Friday, 5 December 2014

ஸ்ரீ மாசாணி அம்மன் வழிபாடு பக்தி துதி-மந்திரம்.



ஸ்ரீ மாசாணி அம்மன்
வழிபாடு பக்தி துதி-மந்திரம்.

ஓம் மாசாணியே, பேச்சியே, இசக்கியே, பிரம்மசக்தியே!
ஓம் வானவளே, விண்ணவளே,
விசும்பாளே, ஆகாயத்தாளே!
ஓம் ககனத்தாளே, பால்வெளியாளே,
பரவெளியாளே!
ஓம் பத்திரியாளே, போத்திரியாளே,
புத்திரியாளே, முத்திரியாளே!
ஓம் ஜீவன் முத்திரியாளே,
அருவ சித்திரியாளே,
அருவுருவ சித்திரியாளே!
ஓம் உருவ சித்திரியாளே,
உருவஅருவ சித்திரியாளே,
நாத சித்திரியாளே,
போத சித்திரியாளே!
ஓம் நாடுகாக்கும் கடவுளே,
மாசாணியம்மனே!
அனைவரின் அல்லல்
நீக்கி காத்திடுவாயாக!
வாழ்த்துகிறோம், வணங்குகிறோம்,
கும்பிடுகிறோம், பரவுகிறோம்,
பூஜை செய்கிறோம்,
பக்தர் படையல் ஏற்று பாதுகாப்பாயாக!!!

1 comment:

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer