சபரிமலை
ஐயன்,
ஸ்ரீ அய்யப்பன் பக்திப் பாடல்.
மந்த்ர ரூபம் மந்தகாசம்
மன்மதனை வென்ற சிவ வைராக்யம். (ம).
மணிகண்டனே உந்தன் மலர் பதம்
துணை கொண்டவர்க்கு வழி புலப்படும். (ம).
தென்றலோடொரு செந்தழல்
இணைந்தன்று செய்தது ஒரு நர்த்தனம்
நர்த்தனம் சிவ நர்த்தனம்
தென்றலோடொரு செந்தழல்
இணைந்தன்று செய்தது ஒரு நர்த்தனம்
நர்த்தனம் சிவ நர்த்தனம்
அந்த சங்கமத்தில் வந்த சந்திரன்
ஒளி பொங்கித் ததும்பும் எழில் பாலகன். (ம).
தன்னை இழக்கும் சரணாகதி
அதில் வந்து சிரிக்கும் முகம் முழுமதி
தன்னை இழக்கும் சரணாகதி
அதில் வந்து சிரிக்கும் முகம் முழுமதி
தேகமே ஒரு யோக சாதனம்
உணர வைக்கும் உன் பெருவழி
தத்வமசி என்ற தத்துவம்
உன் சன்னதிக்குள் வரும் அனுபவம். (ம).
No comments:
Post a Comment