சிவ ஆகமகுறிப்புகள்!.... சிவாச்சாரியார்
சிவாச்சாரியார்
3.1 ஆலயக்
கிரியை வகைகள்: சிவாலயங்களில் நடைபெறும்
கிரியைகள் மூவகைப் படுத்தப் பட்டுள்ளன:
1. நித்தியக் கிரியைகள் 2. நைமித்திகக் கிரியைகள் 3. காமியக் கிரியைகள். தினந்தோறும்
(குறைந்தது ஒரு காலம், அதிகபக்ஷம்
12 காலம்) நிகழும் பூஜைகள் நித்தியக்
கிரியைகள். ஏதாவது
காரணங் கொண்டு நிகழ்வன நைமித்திகக்
கிரியைகள் (நிமித்தம் என்றால் காரணம்). இவை
நித்தியக் கிரியைகளை அன்னியில், செய்யப்பெறும் விசேஷக் கிரியைகள், அதாவது,
சதுர்த்தி, ஷஷ்டி, சிவராத்திரி, ப்ரதோஷம்,
பௌர்ணமி, நடராஜர் அபிஷேகம், ஆவணி
மூலம், பெரிய கார்த்திகை, மாசி
மகம், ஆருத்ரா, விஷு, ஆடிப்பூரம், அன்னாபிஷேகம்,
ப்ரஹ்மோத்ஸவம், மகாமகம், அர்த்தோதயம், மஹோதயம், கும்பாபிஷேகம் போன்ற நாட்களில், அல்லது
காலங்களில், அல்லது முஹூர்த்தங்களில் விசேஷமாகத்
திட்டமிடப்பட்டுச் செய்யப்பெறும் நிகழ்ச்சிகள். ஒரு குறிப்பிட்ட பேறு
பெற விழைந்து, ஒருவராலோ அல்லது பலர் ஒரு
குழுவாகச் சேர்ந்தோ, செய்யப்படும் கிரியைகள் காமியக் கிரியைகள். (காமிகாகமம்).
திருக்கோவில் பூஜைகள் பெரும்பாலும் பொது
ஜனங்கள் அனைவரது நன்மையயும் வேண்டிப்
பொதுவாகச் செய்யப்படும் நிஷ்காம்யக் கிரியைகளே. ஒரு அன்பரோ அல்லது
குழுவோ தமக்கென்று ஒரு பேற்றினை வேண்டி
பூஜைகள் நிகழ்வித்தாலும், அவை திருக்கோவிலில் நிகழ்ந்தால்,
மஹா ஸங்கல்பமாக, பூஜையின் ஆரம்பத்தில் அனைவருக்கும் பொதுவாக அனைத்து நன்மைகளையும்
வேண்டி, நிஷ்காம்யக் கிரியையாக வழிபாடுகளை நிகழத்துதலே முறை.
3.2 சிவபூஜை
வகைகள்: சிவபூஜை ஆத்மார்த்தம், பரார்த்தம்
என இரு வகைப்படும். இவ்விரு
பூஜைகளுள்,சிவதீøக்ஷ பெற்ற
யாவரும் ஆத்மார்த்த பூஜை செய்யலாம், பரார்த்த
பூஜைகளே திருக்கோவிலில் நிகழ்வன. சிவதீøக்ஷ பெற்ற
ஆதிசைவர்கள் (சிவாச்சாரியார், குருக்கள்), குருமுகமாகப் பயிற்சி பெற்று, ஆசார்யராக
இருக்கத் தகுதி பெற்றபின்னரே பரார்த்த
பூஜை செய்ய உரிமை பெறுவர்.
3.3. சிவாச்சாரியார்:
சிவாலயங்களில் பூஜை செய்யும் அருகதை
உள்ள சிவாச்சாரியார்கள் பதினாறு வயதுக்கு மேற்பட்டவர்களாகவும்,
எழுபது வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று
காமிகாமம் கூறிகின்றது.
3.4 சிவாச்சாரியாருக்கு
விதிக்கப்பட்ட கிரியைகள்: சிவாச்சாரியார் (அல்லது சிவ தீøக்ஷ செய்து கொண்ட
எவரும்) தினமும் செய்ய வேண்டி
விதிக்கப்பட்டுள்ள ஸ்நானம், பூஜை, ஜபம், த்யானம்,
ஹோமம் போன்றவற்றிற்கும், சிவாச்சாரியாருக்கு உருடய நித்தியக் கிரியைகள்
என்றே பெயர். தீøக்ஷ
செய்துகொள்ளுதல் ப்ரதிஷ்டை செய்தல் போன்றவை அவருக்கான
நைமித்திகக் கிரியைகள் எனப்படும்
3.5 சிவ
த்யானம்: நம்முடைய ஹ்ருதய கமலத்திலாவது, துவாதசாந்தத்திலேயாவது
சிவனை நிறுத்தி தியானம் செய்ய வேண்டும்.
நிஷ்களமான சிவனை, குரு உபதேசித்தபடி
த்யானம் செய்து மூல மந்திரத்தால்
(ஓம் ஹாம் சிவாய நம:
அல்லது ஓம் ஹாம் ஹம்
ஹாம் சிவாய நம:) ஜபம்
செய்யவேண்டும். அப்படி நிஷ்களமான சிவனை
த்யானம் செய்யும் சாமர்த்தியம் இல்லாதவர் சிவபெருமானுடைய விக்ரஹங்களில் தனக்குப் பிடித்தமான ஒருவரை மனதில் நிலைக்கச்
செய்து, த்யானம், ஜபம் செய்தல் வேண்டும்
3.6 சைவக்
கிரியைகளின் அங்கங்கள்: பாவனை, கிரியை, மந்திரம்
என்னும் மூன்றும் சேர்ந்து பரிமளிப்பனவே சைவக் கிரியைகள். பாவனை
என்றால் எண்ணுவது என்று பொருள். கிரியைகள்
என்பதை முத்திரைகளுடன் செய்யப்படும் செய்கைகள். மந்திரங்கள் என்பவை முத்திரைகளுடன் செய்யப்படும்
செய்கைகள். மந்திரங்கள் என்பதை எண்ணங்களுக்கு ஏற்ற
கிரியைகளின் பயன்களைத் தர வல்ல சொற்றொடர்கள்.
ஒவ்வொரு கிரியையும், அதற்கேற்ற பாவனை, மற்றும் மந்திரங்களுடனேதான்
செய்யப்படுதல் வேண்டும். பாவனை இல்லாது மந்திரங்களுடன்
மட்டும் கரியைகளைச் செய்தால் அவை பயனற்றவையாகும். பாவனையும்
இல்லாது, மந்திரங்களையும் மொழியாது, கிரியைகளைச் செய்தால், அச்செய்கைகள் தேவர்களை மகிழ்விக்காது; அசுரர்களையே மகிழ்விக்கும்; அதனால் புண்ணியம் தேய்ந்து
பாவமே வளரும். எனவே, பூஜைகளில்
முழுப்பயனும் மக்களைச் சென்றடைய, பாவனை, கிரியை, மந்திரம்
ஆகிய மூன்றிலுமே லோபம் (குறைகள்) இல்லாமல்
அனுஷ்டானத்தைச் செய்யுமாறு சிவாச்சாரியார்கள் குருமுகமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.
3.7 பக்தியில்லாத
சிவாச்சாரியார்: தீக்ஷிதனாகிய ஆச்சாரியார், பக்தி இல்லாதவனாக பூஜித்தால்,
ராஜா. ராஜ்யம் இவர்களுக்கு கெடுதல்;
அது எவ்விதம் எனில், காட்டில் இருக்கிற
துஷ்ட மிருகமாகிற ஸிம்ஹத்தைக் கண்ட யானையானது எப்படி
பயம் அடையுமோ, அதுபோல் பக்தியில்லாத ஆச்சாரியனைப்
பார்த்த உடனே சிவபெருமான் பயம்
அடைந்து (விலகி விடுவார்) மந்திரம்
இல்லாமல் அர்ச்சனை செய்தால், அந்த ஈச்வரன் பயம்
அடைவார்.
3.8 சிவாச்சாரியாருக்கு
உரிய சில அனுஷ்டான மந்திரங்கள்:
ஆசன மந்திரம் :
1. ஓம்
ஹாம் ஆத்ம தத்வாய ஸ்வதா
2. ஓம்
ஹீம் வித்யா தத்வாய ஸ்வதா
3. ஓம்
ஹூம் ஸிவ தத்வாய ஸ்வதா
பஞ்சகலா
மந்திரம் :
1. ஓம்
ஹ்லாம் நிவ்ர்த்தி கலாயை நம:
2. ஓம்
ஹ்லீம் ப்ரதிஷ்டா கலாயை நம:
3. ஓம்
ஹ்ரூம் வித்யா-கலாயை நம:
4. ஓம்
ஹ்யைம் ஸாந்தி கலாயை நம:
5. ஓம்
ஹ: ஸாந்த்யாதீத கலாயை நம:
ஸம்ஹிதா
மந்திரம் :
1. பஞ்ச
ப்ரஹ்ம மந்திரங்களும்
2. ஷடங்க
மந்திரங்களும் ஒன்று சேர்ந்தது.
பஞ்ச ப்ரஹ்ம மந்திரம் :
1. ஈசானம் : ஓம்
ஹோம் ஈஸாந மூர்த்தயே நம:
2. தத்புருஷம்:
: ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய
நம:
3. அகோரம்
: ஓம் ஹும் அகோர ஹ்ருதயாய
நம:
4. வாமதேவம்
: ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய
நம:
5. ஸத்யோஜாதம்:
ஓம்ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:
ஷடங்க மந்திரங்கள் :
1. ஹ்ருதயம்
: ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
2. சிரஸ்
: ஓம் ஹீம் ஸிரஸே நம:
3. சிகை
: ஓம் ஹூம் ஸிகாயை நம:
4. கவசம்
: ஓம் ஹைம் கவசாய நம:
5. நேத்ரம்
: ஓம் ஹெளம் நேத்ரேப்யோ நம:
6. அஸ்த்ரம்
: ஓம் ஹ: அஸ்த்ராய நம:
மூல மந்திரங்கள் :
1. கணபதி
: ஓம் கம் கணபதயே நம:
2. குரு
: ஓம் கும் குருப்யோ நம:
3. சிவன்
: ஓம்
4. தேவீ
: ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
5. கந்தன்
: ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:
6. ஸூர்யன் : ஓம்
ஹ்ராம் ஹ்ரீம் ஸ: ஸிவஸூர்யாயை
நம:
காயத்ரீ
:
1. அஸ்த்ர
காயத்ரீ :
ஓம் ஸிவாஸ்த்ராய வித்மஹே காலாநலாய தீமஹி
தந்நோ அஸ்த்ர ப்ரசோதயாத்.
2. சிவ
காயத்ரீ :
ஓம் தன் மஹேஸாய வித்மஹே
வாக்விஸுத்தாய தீமஹி
தந்ந: ஸிவ: ப்ரசோதயாத்
ஸப்தகோடி
மஹாமந்திரம் :
1. நம: 2. ஸ்வாஹா
3. ஸ்வதா
4. வஷட்
5. வெளஷட் 6. ஹும் 7. பட்
3.9 கர
ந்யாஸம் :
3.9.1 ஓம்
ஹ: அஸ்த்ராய பட் என்ற சிவ
அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, சாண முத்திரையால்,
இடது, வலது கைகளால், மேலும்
கிழுமாக இடது வலது கைகளைத்
துடைத்துக் கொள்ள வேண்டும். இடது
கையை இரு முறையும், வலது
கையை ஒரு முறையும் அவ்வாறு
செய்ய வேண்டும். கரங்களில் உள்ள அசுத்தங்களை எல்லாம்,
சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக
பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே
வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன
முத்திரையாகக் கூட்டி, நெற்றியில் புருவங்களின்
இடை வரை உயர்த்தி, அங்குள்ள
சக்தி அம்ருதத்தால் கைகள் நனைந்து புனிதமானதாகப்
பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.9.2 இரு
கைகளும் சக்தி சிவ வடிவம்
என்றுணர்ந்து, கட்டை விரல் ஒழித்த
எட்டு விரல்களும் எட்டிதழத் தாமரைகளாகப் பாவித்து, உள்ளே மடங்கி உள்ள
விரல் தாமரையின் விதை உருவாகும் பிந்து
(பொகுட்டு) ஸ்தானத்தைத் தொடுவதாகக் கொண்டு, உள்ளங்கைகளில் கண்டு
விரலுக்குக் கீழே, புதன் மேட்டில்,
கட்டை விரலால் தொட்டு, ஓம்
ஹாம் சிவாஸநாய நம: என்று நியஸித்து,
சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். ஓம்
ஹாம் ஹம் ஹாம் சிவ
மூர்த்தயே நம: என்று நியாஸித்து,
சிவாஸனத்தில் சிவமூத்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.9.3 பிறகு
ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே
நம: என்று உச்சரித்துக் கொண்டே,
ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களைத் தொடாமல்
விலகி இருந்து, அதன் நுனிகள் கட்டைவிரல்
நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (உஷ்ணீக முத்திரை) நியாஸம்
செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத்
புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக்
கொண்டே, ஆள்காட்டி விரல்கள் நடு விரல்களோடு சேர்ந்து
இருக்கையில், அதன் நுனிகள் கட்டைவிரல்
நுனிகளைக் தொட்டுக் கொண்டிருக்குமாறு (சின் முத்திரை (அ)
சின்மய முத்திரை) நியாஸம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, ஓம் ஹூம் அகோர
ஹ்ருதயாய நம; என்று உச்சரித்துக்
கொண்டே, நடு விரல் நுனிகள்
கட்டைவிரல் நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு
(யோக முத்திரை (அ) மோக முத்திரை)
நியாஸம் செய்ய வேண்டும். பிறகு,
ஓம் ஹிம் வாம தேவ
குஹ்யாய நம: என்று உச்சரித்துக்
கொண்டிருக்குமாறு (திவ்ய முத்திரை) நியாஸம்
செய்ய வேண்டும். இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத
மூர்த்தயே நம: என்று உச்சரித்துக்
கொண்ட, சுண்டு விரல் நுனிகள் கட்டைவிரல்
நுனிகளை தொட்டுக் கொண்டிருக்குமாறு (ஆக்ர முத்திரை) நியாஸம்
செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இந்த
பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களைக் கூறி
நியாஸித்ததன் மூலம் தன் கரங்களின்
விரல் நுனிகளில் எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.9.4 பிறகு
உள்ளங்கைகளிலே, பெரு விரல்களால் தொட்டு
(அதிஷ்டான முத்திரை) ஓம் ஹாம் ஹெளம்
வித்யா தேஹாய நம: என்று
நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேகம் கற்பிக்க
வேண்டும். ஆள்காட்டி விரல், நடு விரல்,
மோதிர விரல் என்ற மூன்று
விரல்களால் உள்ளங் கைகளைத் தொட்டு
(கடா முத்திரை), பின் கூப்பி, ஓம்
ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று நியஸித்து,
ஐயனின் த்ரிநேத்திரஙகளை த்யானிக்க வேண்டும். ஓம் ஹாம் ஹெளம்
சிவாய நம: என்ற மூல
மந்திரத்தை உச்சரித்தவாறே,சகல ஹஸ்த வ்யாப்த
சக்தியினாலே, கைகளுக்குள்ளே, பெரு விரல்களால் நியஸித்து
சிவனை ஆவாஹனம் செய்ய வேண்டும்.
3.9.5 பின்னர்,
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம;
என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தான்தில்
ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து,
ஓம் சீரஸே ஸ்வாஹா என்று
உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்)
தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
பிறகு ஓம் சிகாயை வெளஷட்
என்று உச்சரித்து, யோக முத்திரையால், (குடுமி)
சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய
வெளஷட் என்று உச்சரித்து, கவச
முத்திரையால், உடலில் ந்யாஸம் செய்ய
வேண்டும். பின்னர், ஓம் ஹ: அஸ்த்ராய
பட் என்று உச்சரித்து, அஸ்த்ர
முத்திரையால், கைகளில் ந்யாஸம் செய்ய
வேண்டும். இந்த ந்யாஸத்தின் மூலமாக,
கரங்களில், எழுந்தருளியுள்ள சிவபிரானுக்கு உரிய உரு உண்டானதாகக்
கொண்டு த்யானிக்க வேண்டும்.
3.9.6 பின்னர்,
அவகுண்டனம் செய்ய வேண்டும். அவகுண்டனம்
செய்வது, சிவ-சக்தி எழுந்தருளியுள்ள
தலத்தைச் சுற்றி மூன்று மதில்களும்,
மூன்று அகழிகளும் உண்டாவதாக எண்ணி அவகுண்டன முத்திரையால்
ஓம் ஹைம் கவசாய வெளஷட்
என்ற கவச மந்திரத்தை உச்சரித்தவாறே
அந்த ஸ்தானத்தைச் சூழ வளைத்து மும்
முறை சுற்றுவதாகும்.
3.9.7 நிறைவாக,
ஓம் ஹாம் ஹெளம் சிவாய
வெளஷட் என்று உச்சரித்தவாறே பரமீகரணம்
செய்தல் வேண்டும். பரமீகரணம் என்பது, கைகளைக் கூப்பி
வந்தனி என்றும் பெயருள்ள நமஸ்கார
முத்திரை செய்து, கரங்களைத் தலைக்கு
மேல் உயர்த்தி வணங்கி, பின் இதயத்திற்கு
எதிரே கொண்டு வந்து முடிப்பது.
3.9.8 இதுவே
சிவாச்சாரியார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கரநியாஸம் செய்யும் முறையாகும்.
3.10 அங்க
ந்யாஸம் :
3.10.1 கர
ந்யாஸம் செய்து கொண்ட பின்னரே
அங்க ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.2. ஓம்
ஹ: அஸ்த்ராய ஹூம்பட் என்ற சிவ
அஸ்திர மந்திரத்தை உச்சரித்துக் கொண்ட, சாண முத்திரை
கொண்ட கைகளால், பாதம் முதல் சிரஸ்வரை
துடைத்துக் கொள்ள வேண்டும். உடலில்
உள்ள அசுத்தங்களை எல்லாம், சிவாஸ்திரத்தால் உண்டான அக்நியால் எரித்ததாக
பாவனை செய்துகொள்ள வேண்டும். பின்னர், ஓம் ஹெளம் சக்தயே
வெளஷட் என்று கைகளை ப்ரஸன்ன
முத்திரையாக கூட்டி, நெற்றியில் புருவங்களின்
இடை வரை உயர்த்தி, அங்குள்ள
சக்தி அம்ருதத்தால் உடல் முழுதும் நனைந்து
புனிதமானதாகப் பாவித்துக் கொள்ள வேண்டும்.
3.10.3 திவ்ய
முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம்
சிவாஸநாய நம: என்று நியஸித்து,
சிவனுக்கு மந்திராஸனம் அளிக்க வேண்டும். மீண்டும்
திவ்ய முத்திரையால் இதயத்தைத் தொட்டு, ஓம் ஹாம்
ஹம் ஹாம் சிவ மூர்த்தயே
நம: என்று நியாஸித்து, சிவாஸனத்தில்
சிவமூர்த்தியை எழுந்தருளச் செய்ய வேண்டும்.
3.10.4 பிறகு,
ஓம் ஹோம் ஈசான மூர்த்தயே
நம: என்று உச்சரித்துக் கொண்டே,
உஷ்ணீக முத்திரையால் தலை உச்சியில் நியாஸம்
செய்ய வேண்டும். அடுத்து, ஓம் ஹேம் தத்
புருஷ வக்த்ராய நம: என்று உச்சரித்துக்
கொண்டே சின் முத்திரையால் நெற்றியில்
நியாஸம் செய்ய வேண்டும். தொடர்ந்து
ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய
நம: என்று உச்சரித்துக் கொண்டே,
யோக முத்திரையால் மார்பில் நியாஸம் செய்ய வேண்டும்.
பிறகு, ஓம் ஹிம் வாம
தேவ குஹ்யாய நம: என்று
உச்சரித்துக் கொண்டே, திவ்ய முத்திரையால்
நாபியில் நியாஸம் செய்ய வேண்டும்.
இறுதியாக, ஓம் ஹம் ஸத்யோஜாத
மூர்த்தயே நம: என்று உச்சரித்துக்
கொண்டே, ஆக்ர முத்திரையால் வலது-இடது முழங்கால்களில் நியாஸம்
செய்ய வேண்டும். சிவபெருமானுக்குரிய ஐந்து முகங்களையும் இம்மந்திரங்களைக்
கூறி நியாஸித்ததன் மூலம் தன் அங்கங்களில்
எழுந்தருளியதாகப் பாவித்தல் வேண்டும்.
3.10.5 பிறகு
திவ்ய முத்திரையால் ஓம் ஹாம் ஹெளம்
வித்யா தேஹாய நம: என்று
மார்பில் நியாஸித்து, சிவனுக்கு வித்யா தேஹம் கற்பிக்க
வேண்டும். ஆக்ர கண்ட முத்திரை
என்று கூறப்படும் நேத்ர முத்திரையால் ஓம்
ஹெளம் நேத்ரேப்யோ நம: என்று கண்களில்
நியஸித்து, ஐயனின் த்ரிநேத்திரங்களை த்யானிக்க
வேண்டும்.
3.10.6. பிறகு,
ஓம் ஹாம் ஹெளம் சிவாய
நம: என்ற மூல மந்திரத்தை
உச்சரித்தவாறே, ஹ்ருதயஸ்தானத்திலே நியாஸித்து சிவனை ஆவாஹனம் செய்ய
வேண்டும்.
3.10.7 பின்னர்,
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
என்று உச்சரித்து, ஆக்ர முத்திரையால், இதயஸ்தானத்தில்
ந்யாஸம் செய்ய வேண்டும். அடுத்து,
ஓம் சிரஸே ஸ்வாஹா என்று
உச்சரித்து, திவ்ய முத்திரையால், (முன்)
தலையில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
பிறகு, ஓம் சிகாயை வெளஷட்
என்று உச்சரித்து, யோக முத்திரையால் (குடுமி)
சிகையில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
தொடர்ந்து, ஓம் ஹைம் கவசாய
வெளஷட் என்று உச்சரித்து, கவச
முத்திரையால், கண்டத்திலிருந்து நடு மார்பு வரை
உடலில் ந்யாஸம் செய்ய வேண்டும்.
3.10.8 உஷ:
முத்திரை எனப்படும் மோதிர விரல்களால் அங்கங்களைத்
தொடும் முறையினால், ஓம் ஹ: அஸ்த்ராய
பட் என்ற அஸ்த்ர மந்திரத்தை
உச்சரித்து, இரு கைகளிலும் ந்யாஸம்
செய்து சிவபிரானுக்கு அஸ்திரங்கள் அறிவத்ததாகப் பாவிக்க வேண்டும்.
3.10.9 தாளத்ரயம்:
கோவிடாண முத்திரை என்று அழைக்கப்பெறும் கட்க
முத்திரையால், ஓம் ஹூம் ஹ:
அஸ்த்ராய பட் என்ற ஹூம்-படந்த (ஹூம்-ஐ
முதலிலும், பட்- ஐ ஈறாகவும்
கொண்டுள்ள) அஸ்திர மந்திரத்தை உச்சரித்தவாறே
தாளத்ரயம் செய்ய வேண்டும். தாளத்ரயம்
என்பது இடது உள்ளங்கையில் வலது
கை கட்க முத்திரை விரல்களால்
மும்முறை தட்டுதல், சிவசக்தி ப்ரகாசங்களுக்குக் கேடு செய்ய வரும்
அசுரர் முதலியோரை விரட்டு பொருட்டுச் செய்வதே
தாளத்ரயம்.
3.10.10. திக்பந்தனம்
: விரல்களை மடக்கி, ஆட்காட்டி விரலால்
பெருவிரல் மத்தியில் விரல் துடிக்கத் தெறிக்கும்
சோடிகா முத்திரையால் ஓம் ஹ: அஸ்த்ராய
பட் என்ற அஸ்திர மந்திரத்தை
உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ மேலே எண்மருங்கிலும்
திக்பந்தனம் செய்து அக்நி ப்ரகாசம்
உண்டாக்கி அக்நி தேவரைக் காவல்
வைப்பதாகப் பாவிக்க வேண்டும்.
3.10.11 அவகுண்டனம்
: ந்யாஸ முத்திரையால் ஓம் ஹைம் கவசாய
வெளஷட் என்ற கவச மந்திரத்தை
உச்சரித்தவாறே சிரஸ்ஸைச் சூழ கீழ்நோக்கி மேலே
அவகுண்டனம் செய்து மூன்று மதில்களும்
அகழ்களும் அமைப்பதாகக் கொள்ளவேண்டும்.
3.10.12 பரமீகரணம்
: நிறைவாக, ஓம ஹாம் ஹெளம்
சிவாய வெளஷட் என்று உச்சரித்தவாறே
கைவிரல்கள் சாதாரணமாக நீண்டிருப்பதான மஹா முத்திரையால் பாதம்
முதல் சிகை வரை தடவ
வேண்டும். பாதம் முதல் கேசம்
வரை துடைக்கும் இந்த கிரியைக்கு பரமீகரணம்
என்று பெயர்.
3.10.13 இந்த
ந்யாஸத்தின் மூலமாக, சிவபெருமானை மந்திராஸனத்தில்
எழுந்தருளச் செய்து, அவயவங்களைப் பாவித்து,
ப்ரகாசமும், அக்நி கோஷ்டமும், அகழும்
உண்டானதாகப் பாவித்து, பரமாமிர்தாபிஷேகம் செய்து, பின் தான்
அவருடன் இரண்டறக் கலந்ததாக (ஏக பாவம் ஆனதாக)
பாவித்தல் வேண்டும்.
3.10.14. இதுவே
சிவாச்சாரியார்க்கு விதிக்கப்பட்டுள்ள அங்க ந்யாஸம் செய்யும்
முறையாகும்
3.11. ஆத்மபூஜா
த்யாநம்: நாதம் லிங்கம் என்றும்,
அதுவே ஸ்ரேஷ்டமான சிவம் என்றும், பிந்து
பீடம் என்றும், அதுவே சக்தியாகிய ஆதார
ஆஸநம் (அல்லது ஆவுடையார்) என்றும்,
ஆதேயமாகிய சிவம் பாணமென்றும் சொல்லப்படுகின்றது.
சிவம் அன்னியில் சக்தி இல்லை; சக்தி
அன்னியில் சிவம் இல்லை; இவை,
புஷ்பத்தில் வாஸனை போலும், எள்ளில்
என்னை போலும் அபேதமாக இருப்பதாக
அறியவும். எனவே, (மாநஸீகமாக) ஸிம்ஹாஸநம்
செய்து, அதிலே சிவாஸநம் செய்து,
சாஸ்ரோக்தமான க்ரியைகளினாலே தேவதேவேச்வரனை சிவாச்சாரியார் பூஜை பண்ணவேண்டியது.
3.12 சகளீகரணம்:
கர ந்யாஸமும், அங்க ந்யாஸமும், சேர்ந்து
செய்வதற்கு சகளீகரணம் என்று பெயர்.
3.13. விசேஷ
அர்க்யம்:
3.13.1 சகளீகரணம்
செய்த பிறகு, த்ரவ்ய சுத்தி
செய்வதற்கும், மற்றபடி விதித்துள்ள விசேஷ
நிகழச்சிகளுக்கும் சிவாச்சாரியார் (பஞ்ச பாத்திரத்தில்) புனித
நீர் தயாரித்துக் கொள்வதே விசேஷார்க்யம்.
3.13.2 பொன்,
தாமிரம், வெள்ளி, பஞ்சலோகம், வெண்கலம்,
பித்தளை (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், இரும்பு ஆகியவற்றைத்
தவிர்க்க வேண்டும்) இவற்றுள் ஏதாவதொன்றால் செய்யப்பட்டுள்ள பஞ்சபாத்ரம்-உத்தரிணி அல்லது கெண்டி-கமண்டலம்
போன்ற பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி எடுத்து வைத்துக் கொண்டு,
அஸ்த்ர மந்திரத்தைக் கூறி அவற்றை மந்த்ர
பூர்வகமாக மீண்டும் அலம்ப வேண்டும்.
3.13.3 நீரீக்ஷணம்:
நிரீக்ஷணம் என்றால் பார்த்தல் என்று
பொருள்படும். ஓம் ஹாம் சிவாய
நம: என்று மூல மந்திரம்
உச்சரித்து, நீரீக்ஷண முத்திரையால், பாத்திரத்தில் நிரப்பப்படும் சுத்தமான நீரைப் பார்க்க வேண்டும்.
அப்போது, அந்த நீரிலுள்ள குற்றங்களை
ஸூர்யனாகிய வலக்கண்ணால் காய வைத்து, அக்நியாகிய
நெற்றிக் கண்ணால் தகித்தெறிந்து விட்டு,
சந்திரனாகிய இடது கண்ணில் ஊறும்
அமுதத்தை அதனோடு கலப்பதாகப் பாவிப்பதே
நிரீக்ஷணம் செய்தல் எனப்படும்.
3.13.4 ப்ரோக்ஷணம்
: பிந்து ஸ்தானமாகிற புருவ மத்தியிலிருந்து பெறுகின்ற
அம்ருத தாரா மயமாக சுத்த
ஜலத்தை பாவித்துக் கொண்டு, ஹ்ருதய மந்திரத்தைக்
கூறி, அதன்மூலமாக அந்த அம்ருத தாரா
பாத்திரத்தினுள் சென்று நிரம்புவதாகப் பாவிக்கும்
கிரியைக்கு ப்ரோக்ஷணம் என்று பெயர் கூறுவர்.
3.13.5 பிறகு,
அந்த நீரிலே சந்தனம், புஷ்பம்,
அருகு, அக்ஷதை, ஆகியவற்றை இட்டு
அலங்கரிக்க வேண்டும், தொடர்ந்து, ஆசமன, பஞ்ச ப்ரஹ்ம,
வித்யாதேஹ, நேத்ர, மூல, ஹ்ருதய
மந்திரங்களால் பூஜை செய் வேண்டும்.
ஸம்ஹிதா மந்திரத்தால் (பஞ்ச ப்ரஹ்ம + ஷடங்க
மந்திரங்கள்) அபிமந்திரிக்க வேண்டும்.
3.13.6 தாடனம்:
அஸ்திர மந்திரத்தால் அர்க்ய நீரை ரக்ஷõ
பந்தனம் செய்வதற்குத் தாடனம் என்று பெயர்.
தூயதான நீரில் வியாபித்திருக்கும் சிவசக்தியரின்
அருளை ப்ரகாசிக்கச் செய்யும் பொருட்டு, அஸ்த்ர மந்திரம் கூறி
ஒரு முறை தட்டுதலே தாடனம்.
3.13.7 அப்யுக்ஷணம்
: கவிழ்ந்த பதாகை முத்திரையால் அந்த
நீரை சூடி, கவச மந்திரத்தை
உச்சரித்து, அதிலுள்ள ப்ரகாசம் நீங்காது இருக்குமாறு செய்வதாக பாவித்தலே அப்யுதக்ஷணம்.
3.13.8 அடுத்து,
அர்க்ய நீரில் நிரம்பியுள்ள சிவ-சக்தி ப்ரகாசத்திற்கு ஊறு
செய்ய வரும் துர்தேவதைகளை விரட்ட
தாளத்ரயம் சாய்ய வேண்டும்.
3.13.9 தொடர்ந்து,
கவச மந்திரத்தால் திக்பந்தனுமும், கவச மந்திரத்தால் அவகுண்டனமும்
செய்தல் வேண்டும்.
3.13.10 நிறைவாக,
வெளஷடந்த மூல மந்திரத்தால் (ஓம்
ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தாய
வெளஷட்) தேனு முத்திரை கொடுத்து,
சிறப்பாக அர்க்ய பாத்தி நீரைப்
புனிதமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
3.13.11. மேற்சொன்ன
கிரியையே விசேஷார்க்யம். இந்நிகழ்ச்சியின் மூலம் அர்க்ய நீரில்
சிவசக்தி ப்ரகாசம் நிறைகின்றது.
3.14 சாமான்யார்க்யம்
: சகளீகரணம் செய்த பிறகு, இரும்பு
சம்பந்தப்படாத பாத்திரத்தில் வெளஷடந்த ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்தவாறு
சுத்த ஜலத்தை நிரப்பி, அதில்
ஏழு தடவை ப்ரணவ மந்திரத்தால்
அபிமந்திரித்து, திக்பந்தனம், அவகுண்டனம் செய்ய வேண்டும். பிறகு,தேனு முத்திரை கொடுத்து
செய்து கொள்ளும் தீர்த்தத்திற்கு சாமான்யார்க்யம் என்று பெயர்
3.15 ஐவகை
சுத்தி: பூஜை செய்யும் ஆச்சாரியார்,
பூஜை செய்யும் பொருட்டு, தூய்மை செய்து கொள்ளும்
கிரியைகளுக்கு பஞ்ச சுத்தி என்று
பெயர். அவையாவன (1) ஆத்ம சுத்தி (2) ஸ்தான
சுத்தி (3) த்ரவ்ய சுத்தி (4) மந்த்ர
சுத்தி (5) லிங்க சுத்தி.
3.16 ஆத்ம
சுத்தி: சிவாச்சாரியார், தனக்குள் இறைவனை எழுந்தருளச் செய்வதே
ஆத்ம சுத்தி. அதற்காக அவர்
செய்யும் அனைத்துக் கிரியைகளும், அவரது உள்ளத்தளவிலே செய்யப்படுகின்றன;
அதாவது, பாவனையாக செய்யப்படுகின்றன. அச்செயல்களாவன: 1. சரீரத்தில் உள்ள மலம், மாயை,
கர்மா சம்பந்தமான புற அழுக்குகளை நீக்குதல்
2. பஞ்ச பூத தன்மாத்திரைகளால் ஏற்படும்
அக அழுக்குகளாம் சப்தாதி குணங்களை நிக்குதல்
3. வலக்கால் பெரு விரலிலிருந்து உண்டாகும்
காலாக்னியால் கர்ம சரீரத்தைப் பொசுக்குதல்
4. ப்ரம்மாந்திரத்தில் உள்ள அமிர்தத்தால் உள்ளும்
புறமும் நனைத்துக் கொள்ளுதல் 5. நித்யத்வ, வியாபகத்வ, சுத்த தத்வ, யுக்த,
பரமாகாஸாபிபூத்த, சுத்த சைதன்ய திவ்ய
சரீரமாகத் தன் உடலை பாவித்துக்
கொள்ளுதல் 6. ஹ்ருதய கமலத்தில் ஈச்வரனை
மனோபாவனையால் பூஜித்தல் 7. நாபியில் உள்ள அக்னியில் ஹோமம்
செய்து, ஹ்ருதய கமலத்தில் உள்ள
இறைவனிடத்தில் சமர்ப்பணம் செய்து, உள்பூஜையை நிறைவு
செய்வதாகப் பாவித்தல் 8. பிந்து ஸ்தானத்தில் ஈச்வரனை
த்யானம் செய்து, புற பூஜையின்
பொருட்டு ப்ரார்த்தனை செய்து, அதனைத் தொடங்க
உத்தரவு கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்.
3.17 ஸ்தான
சுத்தி: சிவாச்சாரியார், பூஜை நடைபெறுகிற இடத்தில்
விக்னங்கள் அணுகாமல் காப்பதாக பாவித்துச் செய்யும் கிரியைகளே ஸ்தான சுத்தி எனப்படும்.
அதற்காக அவர் செய்யும் கிரியைகளும்,
பாவனைகளும்: 1. அஸ்த்ர மந்திரத்தால் மூன்று
தடவை தாளம் செய்து, சிட்டிகை
போட்டு, ஸ்தலத்திலுள்ள தடைகளைப் போக்குதல் 2. அஸ்த்ர மந்த்ரத்தால் நான்கு
மூலைகளிலும் அக்னி ப்ரகாசம் செய்தல்
3. கவச மந்த்ரத்தால் வலது ஆள் காட்டி
விரலை மும்முறை சுழற்றி, மூன்று கோட்டைச் சுவர்களும்,
மூன்று அகழிகளும் உண்டாக்குதல் 4. வெளஷடந்த சக்தி மந்த்ரத்தைச் சொல்லி,
தேனு முத்திரையை மேலும் கீழும் காண்பித்தி
ரக்ஷõ பந்தனம் செய்தல்.
3.18 த்ரவ்ய
சுத்தி: சிவாச்சாரியார், விசேஷ அர்க்யத்தால் புனித
நீர் தயாரித்துக் கொண்டு, பிறகு அந்த
நீரினால், தன்னையும், சுற்றி உள்ள மற்ற
பூஜைக்கான உதவியாளர்களையும்,
பூஜை செய்வதற்காக எடுத்துவைத்துள்ள சாதனங்கள், பொருட்கள் ஆகியவற்றையும் தூய்மை செய்வதாக பாவித்துச்
செய்யும் கிரியைகளே த்ரவ்ய சுத்தி எனப்படும்.
அதற்காக அவர் செய்யும் கிரியைகளும்,
பாவனைகளும் 1. விசேஷ அர்க்யம் தயாரித்தல்
2. அஸ்திர மந்திரம் சொல்லித் தன் தலை மீது
ப்ரோக்ஷணம் செய்து கொள்ளுதல் 3. பூஜா
திரவியங்களை (அ) அஸ்திர மந்திரம்
கூறி ப்ரோக்ஷணம் செய்தல் (ஆ) கவச மந்திரம்
கூறி துடைத்து சுத்தம் செய்தல் (இ)
ஹ்ருதய மந்திரம் சொல்லி அபிமந்திரித்தல் (ஈ)
கவச மந்திரம் கூறி அவகுண்டனம் செய்தல்
(உ தேனு முத்திரை கொடுத்து
அனைத்தையும் அம்ருத மயாக்குதல் 4. அபிஷேகத்திற்கென
வைத்திருக்கும் ஜலத்தின் மீது விசேஷார்க்ய ஜலத்திலிருந்து
கொஞ்சம் புஷ்பத்தினால் எடுத்து விட்ட பிறகு,
தேனு முத்திரை கொடுத்து அம்ருத மயமாக்குதல்.
3.19 மந்திர
சுத்தி: சிவாச்சாரியார், தன்னுள் இறைவனை நிலைநிறுத்தித்
தன்னை மந்திரங்கள் கூறுவதற்குத் தகுதி உடையவராகச் செய்து
கொள்வதற்கு மேற்கொள்ளும் கிரியைகளே மந்திர சுத்தி எனப்படும்.
இது திரவிய சுத்தி செய்த
பிறகே செய்யப்படும். முதலில் ஓம் ஹாம்
சிவாஸநாய நம: என்று ஆஸனம்
கற்பித்து, தன்னுடைய ஹ்ருதயத்தில் ஓம் ஹாம் சிவ
மூர்த்தயே நச: என்று பூஜை
செய்ய வேண்டும், பின்னர், நெற்றியில் புருவ மத்தியில் சந்தனத்தால்
திலகம் இட்டு, மூல மந்திரத்தால்
சிரஸிலே புஷ்பத்தால் பூஜித்து ஆத்ம பூஜை செய்ய
வேண்டும். அடுத்து சம்ஹிதா மந்திரத்தையும்,
மூல மந்திரத்தையும் (ப்ரணவத்தை முதலிலும், நம: என்ற பதத்தைக்
கடைசியிலும் உடைத்தானதாக) பஞ்ச ப்ரஹ்ம மந்திரங்களை
ஹ்ரஸ்வமாகவும், ஷடங்க மந்திரங்களை தீர்க்கமாகவும்,
மூல மந்திரங்களை ப்லுதமாகவும் உச்சரிக்க வேண்டும். இதுவே மந்திர சுத்தி.
3.20 லிங்க
சுத்தி : முதல் நாள் (அல்லது,
முந்திய காலத்தில்) செய்த பூஜா திரவியங்களை
லிங்கத்தில் மேலிருந்து களைந்து, பின்னர் அபிஷேகம் செய்து,
நிறைவாக துடைத்தெடுத்து அலங்காரத்துக்கு ஆயத்தமாக்குவதே லிங்க சுத்தி எனப்படும்.
இது செய்ய வேண்டிய முறை
: முதலில் சிவ காயத்ரியால் அர்ச்சனை
: பூஜத்துடன் கூடிய ஹ்ருதய ஸ்வாஹந்தமான
மூல மந்திரத்தால், ஸத்யோஜாதம் முதல் ஈசானம் வரையான
ஐந்து சிரஸ்ஸிலும் சாமான்யார்க்யத்தைக் கொண்டு அர்க்யம்; தூப,
தீபங்கள் காட்டுதல்; லிங்கத்தின் மேல் கையை வைத்து
ஸத்யோஜாதாதி பஞ் பரஹ்ம மந்திரங்களை
உச்சரித்தல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி
நிர்மால்யங்களைக் களைந்து, ஈசான பாகத்தில் தயாராக
வைத்துள்ள சுத்தமான பாத்திரத்தில், சண்டிகேச்வரரிடம் சமர்ப்பிப்பதற்காக, ஹ்ருதய மந்திரங்களைக் கூறியவாறே
அந்நிர்மால்யங்களை வைத்தல்; அஸ்திர மந்திரத்தைச் சொல்லி
லிங்கத்தையும் பீடத்தையும் அலம்புதல்; அஸ்திர மந்திரங்களைக் கூறி
சாமான்யர்க்யத்தால் அபிஷேகம்; மூல மந்திரத்தால் ஐந்து
தடவையும், சம்ஹிதா மந்திரம் - வ்யோம
வ்யாபி மந்திரம் எண்பத்து ஒன்றினையும் சொல்லி அபிஷேக திரவியங்கள்,
பஞ்சாமிதாதி திரவியங்களால் அபிஷேகம்: குளிர்ந்த சுத்த நீரினால் ஸஹஸ்ர
தாரா வழி அபிஷேகம்; ஹ்ருதய
மந்திரம் கூறி அர்க்ய ஜலம்,
ஸ்நபன ஜலம் ஆகியவற்றால் அபிஷேகம்;
நிறைவாக வெண்மையானதும், மெல்லியதானதும் சுத்தமானதுமான வஸ்த்ரத்தால் துடைத்து விடுதல். இதுவே லிங்க சுத்தி.
இதன் பிறகே அலங்காரம்
3.21 கலாகர்ஷணம்
: பாத்யாதி உபசாரங்களுக்குப் பிறகு, பஞ்ச ப்ரஹ்ம
மந்த்ரங்கள், ஷடங்க மந்த்ரங்கள், வ்யோமவ்யாபி
மந்த்ரங்கள் ஆகியவற்றை ஜபம் சொய்தவாறே, கிரீம்
முதலாக வரிசையாக அஷ்ட த்ரிசத் கலா
நியாஸம் செய்ய வேண்டும்; அதாவது,
முப்பத்தெட்டு இடங்களில் முப்பத்தெட்டு கலைகளை வைக்க வேண்டும்.
3.22 அபிஷேகத்துக்குப்
பிறகு, லிங்கம் ஆவுடையார் இவைகளை
மெல்லிய, வெண்மையான, சுத்தமான வஸ்த்ரத்தினால் நன்றாகத் துடைத்து, சிவனுடைய சிரஸ்ஸிலே ஹ்ருதய மந்த்ரத்தைக் கூறி
புஷ்பத்தை வைக்க வேண்டும்.
3.23 சிவோகம்பாவனை
செய்யும் சிவாச்சாரியார் தன் வலக்கையில் சந்தனம்
பூசிக்கொண்டு அதைச் சிவஹஸ்தமாகப் பாவிப்பர்;
பின்னர் தன்னையே சிவமாகப் பாவனை
செய்து கொள்வார்; தாம் புறத்தே பூஜிக்க
இருக்கும் மந்திரங்களைக் கூறி, அந்தக் கையினால்
தன் அகத்தையும் பூஜிப்பார்; இவ்வாறாக, காண்பானும் சிவம், காட்சியும் சிவம்,
காட்சிப் பொருளும் சிவம் என்ற முறையில்
மூன்றும் ஒன்றித்த நிலையில் திரிகரண சுத்தியுடன், நிற்பதே
சிவோகம்பாவனை.
3.24 நெற்றியில்
குட்டு: விநாயகருக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்
இரண்டு கைகளினாலும் விரல்களை மூடிக்கொண்டு , முஷ்டி முத்திரையைச் செய்துகொள்ள
வேண்டும். இரண்டு கைகளிலும் நடுவிலுள்ள
மூன்று விரல்களின் நடுப்பாகங்களால் நெற்றியின் இரண்டு பாகத்தையும் நன்றாகக்
குட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு
செய்வதனால், கபோலத்தில் உள்ள அம்ருதமானது, சமஸ்தான
சரீரத்தையும் நன்றாக நனைத்து ஸ்நானம்
செய்விக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தால்
ஆணவம், கர்வம், மலம், மாயைகள்
நீங்கி ஞானம் பிறக்க வழி
கிடைக்கின்றது. இந்த அம்ருத ஸ்நானத்தை
விநாயகர் முன்பு செய்வதால் அவருக்கு
நம்மிது தனிப்ரீதி உண்டாகும்.
3.25 பூஜை
செய்யும் திசை : கிழக்கு அல்லது
மேற்கு முகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள
சுவாமியை, சிவாச்சாரியார் வடக்கு முகமாக நின்று
பூஜிக்க வேண்டும். தெற்கு அல்லது வடக்கு
முகமாக உள்ள ஸ்வாமியை கிழக்கு
முகமாக நின்று பூஜை செய்ய
வேண்டும்
3.26 கட்டை
விரலால் மட்டும் எடுத்து விபூதி
அளித்தால் வியாதி உண்டாகும்; சுட்டு
விரலால் விபூதி அளித்தால் மரணம்
உண்டாகும்; நடு விரலால் விபூதி
அளித்தால் புத்ர சோகம் உண்டாகும்;
கனிஷ்டிகையால் (சுண்டு விரலால்) விபூதி
அளித்தால் தோஷம் உண்டாகும்; ஆதலால்
பெருவிரலும் மோதிரவிரலும் சேர்த்து விபூதி அளிக்க வேண்டும்.
3.27 அனைத்துக்
கிரியைகளின்போதும், விதிக்கப்பட்ட மந்த்ரங்களையும் ச்லோகங்களையும் கூறுவதுடன், அந்தந்த இடத்துக்குரிய முத்திரைகளையும்
தவறாது காட்ட வேண்டும். முத்திரைகள்
கிரியைகளின் அங்கம்; அவை தேவர்களுக்கு
மகிழ்ச்சி அளிப்பன; அசுரர்களை விரட்டுவன.
No comments:
Post a Comment