அருள்மிகு
ஐயப்பன் பக்தி மாலை.- துதி.
விருப்பமும் வெறுப்புமின்றி
வினைப்பயன் எல்லா முந்தன்
திருப்பதம் தன்னில் வைத்து
திருப்தியும் திறனுமுற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம்
உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத்
திருவருள் செய்குவாயே.
வையமும் வானும் வாழ
மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத்
திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம்
நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான
அவர் பதம் வணக்கம் செய்வோம்.
மெய்யெல்லாம் திரு நீறாக
வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி
புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள
விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார்
அவர் பாதம் வணக்கம் செய்வோம்.
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
No comments:
Post a Comment