நவமணிகள்
நவரத்தினங்களையே
சித்தர்கள் நவமணி என குறிப்பிடுகின்றனர். நவ என்பது புதுமை என்றும்,
ரத்னம் என்றால் ஒளி என்றும் பொருள்படும். வைரம், முத்து, மரகதம்,
மாணிக்கம்,நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே
நவமணிகள். இவை அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்கள்.
இந்த நவ மணிகளை
சிவனின் ஒன்பது வகையான உருவங்கள் என்றும் குறிப்பிடுவர். அவையாவன,
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவம், சிவம், சக்தி, நாதம்,
விந்து என்பனவாகும்.
பழந்தமிழர்கள் இந்த நவரத்னங்களை தலை மணிகள், இடை மணிகள், கடை மணிகள் என்று மூன்றாக வகைப் படுத்தியிருந்தனர். அவை,
தலை மணிகள் :- வைரம், முத்து, மரகதம், மாணிக்கம்.
இடை மணிகள் :- நீலம், புஷ்பராகம், வைடூரியம்.
கடை மணிகள் :- கோமேதகம், பவளம்.
என்பனவாகும்.
சித்தர்கள் நவ ரத்னங்களை மகாரத்தினங்கள், உபரத்தினங்கள் என்று
இருவகைப் படுத்தியுள்ளனர். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம்
என்பவற்றை மகாரத்தினங்கள் எனவும், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம்
என்பவற்றை உபரத்தினங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment