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்

19). பஞ்சோபசாரம் :-
~~~~~~~~~~~~~~
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்

திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
சித்தமெல்லாம் சிவமயம்

பல்வேறு விதமான கோவில்கள்

கோவில் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.

இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன் என்பதை தெரிந்து கொண்டு எளிதாக பயணிக்க நாங்கள் உதவுகிறோம்.

கும்பகோணம் திருக்கோயில்கள் கருமுதல் சதாபிஷேகம் வரை பலனடைய இந்த கோவில்களை மற்றும் வழிபட்டால் போதும்.

கரு உருவாக (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி,

கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற     - திருக்கருக்காவூர்,

நோயற்ற வாழ்வு பெறுவதற்கு         - வைத்தீஸ்வரன் கோவில்,

ஞானம் பெற                 - சுவாமிமலை,

கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்,

எடுத்த காரியம் வெற்றி பெற,       
மனதைரியம் கிடைக்க.             - பட்டீஸ்வரம்,

உயர் பதவியை அடைய             - கும்பகோணம் பிரம்மன் கோயில்,

செல்வம் பெறுவதற்கு             - ஒப்பிலியப்பன் கோவில்,

கடன் நிவர்த்தி பெற             - திருச்சேறை சரபரமேஸ்வரர்,

இழந்த செல்வத்தை மீண்டும் பெற     - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி,

பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீரவும்         - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை),

திருமணத்தடைகள் நீங்க         - திருமணஞ்சேரி,

நல்ல கணவனை அடைய     - கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை,

மனைவி, கணவன் ஒற்றுமை பெற     - திருச்சத்திமுற்றம்,

பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர         - திருவலஞ்சுழி,

பில்லி சூனியம் செய்வினை நீக்க     - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி,

கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்,

பாவங்கள் அகல             - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்,

எம பயம் நீங்க                 - ஸ்ரீ வாஞ்சியம்,

நீண்ட ஆயுள் பெற             - திருக்கடையூர்.

35_காயத்ரி_மந்திரங்கள்

#35_காயத்ரி_மந்திரங்கள்

ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்

#காயத்ரி_மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

*1. வினாயகர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

*2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

*3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

*4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி*

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

*5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி*

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

*6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி*

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

*7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி*

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

*8. ஸ்ரீ ராமர் காயத்ரி*

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

*9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி*

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

*10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி*

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

*11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி*

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

*12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி*

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

*13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி*

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

*14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி*

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

*15. ஸ்ரீநிவாசர் காயத்ரி*

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

*16. ஸ்ரீ கருட காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

*17. நந்தீஸ்வரர் காயத்ரி*

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

*18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி*

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

*19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி*

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

*20. ஸ்ரீ காளி காயத்ரி*

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

*21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி*

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

*22. காலபைரவர் காயத்ரி*

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

*23. சூரிய காயத்ரி*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

*24. சந்திர காயத்ரி*

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

*25. அங்காரக காயத்ரி*

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

*26. புத காயத்ரி*

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

*27. குரு காயத்ரி*

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

*28. சுக்ர காயத்ரி*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

*29. சனி காயத்ரி*

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

*30. ராகு காயத்ரி*

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

*31. கேது காயத்ரி*

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

*32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்*

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

*33. வருண காயத்ரி*

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கோ

*34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)*

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

*35. குபேரன்*

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்...

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !.

*பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள் !..*

*1 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.*

*2 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.*

*3  தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.*

*4  தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.*

*5  கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.*

*6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.*

*7  சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )*

*8  சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.*

*9  திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.*

*10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.*

*11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான  வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.*

*12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.*

*13 ஈரோடு  காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.*

*14  மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.*

*16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.*

*17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.*

*18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது  பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.*

*19  தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.*

*20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.*

*21  தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.*

*22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி  சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை        செங்குத்தாக    நிற்கிறது.*

*23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.*

*24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும்  சுடுவதில்லை.*

*25  சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.*

*26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.*

*27  திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில்  பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.*

*28  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.*

*29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.*

*30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.*

*31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.*

*32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.*

*33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.*

*34  திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.*

*35  சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.  அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.*

*36  நாகர்கோவில் கேரளபுரம்  சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.*

வாழ்க வளமுடன்...

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஶ்ரீ பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஶ்ரீ பேச்சியம்மன் பற்றிய தகவல்கள்:

💥தேரிக்காட்டில் உள்ள ஶ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் தலமாகும்...
💥இங்கு அருள்பாலிக்கும் பேச்சியம்மனும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாவாள்...
💥இந்த கோவிலில் கற்குவேல் அய்யனுக்கு அடுத்தப்படியாக உத்தரவினை பேச்சியம்மன் சன்னதியில் பூ போட்டு பலரும் பார்க்கின்றனர்...
💥கோவில் சாமியாடிகள் மற்றும் பூசாரிகள் அய்யனுக்கு அடுத்தபடியாக இந்த பேச்சியம்மனிடம் தான் உத்தரவைப் பெறுகின்றனர்....
💥குழந்தை வரம் அளிப்பதில் மிக முக்கிய தெய்வமாக பேச்சியம்மன் அருள்பாலிப்பதால் குழந்தை இல்லாத தம்பதியினர் பலரும் இவளை வேண்டி மரத்தொட்டிலைக் கட்டுகின்றனர்...குழந்தை பிறந்த பிறகு இவளுக்கு மரப்பாச்சி பொம்மை மற்றும் சீலைப்பிள்ளையை நேர்த்திக்கடனாக வாங்கி வைக்கின்றனர்...
💥கற்குவேல் அய்யன் கிழக்கு நோக்கி நதியைப் பார்த்தும் பேச்சியம்மன் தெற்கு நோக்கி கடலினைப் பார்த்தும் இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்...
💥தேரிக்காட்டு பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் இங்குள்ள பேச்சியம்மன் வனப்பேச்சியம்மனாக அருள்பாலிக்கிறாள்...
💥அய்யனார் சைவப் பிரியராக இருக்கிறார்...கோவிலில் உயிர் பலியிடுதல் பெரும்பாலும் இவளுக்கு தான் பலியிடப்படுகிறது....
💥கள்ளர் வெட்டு திருவிழா முடிந்த பிறகு இவளுக்கு எண்ணற்ற உயிர் பலியிடப்படுகிறது...
💥கோவிலில் பேச்சியம்மனுக்கு தான் பெரிய அளவில் மலைப் போல் படையல் போடப்படுகிறது(பெரிய படைப்பு படைக்கப்படுகிறது)....
💥கோவிலில் உள்ள முளைப்பாரி மண்டபத்தின் பெயர் கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் முளைப்பாரி மண்டபமாகும்...இதிலிருந்து கள்ளர் வெட்டு திருவிழாவில் கற்குவேல் அய்யனுக்கும் இந்த பேச்சியம்மனுக்கும் தான் முளைப்பாரி போடப்படுகிறது என்பது புலனாகிறது....
💥திருவிழா காலங்களில் பேச்சியம்மனுக்கு எண்ணற்ற பட்டு சேலைகள் நேர்த்திக்கடனாக வருகிறது....
💥பக்தர்கள் பலர் பேச்சியம்மனை அய்யனின் தாயாகவும் சிலர் அய்யனின் பாச தங்கை தான் பேச்சியம்மன் என்றும் கருதுகின்றனர்...
💥கோவிலில் அருள்பாலிக்கும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பிரியமானவளாக பேச்சியம்மன் இருக்கிறாள்...
💥அய்யனுக்கு அடுத்தபடியாக பேச்சியம்மன் தனி சன்னதியில் வலப்புறம் ராக்காயி அம்மன் மற்றும் இடப்புறம் உச்சிமாகாளி அம்மன் உடன் அருளாட்சி புரிகிறாள்....
💥அய்யனின் முக்கிய பரிவார தேவதையாக தளவாய் வனப்பேச்சியம்மன் அருள்பாலிக்கிறாள்....
💥கோவிலில் உள்ள அக்னி மாடத்தி அம்மன் பேச்சியம்மன் அருளால் பிறந்து கன்னியாக அக்னியில் தெய்வ தன்மை அடைந்தவள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்....
💥பேச்சியம்மனுக்கு நேராக அவருடைய மகன் சுடலை மாடசாமி இருப்பது மற்றோரு சிறப்பாகும்.....

Thursday, 28 February 2019

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும்

பஞ்சாட்சரம் ஆனது மூன்று வகைப்படும் :

அவை முறையே ஸ்தூல ; ஸூக்ஷ்ம ; காரண பஞ்சாட்சரம் ஆகும்.

இதில்

நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம்

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம்

சிவசிவ - காரண பஞ்சாட்சரம்

#ஸ்தூல_பஞ்சாட்சரம் :

" நமசிவய " என்பது " ஸ்தூல பஞ்சாட்சரம் " ஆகும்

இம்மந்திரத்தை  ஓம்காரம் ஆன பிரணவத்தோடு சேர்ந்து
" ஓம் நமசிவய " என்று உச்சரிப்பதே மரபாகும்.

சித்தர்கள் இம்மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடாகவே உணர்ந்தனர்
இம்மந்திரத்தின் மூலம் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் ( நிலம் ; நீர் ; நெருப்பு ; மண் ; ஆகாயம் )கட்டுப்படுவதோடு ஐம்பொறிகளும் ( கண் ; காது ; மூக்கு ; வாய் ; மனம் ) நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும்.

பஞ்சாட்சரத்தின் பஞ்சபூதங்களை ஆளும் தன்மை ஆனது கீழ்க்கண்டவாறு குறிக்கும்.

1) ந - நிலத்தை குறிக்கிறது

2) ம - நீரை குறிக்கிறது

3) சி - நெருப்பை குறிக்கிறது

4) வ - காற்றை குறிக்கிறது

5) ய - ஆகாசத்தை குறிக்கிறது

எம்பெருமான் ஈசனின் பஞ்சமுகத்தோடு இணைந்த பஞ்சாட்சர தத்துவ விளக்கம் :

1)" ந "  - ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " மஞ்சள் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " கௌதம மகரிஷி " ஆவார்.

2) " ம " - ஈசனின் தெற்கு நோக்கிய முகமான
" அகோரம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " கறுப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " அத்ரி மகரிஷி " ஆவார்.

3) " சி " - ஈசனின் மேற்கு நோக்கிய முகமான
" சத்யோஜாதம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சாம்பல் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " விஸ்வாமித்ர மகரிஷி " ஆவார்

4) " வ " - ஈசனின் வடக்கு நோக்கிய முகமான
" வாமதேவம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " பொன் நிறம் " ஆகும்
இதன் ரிஷி " ஆங்கிரஸ மகரிஷி " ஆவார்

5) " ய " - ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " முகத்திற்கு உரியது ஆகும்
இதன் நிறம் " சிவப்பு நிறம் " ஆகும்
இதன் ரிஷி " பாரத்வாஜ மகரிஷி " ஆவார்.

#சூட்சும_பஞ்சாட்சரம் :

" சிவயநம " என்பது " சூட்சும பஞ்சாட்சரம் " ஆகும்.

இம்மந்திரத்தை ஓம்காரம் ஆன ப்ரணவத்தோடு சேர்த்து " ஓம்சிவயநம " என்று உச்சரிக்க வேண்டும்

எம்பெருமான் ஈசனின் ஐந்து முகங்களில் இருந்து " ஓம் " என்னும் " பிரணவம் " உதித்தது

அதாவது

1) ஈசனின் வடக்கு நோக்கிய முகம் ஆன
" வாமதேவம் " முகத்தில் இருந்து - " அகாரமும் "

2) ஈசனின் மேற்கு  நோக்கிய முகம் ஆன
" சத்யோஜாதம் " முகத்தில் இருந்து - " உகாரமும் "

3) ஈசனின் தெற்கு நோக்கிய முகம் ஆன
" அகோரம் " முகத்தில் இருந்து - " மகாரமும் "

4) ஈசனின் கிழக்கு நோக்கிய முகமான
" தத்புருஷம் " முகத்தில் இருந்து - " பிந்து " எனப்படும் நாதத்தின் தொடக்கமும்

5) ஈசனின் மேல் நோக்கிய முகமான
" ஈசானம் " என்னும் முகத்தில் இருந்து
" நாதம் " ஆன " சப்த ரூபமும் " தோன்றின.

இவ்வாறு " ஓம் " என்னும் பிரணவத்தோடு
" சிவயநம " சேர்ந்து முழுமையான
" மந்திர ஸ்வரூபம் " ஆனது

" அவ்வும் உவ்வும் மவ்வுமாய்
அமர்ந்ததே சிவாயமே "

" சிவாயநம என்று சிந்திந்திருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே "

" திருவாய் பொலிய சிவயநம என்று
நீறணிந்தேன்"
" தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே "

#காரண_பஞ்சாட்சரம் :

" சிவ சிவ " என்பது " காரண பஞ்சாட்சரம் " ஆகும்

சிவ சிவ என்னும் மந்திரமானது நமது காரணத்தில் உள்ள பிற கழிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியரின் ஆழ்ந்த கருத்தாகும்.

இம்மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக் கூடியது

ஆகையால் இம்மந்திரத்தின் மூலமாக லௌகீக லாபங்களை எதிர்பார்க்க முடியாது
அதாவது " உலகியல் குறிக்கோள்களை " பூர்த்தி செய்த ஒருவருக்கு ( துறவு நெறி பூண்டவர்களுக்கும் மிக வயதானவர்களுக்கும் )மட்டுமே இம்மந்திரம்
பொருத்தமானது ஆகும்.

" சிவசிவ என்றிட தீவினை மாலும் "
" சிவசிவ என்கிலார் தீவினையாளர் "
" சிவசிவ என்றிட தேவருமாவர் "
" சிவ சிவ எண்ண சிவகதி தானே "

சி  - சிவானந்தம் - பொருள்

வ - சிவசன்னதி - அருள்

ய - உயிர்கள் - தெருள்

ந - திரோதானம் - மருள்

ம - ஆணவம் - இருள்

தன்னை அறிந்தவன் தவத்தை அடைகிறான்
தவத்தை அடைந்தவன் சிவத்தை அடைகிறான்

" நித்தம் தவம் இருந்தால் "
" சித்தம் சிவம் ஆகும் "

லக்ஷ்மண விரதம்

லக்ஷ்மண விரதம்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற *அகஸ்திய மாமுனிவர்* அயோத்திக்கு வருகை புரிந்தார் அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும் ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும் அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து *ராவண கும்பகர்ண* வதத்தை விட *லக்ஷ்மணன்* ராவணன் மகன் *மேகநாதனை வதைத்ததே* மாபெரும் வீர செயல் என்றார்.அகஸ்தியர் அதை கேட்டு அனைவரும் ஆச்சிரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள் மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க *அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ* ஆனால் ஏதும் அறியாதவன் போல் *லக்ஷ்மணின் பெருமையை* என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய் சரி நானே கூறுகிறேன் சபையோர்களே ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு *மூன்று அறிய வரங்கள்* தரவேண்டும் என நிபந்தனை வைத்தான் அவை *1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும்*
*2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்* *3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும்* என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான் அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர் இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்( *பெண்ணையும்*) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன் ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார் அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் *ரிஷிமுக பர்வதத்தில்* மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன் அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் *நித்ராதேவி* யிடம் ஒரு வரம் கேட்டேன் அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன் அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது மூன்றாவது *நம் குருநாதராகிய விஸ்வாமித்திரர்* நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் *பலா அதிபலா* என்னும் மிகவும் சக்திவாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார் அந்த *பலா அதிபலா* மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க *ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்* லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார் *ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும்* என்பது எம் கருத்து..!
 *ஸ்ரீ ராமஜெயம்* சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
 *ஸ்ரீ லக்ஷ்மண ஜெயம்* சொல்வது புண்ணியமே..!

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.

80 ஆன்மீக குறிப்புகள்

80 ஆன்மீக குறிப்புகள் 71-80

80 ஆன்மீக குறிப்புகள்




71. பூஜை அறையில் அதிக படங்களையும்,
தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம்
என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக்
கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும்
இடையில் போதிய இடம் விட்டு வைக்க
வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில்
சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு
நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர்
பாத்திரங்களில் நேரடியாக வைத்து
தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை
வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட
விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும்
விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு
செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது
நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு
அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும்
கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு
வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது
லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு
வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு
கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே
உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம்
சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது
வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி
வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும்
உதவும். வெளியே செல்லும்போது சட்டைப்
பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து
சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி,
தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer