அம்மி மிதித்து,அருந்ததி பார்ப்பது எதற்கு?
அம்மி என்பது கருங் கல்லினால் ஆன சமையல்செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன் படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும்,ஒரேஇடத்தில் அசையாமல் இருக்கும்.திருமண பெண் புகுந்தவீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள்வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பதாகும்.
அருந்ததி என்பது 7 ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவியாவார். 7 ரிஷிகளும்,வானில் நட்சத்திரங்களாக ஒளிவீசுகிறார்கள்.இதைத்தான் நாம் துருவநட்சத்திரம் என்கிறோம். 7 நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.
இரவுநேரத்தில் வடக்குவானில் நாம் பார்த்தோம் என்றால்,சப்தரிஷி மண்டலத்தை காணலாம். 6வது நட்சத்திரமாக ஒளிவீசும் வசிஷ்டர் நட்சத்திரத்தை கூர்ந்துகவனித்தால் அருகிலேயே அருந்ததி நட்சத்திரத்தையும் காணலாம். மற்ற ரிஷிகள் எல்லாம் ரம்பா, ஊர்வசி, மேனகை இவர்களிடம் சபல பட்டவர்கள். ஆனால் வசிஷ்டரும், மனைவியும் ஒன்றுசேர்ந்து,மற்றவர்களின் மீது எந்தசபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள்.
அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரேநட்சத்திரமாக தெரிகிறது. அதேபோல் மணமக்கள இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்க வேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும், கட்டுப்பாட்டுடன் வாழவேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்கசொல்கிறார்கள்.
No comments:
Post a Comment