Saturday, 28 March 2015

பஜனை பாடல்கள்-கணேசா சரணம்

பஜனை பாடல்கள்-கணேசா சரணம்

கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)

 கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

 சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

 சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

 முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

 அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

 கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

 மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

 பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer