கட்டமாய் நவமணிகளை எல்லா நாட்களிலும் வாங்கிடக் கூடாது. அதற்கென
பிரத்யேகமான தினங்களை சித்தர்கள் அருளியுள்ளனர். அதன் விவரங்கள் ...
நவமணிகள் ஒவ்வொன்றும் ஒரு கிரகத்தின் அம்சம். அவையாவன...
சூரியன் - மாணிக்கம்
சந்திரன் - முத்து
செவ்வாய் - பவளம்
புதன் - மரகதம்
குரு - புஷ்பராகம்
சுக்கிரன் - வைரம்
சனி - நீலம்
ராகு - கோமேதகம்
கேது - வைடூர்யம்
நமக்குத் தேவையான நவமணிகளை எல்லா நாளும் வாங்கிடக் கூடாது. அதற்கென சில நாட்களை வரையறுத்திருக்கின்றனர். அதன்படி....
ஞாயிற்றுக் கிழமைகளில் மாணிக்கமும், கோமேதகமும், திங்கட் கிழமைகளில் முத்தும், வைடூரியமும், செவ்வாய்க் கிழமைகளில் பவளமும், புதன்கிழமைகளில் மரகதமும், வியாழக் கிழமைகளில் புஷ்பராகமும், வெள்ளிக் கிழமைகளில் வைரமும், சனிக் கிழமைகளில் நீலம் வாங்குவதும், அணிவதும் சிறப்பு.
தரம் அறிந்து, நாள் பார்த்து வாங்கிய நவமணிகற்களை அப்படியே ஆபரணத்தில் பதித்து அணிவது தவறு. எப்படி மூலிகளைகளும், பாஷாணங்களும் மருந்து செய்வதற்கு முன்னர் சுத்தி செய்யப் படுகின்றனவோ அதே போல இந்த கற்களும் சுத்தி செய்தல் அவசியம். இதனை சித்தர்கள் ”தோஷ நிவர்த்தி” என்பர்.
இன்றைக்கு கற்கள் விற்கும் வியாபரிகள் பலருக்கும் இதன் அவசியம் புரிவதில்லை.லாபத்தினை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர். இதன் பொருட்டே அணிந்தவர் பலரும் கற்கள் தங்களுக்கு பலன் தருவதில்லை என புலம்பிடும் நிலைக்கு ஆளாகின்றனர்.
நவமணிகளின் ”தோஷ நிவர்த்தி” செய்யும் விவரங்களை பகிர வேண்டும் என்றே இந்த தொடரினை ஆரம்பித்தேன், ஆனால் இந்த விவரங்களை குருமுகமாய் பெறுவதே சரியான முறை என்பதால் அதனை இங்கே விளக்கிடாமல் போவதற்காக என்னை பொறுத்தருளுமாறு வேண்டுகிறேன்.
தேர்ந்த சோதிட வல்லுனர்களினால் பரிந்துரைக்கப் பட்ட தரமான கற்களை... சரியான நாட்களில் வாங்கி, தோஷ நிவர்த்தி செய்து அணிவதன் மூலம் நலமும், வளமும் பெற்றிட வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment