Friday, 5 December 2014

எங்கள் ஐயப்பன் அவன் எங்கள் ஐயப்பன்



 

சபரிமலை 

ஸ்ரீ அய்யப்பன் பக்திப் பாட்டு.

 

எங்கள் ஐயப்பன் அவன் எங்கள் ஐயப்பன் 

எங்கும் நிறைந்தவனாம் எங்கள் ஐயப்பன். ().

 

எரிமேலி நாதனவன் எங்கள் ஐயப்பன் 

எங்கள்குல நாயகனாம் எங்கள் ஐயப்பன் . ().

 

ஏட்டுமானூரப்பன் மகன் எங்கள் ஐயப்பன் 

எங்கள்குல தேவனவன் எங்கள் ஐயப்பன். ().

 

ஏழைப் பங்காளனவன் எங்கள் ஐயப்பன் 

ஏகாந்த மூர்த்தியவன் எங்கள் ஐயப்பன். ().

 

விண்ணவர் காவலனாம் எங்கள் ஐயப்பன் 

வன்புலி வாகனனாம் எங்கள் ஐயப்பன். ().

 

வேலாயுதன் தம்பியவன் எங்கள் ஐயப்பன் 

வேதனைகள் தீர்த்திடுவான் எங்கள் ஐயப்பன். ().

 

பதினெட்டாம் படியினிலும் எங்கள் ஐயப்பன் 

பார்புகழ் வேந்தனவன் எங்கள் ஐயப்பன். ().

 

ஆலகாலன் மைந்தனவன் எங்கள் ஐயப்பன் 

ஆபத்தில் காத்திடுவான் எங்கள் ஐயப்பன். ().

 

சரணகோஷப் பிரியனவன் எங்கள் ஐயப்பன் 

சாந்திதரும் தெய்வமவன் எங்கள் ஐயப்பன். ().

 

பம்பையிலே பிறந்தவனாம் எங்கள் ஐயப்பன் 

பந்தளத்து பாலனவன் எங்கள் ஐயப்பன். ().

 

சபரிமலை வாசனவன் எங்கள் ஐயப்பன் 

சஞ்சலங்கள் தீர்த்திடுவான் எங்கள் ஐயப்பன். ().

 

 

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer