Saturday, 28 March 2015

பஜனை பாடல்கள்-ஐயப்பசாமி - ஆறுமுகசாமி:

பஜனை பாடல்கள்-ஐயப்பசாமி - ஆறுமுகசாமி:

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer