சிவ ஆகமகுறிப்புகள்!.... ப்ரதக்ஷிணம்
ப்ரதக்ஷிணம்
14.1 எவன்
பூஜையைச் செய்துவிட்டு, நிறைவாக ப்ரதக்ஷிணம் செய்யவில்லையோ
அவனுக்கு அந்தப் பூஜையயின் பலன்
கிடைக்காது; அவன் விளம்பரத்திற்காகவே பூஜை
செய்தவனாகிறான். எனவே பூஜை நிறைவாக
பக்தியுடன் அவசியம் ப்ரதக்ஷிணம் செய்ய
வேண்டும்.
14.2 விநாயகருக்கு
- ஒரு ப்ரதக்ஷிணம், சூர்யனுக்கு - இரண்டு ப்ரதக்ஷிணங்கள், சிவனுக்கு
- மூன்று ப்ரதக்ஷிணங்கள், அம்பாளுக்கும், விஷ்ணுவுக்கும் - நான்கு ப்ரதக்ஷிணங்கள், அரசமரத்திற்கு
- ஏழு ப்ரதக்ஷிணங்கள். உச்சி காலத்துக்குப் பிறகு
அரசமரத்தை ப்ரதக்ஷிணம் செய்வது தவறு.
No comments:
Post a Comment