சித்திரா பௌர்ணமியின் சிறப்பு:
மாதம் தோறும் தான் பௌர்ணமி
வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்
கூடி வரும் பௌர்ணமி நாள்
சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இந்த ஆண்டு மே மாதம்
12-ம் தேதி பகல் 12 மணி
தொடங்கி 13-ம் தேதி பகல்
12 மணி வரை பௌர்ணமி திதி
உள்ளதால், இரவு கொண்டுவரும் 12-ம்
தேதியன்று பெரும்பாலும் சித்திரா பௌர்ணமி அனுசரிக்கப்படுகிறது.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன்
என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார்.
இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில்
பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை,
சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு
புண்ணிய நாட்கள்!
அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும்
தானங்கள் செய்வது நன்மை தரும்
என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு
இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை
அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல்
உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர்
தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து
ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய்,
ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம்
செய்யலாம்.
அது என்ன புத்தகம், பேனா?
புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில்
நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும்
பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த
நாளாகவும் இது கருதப்படுவதால் நம்
கணக்கை நல்ல முறையில் அவர்
எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது
என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த
பூஜையும் செய்யப்படுகிறது.
இனி கோவில்களில் சித்திரா பௌர்ணமியை ஒட்டி என்னென்ன சிறப்பு
வழிபாடுகள் நடக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக
அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும்
பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன்
வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும்
சிறப்பாக நடைபெறுகின்றன.
சென்னை
திருவான்மியூரில் பாம்பன் சுவாமிகள் சென்ற
நூற்றாண்டில் வாழ்ந்த முருக பக்தர்.
இவர் வணங்கிவந்த முருகப்பெருமானுக்கு இங்கு கோவில் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியில் இங்கு
சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
பாம்பன்
சுவாமிகள் ராமேசுவரம் அருகிலுள்ள பிறப்பன்வினை என்ற ஊரில் மண்ணில்
சவக்குழி போல் வெட்டி அதில்
முருகனை நினைத்துத் தவமிருந்தார். ஏழாவது நாள் முருகன்
அவருக்குக் காட்சியளித்தார். முப்பத்தாறாவது நாள் மறுபடியும் அவர்முன்
தோன்றி "குழியை விட்டு எழுந்து
வா" என்று கூறி அவருக்கு
உபதேசம் செய்த நாள் சித்திரா
பௌர்ணமி.
அது முதல் ஒவ்வோர் ஆண்டும்
சித்திரா பௌர்ணமியன்று இரவு 2 மணிக்கு முழு
நிலவையே முருகனாகப் பாவித்து "நிலா பூஜை" செய்து
வந்தார். 1929 ல் இவர் சமாதியடைந்த
பின்பும், கலாnக்ஷத்ராவிற்கு அருகிலுள்ள
இந்தக் கோவிலில் இன்றும் இந்த விழா
தொடர்ந்து நடைபெறுகிறது.
முருக பக்தர்கள் 1008 பால்குடமேந்தி வந்து முருகனுக்குப் பாலபிஷேகம்,
தேன், பஞ்சாமிர்தம் எனப் பிற அபிஷேகங்கள்
செய்து பூஜை நடத்தி வழிபடுகின்றனர்.
மாலை 6 மணிக்கு திருவான்மியூர் மருந்தீசுவரன்
கோவிலிலிருந்து புறப்படும் பால்குடங்கள் நான்கு மாட வீதிகள்
வலம் வந்து இந்தக் கோவிலுக்கு
வந்தபின் அபிஷேகங்கள் தொடங்கி, இரவு தீபாராதனை முடிய
சுமார் 11 மணியாகி விடும்.
அதன் பின்பு நிலா பூஜை
தொடங்கி இரவு இரண்டு மணி
வரை நடைபெறும். பக்தர்கள் திரளாக வந்திருந்து இந்த
நிலா பூஜையில் பங்கேற்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
மருந்தீசுவரன்
கோவிலிலும் அன்று மாலை சிறப்பு
அபிஷேகமும், தியாகராஜ சுவாமி புறப்பாடும், மாடவீதிகளில்
ஊர்வலமும் நடைபெறுகிறது.
சென்னை
கந்தகோட்டத்தில் மே 11 முதல் தெப்போற்சவம்
தொடங்கி 15ம் தேதி வரை
தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
இதே போலவே பல அம்மன்
ஆலயங்களிலும் சித்திரா பௌர்ணமி சிறப்பு வழிபாடுகள்
நடைபெறுகின்றன. மயிலை முண்டகக் கண்ணி
அம்மன் கோவிலில் காலை ஏழு மணிக்கு
1008 பால்குடம் சுமந்து பக்தர்கள் மூன்று
வீதி வலம் வந்து பாலை
அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
சென்னை
காளிகாம்பாள் கோவிலில் மாலை 6 மணிக்கு 200 பெண்கள்
பங்குபெறும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
அம்பாள்
சன்னதியில் அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி. இவர்களின் உற்சவ மூர்த்திகள் அலங்காரக்
கொலுவிருக்க அவர்கள் முன்பாகப் பெண்கள்
திருவிளக்கேற்றி பூஜை செய்வார்கள். பின்பு
தீபாராதனை முடிய 9 மணி போலாகிவிடும்.
மதுரையில்
சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத்
தரிசனம் கொடுப்பது ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா.
ஆண்டாண்டுகளாக
நடந்துவரும் இதுபோன்ற திருவிழாக்களும், சிறப்பு ஆராதனைகளும் மக்களின்
ஆன்மீக உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன என்பதில்
ஐயமில்லை.
No comments:
Post a Comment