Saturday, 28 March 2015

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

விநாயகர் வணக்கம்:

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

வரலாறு, மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் கவசம்:

கணபதி துதி,

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு:

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்:

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer