Thursday, 28 February 2019

80 ஆன்மீக குறிப்புகள் 61-70

80 ஆன்மீக குறிப்புகள்






61. வெற்றிலை நுனியில் லட்சுமியும்,
மத்தியில் சரவஸ்தியும், காம்பில்
மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே
வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு
வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு
வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு
இடது புறம் வருமாறு வைக்க வேண்டும்.
அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி
சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை
போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை
போடும் போது வாழை மரத்திலிருந்து
நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது
பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு
முன் தான தருமம் செய்வதென்றால் செய்து
விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம்
செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும்
ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல
பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து
முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
தலையை விரித்து போட்டு இருந்தால்
லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள்
உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப்
பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும்,
பாதமும் திறந்து நிலையில் இருக்க
வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான
வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்
படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து
இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப்
படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும்.
வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத்
திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம்.
தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்
கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால்
தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப்
பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு,
தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து
கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.


No comments:

Post a Comment

Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer Rainbow Pinwheel Pointer