Thursday, 28 February 2019

80 ஆன்மீக குறிப்புகள் 51-60

80 ஆன்மீக குறிப்புகள்




51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில்
வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில்
வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம்
செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல
மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள்
போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும்.
நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில்
ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில்
போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட
வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்
வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி
கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை
ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி
இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது
என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல
வழியனுப்பிய பிறகு பூஜை,
முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம்,
திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை
வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும்.
வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம்
கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம்
பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள்
ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம்
இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப்
போட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.
ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும்
வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால்
சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு
குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி,
குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து
விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு
நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு.
காலையில் எழுந்ததும் துளசியைத்
தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம்
கொடுக்கும்போது சிறிது துளசியுடன்
தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு
தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப்
படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க
வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்
கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை
எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு
வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில்
எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த
அளவு பாக்கு வைக்க வேண்டும்.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer