Wednesday 3 April 2019

12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்... ஏன் எதற்காக?

12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்... ஏன் எதற்காக?
கோவில், கோபுரம், கலசம்!


🙏 நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஊரில் உள்ள கோவில் கோபுரங்களை விட உயரமாக வேறு எந்த கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது.

என்ன காரணம்?

🙏 கோவில் கோபுரங்கள் உயரமாகவும், அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் கலசங்களையும் பார்த்திருக்கிறோம். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மையை அறிவியலின் துணையுடன் என்ன என்று இப்போதுதான் தெரிகிறது.

🙏 கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டிருக்கும் கலசங்கள் தங்கம், வெள்ளி செம்பு(அ)ஐம்பொன்னால் செய்யப்பட்டு இருக்கும். மேலும், கலசங்களில் தானியங்களும் கொட்டப்படும்.

🙏 இந்த கலசங்களிலும், அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்காச்சோளம், எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால், வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

🙏 இன்றைக்கு கடைபிடிக்கப்பட்டு வரும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுவது வெறும் சம்பிரதாயமாக மட்டுமே நடக்கிறது.

🙏 காரணம் என்னவென்றால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறதாம். அதன்பின் அது செயல் இழந்துவிடுகிறதாம்.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்?

🙏 இதை அறிந்து கொண்ட விஷயம் ஆச்சர்யம்தான். இன்றைக்கு திடீரென்று 3 அல்லது 4 நாட்கள் மழைப் பெய்வதைப் போன்று அந்த காலகட்டத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் மழை பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

🙏 ஒரு இடத்தில் எது மிக உயரமாக உள்ள இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்" ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள் ஆகும். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

🙏 சில கோவில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் பல மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுகின்றனர். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன என்பது நாம் அறியப்படாத உண்மைகள்.

Monday 1 April 2019

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​

கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் தெரியுமா?​


கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது. கவசம் என்றால் நம்மைக்காப்பாற்றக்கூடிய ஒன்று என்று பொருள். போரில் யுத்த வீரர்கள் தங்கள் உடலைக்காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுகிறது.

இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது.

சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளை குறிக்கும். செவ்வாய் ரோகக்காரகன். இந்த எல்லா தோஷத்தைப்போக்கும் பெருமான் திருமுருகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.

நாம் அந்தத் திரு வடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். இப்போது சஷ்டி கவசத்தைப்பார்ப்போம். கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச்சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக்காக்க வேண்டும்.

அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை
ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.

அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை உடம்பில் தான் எத்தனை பாகங்கள் காக்க என்று வேலை அழைக்கிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்கு புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனியவேல் மார்பிற்கு ரத்தின வடிவேல்,

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கனக வேல் காக்க. அப்பப்பா எத்தனை விதமான வேல் நம்மை காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும் என்கிறார். பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.

நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள்.

சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள். முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படியுங்கள். வேலனைப் போற்றுங்கள் உங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும்.
 சர்வமும் சிவமயம்
ஓம் வெற்றிவேல் முருகா....

கந்தர் ஷஷ்டி கவசம் பாடலுக்கு இங்கு கிளிக் செய்யவும் 


கந்தர் ஷஷ்டி கவசம்



கந்தர் ஷஷ்டி கவசம் ஒன்று

கந்தர் ஷஷ்டி கவசம் ஒன்று -- திருப்பரம்குன்றம் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.......

கந்தர் ஷஷ்டி கவசம் இரண்டு

கந்தர் ஷஷ்டி கவசம் இரண்டு திருச்செந்தூர் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.......

கந்தர்ஷஷ்டி கவசம் மூன்று

கந்தர்ஷஷ்டி கவசம் மூன்று -- பழனி மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.......

கந்தர் ஷஷ்டி கவசம் நான்கு

கந்தர் ஷஷ்டி கவசம் நான்கு -- ஸ்வாமிமலை மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்............

கந்தர் ஷஷ்டி கவசம் ஐந்து

கந்தர் ஷஷ்டி கவசம் ஐந்து -- திருத்தணி மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்...........

கந்தர் ஷஷ்டி கவசம் ஆறு

கந்தர் ஷஷ்டி கவசம் ஆறு -- பழமுதிர்சோலை மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்..........



  கவசம் ஒன்று திருப்பரம்குன்றம்
கவசம் இரண்டு திருச்செந்தூர்
கவசம் மூன்று பழனி
கவசம் நான்கு ஸ்வாமிமலை
கவசம் ஐந்து திருத்தணி
கவசம் ஆறு பழமுதிர்சோலை
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer