ஸ்ரீ வைஷ்ணவி அம்மன் பக்திப் பாட்டு-துதி.
வருவாய் வருவாய் வைஷ்ணவியே
வந்தருள் புரிவாய் வைஷ்ணவியே
அனுதினம் வருவாய் வைஷ்ணவியே
அனுக்ரஹம் செய்வாய் வைஷ்ணவியே
சரணமடைந்தோம் வைஷ்ணவியே
சௌபாக்கியம் அருள்வாய் வைஷ்ணவியே
வரமளித் தருள்வாய் வைஷ்ணவியே
வணக்கம் தாயே வந்தருள்வாயே
பாடிப்பணிந்தோம் வைஷ்ணவியே
பக்ஷமுடன் வா வைஷ்ணவியே
கூடித் துதிக்கின்றோம் வைஷ்ணவியே
குறைகளைத் தீர்ப்பாய் வைஷ்ணவியே
திருமுல்லை வாயிலைத் தேடிவந்தோம் உன்
திருச்சன்னதிமுன் கூடி நின்றோம் உன்
திருப்புகழ் தன்னைப் பாடுகின்றோம் உன்
திருவடி நாடிப் பணிகின்றோம்.
Nice song ...
ReplyDelete