Thursday 30 January 2014

நவக்கிரக சுலோகங்கள்

நவக்கிரக சுலோகங்கள்


சூரியன்..

ஜபா குஸும ஸங்காசம்
காச்ய பேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மிதிவாகரம்||

சந்திரன்..

ததிசங்க துஷாராபம்
க்ஷிரோ தார்ணவ ஸம்பவம்|
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்||

செவ்வாய்..

தரணீ கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத்காந்தி ஸமப்ரபம்|
குமாரம் சக்திஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்||

புதன்..

ப்ரியங்கு கலிகாச்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோ
பேதம் தம்புதம் ப்ரணமாம்யஹம்||

குரு..

தேவா நாஞ்ச ரிஷீணாஞ்ச
குரூம் காஞ்சன ஸந்நிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

சுக்ரன்..
ஹிமகுந்த ம்ரூணா லாபம்
தைத்யா நாம் பரமம்குரும்|
ஸர்வ சாருஞூதரப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யஹம்||

சனி..

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்||

ராகு..
அர்த்தகாயம் மஹாவீர்யம்
சந்திராதித்ய விமர்தனம்|
ஸிம்ஹிகா கர்பஸம்பூதம்
தம்ராஹும்ப்ரணமாம்யஹம்||

கேது..
பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது


 கட்டமாய் நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது. அதற்கென பிரத்யேகமான தினங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். அதன் விவரங்கள் ...


நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சம்.  அவையாவன...



சூரியன் - மாணிக்கம்


சந்திரன் - முத்து


செவ்வாய் - பவளம்


புதன் - மரகதம்


குரு - புஷ்பராகம்


சுக்கிரன் - வைரம்


சனி - நீலம்


ராகு - கோமேதகம்


கேது - வைடூர்யம்


நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடக் கூடாது. அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர். அதன்படி....

ஞாயிற்றுக் கிழமைகளில் மாணிக்கமும், கோமேதகமும், திங்கட் கிழமைகளில் முத்தும், வைடூரியமும், செவ்வாய்க் கிழமைகளில் பவளமும், புதன்கிழமைகளில் மரகதமும், வியாழக் கிழமைகளில் புஷ்பராகமும், வெள்ளிக் கிழமைகளில் வைரமும், சனிக் கிழமைகளில் நீலம் வாங்குவதும், அணிவதும் சிறப்பு.

தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் ”தோஷ நிவர்த்தி” என்பர்.

இன்றைக்கு கற்கள் விற்கும் வியாபரிகள் பலருக்கும் இதன் அவசியம் புரிவதில்லை.லாபத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். இதன் பொருட்டே அணிந்தவர் பலரும் கற்கள் தங்களுக்கு பலன் தருவதில்லை என புலம்பிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.

நவமணிகளின் ”தோஷ நிவர்த்தி” செய்யும் விவரங்களை பகிர வேண்டும் என்றே இந்த தொடரினை ஆரம்பித்தேன், ஆனால் இந்த விவரங்களை குருமுகமாய் பெறுவதே சரியான முறை என்பதால் அதனை இங்கே விளக்கிடாமல் போவதற்காக என்னை பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.

தேர்ந்த சோதிட வல்லுனர்களினால் பரிந்துரைக்கப் பட்ட தரமான கற்களை... சரியான நாட்களில் வாங்கி, தோஷ நிவர்த்தி செய்து அணிவதன் மூலம் நலமும், வளமும் பெற்றிட வாழ்த்துக்கள்.

தூய கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

தூய கற்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

பலரும் கூறுவதைப் போல ஏன் இந்த கற்கள் பூரண பலன் தருவதில்லை?

இந்த கற்கள் பலன் தரவைக்க சித்தர்கள் அருளிய நடைமுறைகள் என்ன?

விவரங்கள் ...

நவமணிகள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான வண்ணக் கதிர்களை வெளியிடும் தன்மை உடையவை. இந்த கதிர்கள் மனிதனின் உடலில் படும் போது உடல் நலம் மற்றும் மன நலத்தினை சீர்படுத்தி மேம்படுத்துவதாகவும் கருத்துக்கள் உள்ளது.

மாணிக்கம் சிவந்த நிறக் கதிர்களையும், முத்து ஆரஞ்சு நிற கதிர்களையும்,புஷ்பராகம் நீல நிறக் கதிர்களையும், கோமேதகம் ஊதா நிறக் கதிர்களையும், மரகதம் பச்சை நிறக் கதிர்களையும், வைரம் வெளிர் நீல நிறக் கதிர்களையும்,வைடூரியம் வெளிர் சிவப்பு நிறக் கதிர்களையும், நீலம் அடர் ஊதா நிறக் கதிர்களையும், பவளம் மஞ்சள் நிற கதிர்களையும் வெளியிடுமாம்.

இத்தனை தன்மைகளையும், சிறப்புகளையும் உடைய பழுதில்லாத (வெடிப்புக்கள், புள்ளிகள்) கற்களால் மட்டுமே குறிப்பிட்ட ஜாதகருக்கான நற்பலனைத் தரமுடியும். சுத்தமான கற்களை கண்டறிவது என்பது ஆகச் சிரமமான பணி. தேர்ந்த வல்லுனர்களே தவறிழைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது “அகத்தியர் வாகடம்” என்ற நூலில் நவமணிகளின் தரம் அறிவது குறித்து விவரித்திருக்கிறார்.

முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.

மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.

பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.

வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.

பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.

கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.

புஷ்ப ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.

வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.

நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

அகத்தியரின் பாடல்களில் இருந்து தொகுக்கப் பட்டுள்ள இந்த விவரங்கள் மிக அரிதானவை, இனி வரும் நாட்களில் நீங்களும் இதை பயன்படுத்தி கற்களின் தரம் அறியலாம்.

நவமணிகள்.....

நவமணிகள்

 

நவரத்தினங்களையே சித்தர்கள் நவமணி என குறிப்பிடுகின்றனர். நவ என்பது புதுமை என்றும், ரத்னம் என்றால் ஒளி என்றும் பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்,நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவமணிகள். இவை அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்கள்.

இந்த நவ மணிகளை சிவனின் ஒன்பது வகையான உருவங்கள் என்றும் குறிப்பிடுவர். அவையாவன, பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம், விந்து என்பனவாகும்.

பழந்தமிழர்கள் இந்த நவரத்னங்களை தலை மணிகள், இடை மணிகள், கடை மணிகள் என்று மூன்றாக வகைப் படுத்தியிருந்தனர். அவை,

தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.

என்பனவாகும்.

சித்தர்கள் நவ ரத்னங்களை மகாரத்தினங்கள், உபரத்தினங்கள் என்று இருவகைப் படுத்தியுள்ளனர். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம் என்பவற்றை மகாரத்தினங்கள் எனவும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் என்பவற்றை உபரத்தினங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.

9ன் சிறப்பு

 9ன் சிறப்பு
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது.

எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன.

 புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள்.

 பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர்.

நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.

நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி

நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி

நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்


நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.

நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது

நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்

நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்

நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்

நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்

நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்

அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்

நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)

அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.

நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட

அமைப்புக்கள்:
சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.

நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்

நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி

நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்

18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான். 9 என்ற எண்ணை கேலிக்கையாக எண்ணாமல் புராணங்களிலும், நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை போற்றுவோம்.

நவராத்திரி வழிபாட்டு முறை

நவராத்திரி வழிபாட்டு முறை

முதலாம் நாள்:

சக்தியை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்ட மாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்தவள் என்பதால் சாமுண்டா எனவும் அழைப்பர். கோபம் கொண்டவளாக காட்சியளிக்கும் இந்த அன்னையின் கோபம் மற்றவர்களை திருத்தி நல்வழிப்படுத்தவே ஆகும்.

நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளில் அன்னையை வராகி தேவியாக வழிபட வேண்டும். வராகி (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம், எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

நைவேத்தியம்: தயிர் சாதம்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாளில் சக்தித் தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாகேந்தரி, சாம்ராஜதாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளே ஆகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளது அருட்பார்வை கட்டாயம் வேண்டும். மற்றும் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள்புரிபவளும் இந்த அன்னையே ஆவாள்.

நைவேத்தியம்: வெண் பொங்கல்.

நான்காம் நாள்

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை தன் கையில் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன் ஆகும்.

நைவேத்தியம்: எலுமிச்சை சாதம்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக கருதி வழிபாடு செய்ய வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளி இருப்பவள். அளக்க முடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற இந்த அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

நைவேத்தியம்: புளியோதரை.

ஆறாம் நாள்

இந்த நாளில் அன்னையை கவுமாரி தேவியாக நினைத்து வழிபடவேண்டும். மயில் வாகனமும், சேவல் கொடியும் கையில் ஏந்தியவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி விடுபவள். வீரத்தை தருபவள்.

நைவேத்தியம்: தேங்காய் சாதம்.

ஏழாம் நாள்

அன்னையை ஏழாம் நாள் அன்று மகா லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு, வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தருபவள். இந்த அன்னையை வேண்டினால் அனைத்து செல்வங்களும் வந்து சேரும்.

நைவேத்தியம்: கல்கண்டு சாதம்.

எட்டாம் நாள்

இன்று அன்னையை நரசிம்மகி ஆக வழிபாடு செய்ய வேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடு பட அன்னையின் அருள் வேண்டும்.

நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்.

ஒன்பதாம் நாள்

இன்று அன்னையை பிராக்மி ஆக வழிபட வேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞான சொரூபமானவள். கல்விச் செல்வம் பெற இந்த அன்னையின் அருள் மிகவும் அவசியமாகும்.

நைவேத்தியம்: அக்கார வடிசல்.

அம்மி மிதித்து,அருந்ததி பார்ப்பது எதற்கு?


அம்மி மிதித்து,அருந்ததி பார்ப்பது எதற்கு?




 அம்மி என்பது கருங் கல்லினால் ஆன சமையல்செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன் படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும்,ஒரேஇடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்தவீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள்வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பதாகும்.

அருந்ததி என்பது 7 ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவியாவார். 7 ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசுகிறார்கள்.இதைத்தான் நாம் துருவநட்சத்திரம் என்கிறோம். 7 நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவுநேரத்தில் வடக்குவானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்தரிஷி மண்டலத்தை காணலாம். 6வது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்துகவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் காணலாம். மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களிடம் சபல பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்றுசேர்ந்து,மற்றவர்களின் மீது எந்தசபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.

அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரேநட்சத்திரமாக தெரிகிறது. அதேபோல் மணமக்கள இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்கசொல்கிறார்கள்.

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன்

தலையின் இடது பக்கம் பல்லி விழுந்தால் துன்பம்
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால் கலகம்

நெற்றியின் இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தி
நெற்றியின் வலது பக்கம் பல்லிவிழுந்தால் லக்ஷ்மிகரம்

வயிறின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி
வயிறின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியம்

முதுகு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் கவலை
முதுகு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்

கண் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் பயம்
கண்; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

தோல் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
தோல் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி

பிருஷ்டம் ; இடது பக்கம் பல்லிவிழுந்தால் செல்வம்
பிருஷ்டம் ; வலது பக்கம் பல்லிவிழுந்தால் சுகம்

கபாலம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வரவு
கபாலம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வரவு

கணுக்கால் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் பயணம்
கணுக்கால் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

மூக்கு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கவலை
மூக்கு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் வியாதி

மணிக்கட்டு ; இடது பக்கம் பல்லி-விழுந்தால் கீர்த்தி
மணிக்கட்டு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடை

தொடை ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சஞ்சலம்

நகம் ; இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம்
நகம் ; வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு

காது ; இடது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்
காது ; வலது பக்கம் பல்லி விழுந்தால் ஆயுள்

மார்பு ; இடது பக்கம் பல்லி விழுந்தால் சுகம்
மார்பு ; வலது பக்கம் பல்லி விழுந்தால் லாபம்

கழுத்து ; இடது பக்கம் பல்லி விழுந்தால் வெற்றி
கழுத்து ; வலது பக்கம் பல்லி விழுந்தால் பகை

Monday 27 January 2014

கந்தசஷ்டி கவசம் உருவான கதை.....

கந்தசஷ்டி கவசம் உருவான கதை..


கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம். இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார்.

எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார். நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.

அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, 'சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம். இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.

முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன்

முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா? இத்த்னை சிறப்பு வாய்ந்தது

இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை

உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது

கந்த சஷ்டி கவசம்...(பால தேவராய சுவாமிகள் அருளியது)


கந்த சஷ்டி கவசம்...

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் முருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக

ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக

ரவண பவச ர ர ர ர ர ர ர
ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விபச சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென

வசுர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரைங் கிலியும்

கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்பரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றூந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

இறுதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு ட ங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோ தனென்று

உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க

வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிடண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனைவேல் காக்க

எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வதனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய

கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்

புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
குலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு

குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா

மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே

கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா


பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலால் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக

அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமுந்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதும் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய


ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளும் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேன பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Tuesday 21 January 2014

நவக்கிரக மந்திரங்கள் - (Mantras for the nine planets)


நவக்கிரக மந்திரங்கள் - (Mantras for the nine planets)






ஒன்பது கிரகங்கங்களின் துன்பங்களைப் போக்க பல்வேறு சாஸ்திரங்களில் பல மந்திரத் தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவற்றில் நம் அனுபவரீதியாக மிகவும் பயனுள்ளதைக் கொடுத்திருக்கிறோம்.


Monday 13 January 2014

வளம் சேர்க்கும் வீட்டு சாஸ்திரம்(வாஸ்து)


வளம் சேர்க்கும் வீட்டு சாஸ்திரம்

வாஸ்து என்பது வாழும் இடம் என்பது பொருள்படும். ஜோதிட சாஸ்திரத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான இந்த வாஸ்து சாஸ்திரம். இப்பிரபஞ்சத்தில் நிறைந்துள்ள பஞ்ச பத தத்துவங்களின் தன்மைகளுக்கு ஏற்ப நாம் வசிக்கும் வீட்டை அமைத்து வாழ வழி சொல்லும் ஒரு அளவிடுகளின் கணித அடிப்படையான அரும் பெரும் கட்டிட கலையாகும். இதை மிக சரியாக கையாள வேண்டும். மக்களும் வாஸ்து நிபுணர்களை சரியானபடி தேர்ந்தெடுக்க வேண்டும்

ஒவ்வொரு மனிதருக்கும். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இம் மூன்று சரியாக கிடைத்தால் தன்னை வளப்படுத்தவும், நாட்டையும். வளப்படுத்த முடியும், வீடு வளம்பெற்றால் நாடு நலம் பெறும். நாம் வசிக்கும் வீட்டை முன்னோர்கள் சொல்லியப்படி அமைத்து துன்பமின்றி வாழ்வில் சாதனைகள் பல செய்வோம் வாருங்கள்.
1. ஒரு வீட்டின் அமைப்பு சதுரம், செவ்வகம் போன்ற அமைப்புடையதாக இருப்பது அவசியம்
2. உடுக்கை வடிவம். முக்கோண வடிவம். வட்ட வடிவம், மற்றும் ஒழுங்கற்ற வடிவமுள்ள மனைகளை வாங்க கூடாது
3. ஒவ்வொரு அறைகளும் வாஸ்து சாஸ்திர அளவின் படி அமைந்திருக்க வேண்டும்
4. சூரிய வெளிச்சம் அதிக நேரம் வீட்டிற்குள் பட வேண்டும்
5. வீட்டிற்கு வெளியே அதிகமான வெட்ட வெளி இருக்க கூடாது
6. ஆற்று கரையோரங்களிலும், நீர் நிலைகள் நிறைந்த பகுதிகளிலும் வீடுகட்டி வசிக்க கூடாது.
7. வீடு கட்ட ஆரம்பிக்க மிக சிறப்பு பெற்ற மாதங்கள் வைகாசி,ஆவணி, மாசி ஆகும்.
8. வீடுகட்ட ஆரம்பிக்க 2வது வரிசையில் சிறப்பு பெற்ற மாதங்கள் சித்திரை,ஆடி,ஐப்பசி,கார்த்திகை, தை
9. வீடு கட்ட ஆரம்பிக்கும் அன்று கீழ்காணும் நட்சத்திரங்கள் வரும் நாள் சிறப்பாகும். ரோகிணி,
10 வீடு கட்ட உகந்த கிழமைகள் திங்கள், புதன்,வியாழன்,வெள்ளி,சனி நலம்
11. வீட்டிற்குள் அமைக்கும் பொருட்கள் கூட வாஸ்து பலத்தை அதிகரிக்க செய்யும்
12. வீட்டில் அழுக்கு துணிகள் உடைந்த பொருட்கள் தேவையற்ற பழைய பொருட்கள் கண்ணீன்படாதவாறு வைக்கவும், தேவையற்றை போக்கிவிடலாம்.
திருதியை திதி - அனுசம் நட்சத்திரம்
சதூர்த்தியை திதி - உத்திரம் நட்சத்திரம்
பஞ்சமி திதி - மகம் நட்சத்திரம்
அஷ்டமி திதி - ரோகிணி நட்சத்திரம்
நவமி திதி - கார்த்திகை நட்சத்திரம்
மேலும் உங்கள் ராசி எதுவென்று அறிந்து அந்த காலங்களிலும் வீடு கட்ட ஆரம்பிக்க கூடாது.
அளவுகள்
கீழ்க்காணும் நீள,அகல அளவுகள் அடி கணக்குகள் சிறப்புக்குரியவை
6,8,10,11,16,17,20,21,22,26,27,28,29,30,31,32,33,35,36,37,39,41,42,45,52, 56,57,60,63,64,66,68,69,70,71,72,74,79,80,81,85,89,90,91,92,95,97,98,99,100
வீடு ஆரம்பிக்க தவிர்க்க வேண்டிய கிழமையுடன் கூடிய நட்சத்திரம்
ஞாயிற்றுக்கிழமையில் - பரணி நட்சத்திரம் வந்தால்
திங்கள்கிழமையில் - சித்திரை நட்சத்திரம் வந்தால்
செவ்வாய்க்கிழமையில் - உத்திராடம் நட்சத்திரம் வந்தால்
புதன்கிழமையில் - அவிட்டம் நட்சத்திரம் வந்தால்
வியாழன்கிழமையில் - கேட்டை நட்சத்திரம் வந்தால்
வெள்ளிகிழமையில் - பூராடம் நட்சத்திரம் வந்தால்
சனிக்கிழமையில் - ரேவதி நட்சத்திரம் வந்தால்

Saturday 11 January 2014

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்


27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்.. (அதிஸ்டம் தரும் தெய்வங்கள்)


அஸ்வினி
ஸ்ரீ சரஸ்வதி தேவி



பரணி
ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)



கார்த்திகை
ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)



ரோகிணி
ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)



மிருகசீரிடம்
ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)



திருவாதிரை
ஸ்ரீ சிவபெருமான்



புனர்பூசம்
ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)



பூசம்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)



ஆயில்யம்
ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)



மகம்
ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)



பூரம்
ஸ்ரீ ஆண்டாள் தேவி



உத்திரம்
ஸ்ரீ மகாலக்மி தேவி



அஸ்தம்
ஸ்ரீ காயத்திரி தேவி



சித்திரை
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்



சுவாதி
ஸ்ரீ நரசிம்மமூர்த்தி



விசாகம்
ஸ்ரீ முருகப் பெருமான்.



அனுசம்
ஸ்ரீ லக்மி நாரயணர்.



கேட்டை
ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)



மூலம்
ஸ்ரீ ஆஞ்சனேயர்



பூராடம்
ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)



உத்திராடம்
ஸ்ரீ வினாயகப் பெருமான்.



திருவோணம்
ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)



அவிட்டம்
ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)



சதயம்
ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)



பூரட்டாதி
ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)



உத்திரட்டாதி
ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)



ரேவதி
ஸ்ரீ அரங்கநாதன்.
Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer